டார்வினின் பரிணாமவாதக் கோட்பாட்டின் ஒழுக்க,தார்மீக விளைவுகள்

நவீன மேற்கத்திய உலக நோக்கையும், சிந்தனைப் பாங்கையும் உருவாக்குவதில் சார்ல்ஸ் டார்வினின் (கி.பி 1809-1882) பரிணாமவாதக் கோட்பாடும், ஸிக்மன் ப்ரொய்டின் (கி.பி 1856-1939) உளவியல் கோட்பாடும் மிக முக்கிய கட்டத்தை வகிக்கின்றன. புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை முற்றிலும் புறக்கணித்து, புலன்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட சடவாதக் கோட்பாட்டின் அடிப் படையிலேயே, டார்வினதும், ப்ரொய்டினதும் சித்தாந்தங்கள் கட்டியெழுப்பப் பட்டுள்ளன. இந்த இரு கோட்பாடு களும் நவீன மேற்கத்திய சிந்தனையை முற்றிலும் சடவாதத்தின் அடிப்படையில் நெறிப்படுத்தவதில் மிக முக்கிய இடத்தை வகித்தன.

சார்ல்ஸ் டார்வின் ஒரு பிரிட்டிஷ் அறிவியல் ஆய்வாளராவார். 1859ல் அவர் வெளியிட்ட Origin of Species – உயிரினங்களின் தோற்றம் என்ற நூலும், 1871ல் வெளியான Descent of Man – மனிதனின் வருகை என்ற நூலும், அவை வெளியிடப்பட்ட காலப் பிரிவிலேயே மத வட்டாரங்களில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பைபிளின் படைப்புக் கோட்பாட்டுக்கு எதிராக அமைந்தமையே கிறிஸ்தவக் கோயிலினதும், கிறிஸ்தவ மத நம்பிக்கை யாளர்களினதும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் இக் கோட்பாட்டின் ஆழமான பாதிப்பும், அதன் தார்மீக விளைவுகளும் கால ஓட்டத்திலேயே புலப்பட ஆரம்பித்தது. பரிணாமவாதக் கோட்பாடு பூமியின் உயிரினங்களின்; தோற்றத்துடன் தொடர்புடையதாகவே பொதுவாக நோக்கப் படுகின்றது.

ஆனால் உயிரினங்களின் தோற்றத்தை விளக்கும் ஒரு கோட்பாடு என்ற வகையில்கூட இன்று அது அறிவியலா ளர்களால் ஆய்வு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் மிக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பரிணாமவாதக் கோட் பாட்டை ஆய்வுபூர்வமாக விமர்சிக்கும் இந்த விமர்சனக் கருத்துக்கள் பிரபல்ய மடைவதைத் தடுத்து, பரிணாமவாதக் கோட்பாட்டின் நம்பகத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கோடு அக் கோட் பாட்டை ஆதரிப்போர் மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயல்படுவதாக அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பரிணாமவாதக் கோட்பாட்டை மிக ஆய்வு ரீதியாக விமர்சிக்கும் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் E. Steven vOjpa The Origin of Species – a Scientific Criticism, M.R Thomas எழுதிய Flawn in the Evolutionery Theory H.Herbet ntspapl;l Evolution ஆகியன இத்துறையில் குறிப்பிடத்தக்கவையாகும்.

உயிரியல் தொடர்பான துறையில் பூமியில் உயிரினங்களின் தோற்றம் சம்பந்தமான ஒரு கோட்பாடு என்ற வகையில பரிணாமவாதக் கோட்பாடு பற்றியோ அல்லது அது குறித்த விமர்சன ஆய்வுகள் குறித்தோ விளக்குவது இக் கட்டுரையின் நோக்கமாகக் கொள்ளப் படவில்லை. அது ஒரு தனிப்பட்ட ஆய்வாக விளங்குவதுடன் இக்கட்டுரை யாசிரியரின் துறைக்கும் அப்பாற்பட்ட தாகும். இக்கட்டுரையின் நோக்கம் மனிதனின் தார்மீக, ஆத்மீக சிந்தனையைப் பொருத்தளவில் இக் கோட்பாடு வரலாற்றில் ஏற்படுத்திய பாதகமான விளைவுகள் பற்றிய சில அம்சங்களை விளக்குவதாகும்.

‘பரிணாமவாதக் கோட்பாடானது பலரின் மத நம்பிக்கைகளை முற்றிலும் இழக்கச் செய்துள்ளதுடன் மேலும் பலரின் மத நம்பிக்கைகளை ஆட்டங் காணச் செய்துள்ளது. அது ஒழுக்க, தார்மீக அமைப்புக்களையும் சீர்குழைத் துள்ளது.’என கலாநிதி ஒஸ்மான் பாகர் அவர்களால் பதிப்பித்த பரிணாமவாதம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான Critique of Evolutionary Theory என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

அனைத்தும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் காணுகின்றது. எனவே நித்தியமானது, மாற்றத்திற்கு உட்படாதது என ஒன்றும் இல்லை என்ற கோட்பாடு பரிணாமவாதத்தின் மிக முக்கிய அடிப்படையாகும். இந்தவகை யில் சமூகம், சமூக நிறுவனங்கள் மாற்றமடைகின்றன. எனவே மதமும் ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் மாற்றத்திற்கு உட்பட்டது.

சமூக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் மனிதனின் சில உளவியல் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தோன்றிய மதம் என்ற சமூக நிறுவனம் சமூக வளர்ச்சியில் பல முக்கிய மாற்றங் களைக் கண்டதாகச் சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனித நாகரிக வளர்ச்சியில் ஆரம்பத்தில் மனிதன் இயற்கையையும் ஆவிகளையும் தெய்வங்களாகக் கருதி அவற்றை வணங்கியும், பூஜித்தும், அவற்றுக்காகப் பலியிட்டு; இயற்கை தெய்வத்தை திருப்திப் படுத்துவதிலும் வாழ்ந்தான். இது மத உணர்வின் ஆரம்பகால கட்டமாகும்.

இக்கால கட்டத்தில் மனிதன் பல்வேறு தெய்வங்களை விசுவாசித்து வணங்கி வழிப்பட்டான். இவ்வாறு பல தெய்வ வழிபாடே (Polythenism) மதத்தின் ஆரம்பமாகும். கால வளர்ச்சியில் மனித அறிவும், சிந்தனையும் முன்னேற்றமடைந்து மனித நாகரிகம் முதிர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இயற்கையை பல்வேறு வடிவில் வணங்கிய இந்த நிலையிலிருந்து விடுபட்டு இப் பிரபஞ்சத்தை இயக்குவிக்கும் ஒரு சக்தியை மனிதன் விசுவாசித்து வழிபடும் நிலைக்கு- அதாவது ஏக தெய்வ விசுவாசத்தின் கட்டத்திற்கு வளர்ச்சியடைகின்றான். இக் காலகட்டத்திலேயே மதம் ஒரு நிறுவன மாக சமூகத்தில் தோற்றம்பெற்று வளர்ச்சியடைகின்றது. பரிணாமவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் விளக்க முனையும் மதத்தின் தோற்றம் பற்றிய சமூகக் கோட்பாடு இஸ்லாத்தின் போதனைக்கு முற்றிலும் முரணாக அமைகின்றது. மதத்தை தெய்வீக வேத வெளிப்பாட்டின் அடிப்படையில் தோன்றியதாகக் குறிப்பிடும் இஸ்லாம், மனித இனத்தின் தோற்றமே ஏக தெய்வ விசுவாசத்தோடு ஆரம்பித்த தையும் கால ஓட்டத்தில் மனிதன் இந்த விசுவாசத்திலிருந்து பிறழ்ந்து பல தெய்வங்களை வணங்கி, வழிபட ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றது.

பரிணாமவாதக் கோட்பாட்டை மனிதனின் சமூக வாழ்வில் பிரயோகித்த ஜூலியன் ஹக்ஸ்லி ‘பரிணாம ஒழுக்கவியல்’ (Evolutionary Ethics) என்னும் கோட்பாட்டை நிறுவினார். எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான ஒழுக்க மரபு இருத்தல் முடியாது சமூக வளர்ச்சி மாற்றத்தோடு ஒழுக்கப் பெறுமானங்களும் மாற்றமடைகின்றன என்பதே பரிணாம ஒழுக்கவியலின் அடிப்படையாகும். நன்மை, தீமை பற்றிய கோட்பாட்டை ஜூலியன் ஹக்ஸ்லி   பின்வருமாறு விளக்குகின்றார்: ‘சமூக நன்மை, முன்னேற்றம், வளர்ச்சிக்கு துணைபுரிபவை நன்மையானவை எனவும் அவற்றைத் தடுக்கும் அம்சங்கள் தீமையானவை’ எனவும் அவர் குறிப்பிடுகின்றார். நன்மையும் தீமையும் சமூக மாற்றத்தின் அடிப்படை யிலேயே தீர்மானிக்கப்படுகின்றது எனவே நித்தியம் ஒழுக்கப் பெறுமானங்கள் என ஒன்று இல்லை அத்தோடு நன்மை, தீமையைத் தீர்மானிப்பதில் மதத்திற்கோ இறைதூது,இறை வழிகாட்டலுக்கோ எத்தகைய பங்கும் இல்லை. சமூகமே, அதன் வளர்ச்சிப் படிவத்தில் நன்மை, தீமை பற்றி தீர்மானிக்கின்றது. சமூக மாற்றம், வளர்ச்சிக்கு ஏற்ப இது மாற்ற மடைகின்றது. இக்கோட்பாட்டை தோமஸ் ஹக்ஸி (Moral relativism) ஒழுக்கச் சார்பியம் என அழைக்கின்றார். மேற்கத்திய மனிதனின் சிந்தனையிலும், வாழ்விலும், நாகரிகத்தில் ஒழுக்கச் சார்பியம் பற்றிய இக்கோட்பாடு மிகப் பலமான செல்வாக்கைச் செலுத்தி யுள்ளது. மேற்கத்திய சமூகம், பாரம்பர்ய ஒழுக்க மரபுகளைப் புறுக்கணித்து, நவீன ஒழுக்கவியல் என்ற பெயரில் தன்னினச் சேர்க்கை, ஒருபால் திருமணம், கட்டுப் படான ஆண்-பெண் உறவு ஆகியவற்றை ஒழுக்க மரபாக அங்கீகரித்து குடும்பக் கட்டுக்கோப்பைச் சீர்குலைத்து ஒழுக்க வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு பரிணாம ஒழுக்கவியலின் அடிப்படை யில் அமைந்த ஒழுக்கச் சார்பியம் காரணமாக அமைகின்றது. குடும்பக் கட்டுக்கோப்பின் சீர்குலைவு மன அழுத்தம், போதைப்பொருள் பாவனை, பெருகிவரும் தற்கொலைகள் என்பன இக்கோட்பாட்டின் பாரதூரமான பாதக விளைவுகளாகும்.

பரிணாமவாதக் கோட்பாட்டின் தீவிர செல்வாக்கினடியாகத் தோன்றிய ஒரு கோட்பாடே ‘Concept of Progress’ முன்னேற்றம் என்னும் கோபாடாகும். முன்னேற்றம் என்ற பதம் இக்கோட் பாட்டின் ஒரு வரலாற்று விதியாக வடிவமைக் கப்படுகின்றது. இக்கோட் பாடு பின்வருமாறு விளக்கப்படுகின்றது:

‘மனித சமூகம் எவ்வொரு நிலையிலும் பல படித்தரங்களைக் கடந்து முன்னோக்கிக்கொண்டே செல்கின்றது. இந்த முன்னேற்றம் வளர்ச்சிக்கு ஏற்ப சமூக நெறிமுறைகள், ஒழுக்கப் பிரமாணங்கள், பெறுமானங்கள் மாற்றமடைகின் றன. எனவே ஒரு சமூகம் அதன் முன்னேற்ற வளர்ச்சியில் உருவாக்கும் பெறுமானங்கள் நாகரிகத்தின் பிரதிபலிப்பாகும்’ இக் கோட்பாடு முற்றிலும் மேற்கத்திய பரிணாமவாதக் கோட்பாட்டினடியாகத் தோன்றிய                                                                                                   தாகும். இந்த கோட்பாட்டிற்கு ஏற்ப பாரம்பர்யம், பழைமை மரபு பேணல் என்பன கருத்தற்றதாக மாறிவருகின்றது. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப முன்னேற்றத்                                                                                                                                                       திற்கு ஏற்ப பாரம்பர்யங்கள்      மாற்றி யமைக்கப்படல் வேண்டும்.

இக் கோட்பாடு சமூக முன்னேற்றமானது தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணமுடியுமேயன்றி அதில் எத்தகைய பின்னடைவும் ஏற்பட முடியாது என்பதாகும். இது சமூக வளர்ச்சி, மாற்றம் பற்றி இஸ்லாமிய கண்ணோட் டத்திற்கு முரணாக அமைகின்றது. ஏனெனில் இஸ்லாமிய நோக்கில் ஒரு சமூகம் தேக்க நிலையடைந்து அதன் வளர்ச்சியும், முன்னேற்றமும் தடைப் படலாம். ஒரு சமூகத்தைத் தொடர்ந்து வரும் சமூகம், முன்னைய சமூகத்தை விட தாழ்ந்து நிலையிலும் இருக்கலாம் இந்த வரலாற்று நியதியை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. எனவேதான் ‘தஜ்தீத்’, ‘இஜ்திஹாத்’போன்ற கோட்பாடுகளை இஸ்லாம் முன்வைக்கின்றது.

முன்னேற்றம் பற்றிய மேற்கத்திய பார்வையின் அடிப்படையிலேயே பிரான்ஸிஸ் புகயாமா (Francis Fukayama) வரலாற்றின் முடிவு என்ற (End of History) என்ற கோட்பாட்டை முன்வைத்தார். மனித இனத்தின் சமூக, பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியில் இறுதி நிலையே மேற்கத்திய தாராள ஜனநாயகமாகும். (Western Liberal Democracy) அதுவே மனித இனத்தின் இறுதியான ஆட்சி முறையாகும். இந்த ஆட்சி முறையின் தோற்றத்துடன் வரலாறு முற்றுப் பெறுகின்றது. எனவே மனித சமூகத்தின் உச்சநிலை அரசியல் பரிணாமத்தின் இறுதி அடைவான மேற்கத்திய தாராளவாத ஜனநாயகம் உலகம் முழுவதையும் அதன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் நிலையில் வரலாறு முற்றுப் பெறுகிறது. “What me may be witnessing is not just the end of the ‘Cold war’, or the Passing of a particular period of Post- War, History, but the end of History as such: That is, the end point of Mankind’s ideological evolution and the Universalization of Western liberal democracy’ as the final form of Human government.”புகாயாமாவின் இந்தக் கோட்பாட்டின் தர்க்கரீதியான வளர்ச்சியே -Globalizaton- உலகமயமாக்கல் பற்றிய கோட்பாடும், ஜோர்ஜ் புஷ்ஷின் New World Order என அழைக்கப்படும் புத்துலக அமைப்பாகும். ஸாமுவேல் ஹன்டிங்டன் -Clash of Civilization – நாகரிகங்களுக்கு இடையிலான மோதல்|| என்ற கோட்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு நாகரிகங்களுக்கிடையில் மோதல் நிகழ்ந்த இறுதியில் மேற்கத்திய நாகரிகம் முழு உலகையும் தழுவிய உலகயாவிய நாகரிகமாகத் தோற்றப்பாடு பெறும் என முன்வைக்கும் சித்தாந்தமும் பரிணாமவாத சிந்தனையின் சமூக ரீதியான விளைவுகளின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.

பரிணாமவாத கோட்பாட்டினடியாகத் தோன்றிய முன்னேற்றம் பற்றிய கோட்பாட்டை மிக ஆழமாக விமர்சன ரீதியாகப் பகுப்பாய்வு செய்யும் பல நூல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் LORD NORTH BUOURNE எழுதிய ‘Looking Back on Progress’, RENE GUENOM எழுதிய ‘Crisis of The Modern World’, MARTIN LINGS எழுதிய ‘THE ELEVENTH HOUR’ ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கனவாகும்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *