அரபி பாஷாவும் இலங்கை முஸ்லிம்களில் அவரது செல்வாக்கும்

புரட்சிக் காலம் அரபி பாஷாவின் 1883ஆம் ஆண்டுக் கிளர்ச்சியை 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றின் பின்னணியில் நோக்கும்போது அது பற்றிய ஒரு தெளிவை நாம் பெற முடியும். அரபி பாஷாவின் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியை உள்ளடக்கிய 19ஆம் நூற்றாண்டின் பிந்திய அரை நூற்றாண்டுக் காலப் பிரிவானது ஐரோப்பிய வரலாற்றில் மிகப் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்த ஒரு காலப் பிரிவாகும். இக்காலகட்டத்திலேயே 1830, 1848ஆம் ஆண்டு புரட்சிகள் நிகழந்தன. இவற்றின் முற்றுப் பேறே சாட்டிஸ் இயக்கமாக வளர்ச்சியடைந்தது. 1848ஆம் ஆண்டு கார்ல்மாக்ஸின் கம்யூனிஸக் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இலங்யைில் 1848ஆம் ஆண்டு கண்டிக் கலகம் நிகழ்ந்தது. அதற்குப் 10 ஆண்டுகள் பின்னர் நிகழ்ந்த இந்திய சிப்பாய்க கலகம் உலகத்தின் ஒடுக்கப்பட்ட,நசுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் கோடிட்டுக் காட்டியது.
1848ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிகள் இங்கிலாந்தில் புரட்சிகரமான சிந்தனையின் தோற்றத்திற்க வழியமைத்துக் கொடுத்தது. அரசியலில் தாராளவாதமும் பொருளாதாரத்தில் சுதந்தரமான சிந்தனைப் போக்கும் தோன்ற ஆரம்பித்தன. இங்கிலாந்தில் இக்காலப் பிரிவில் தோன்றிய இந்த தாராளவாத சிந்தனைப் போக்கு காரணமாகவே அரபி பாஷா பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நிலையிலும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டோடு கொலை செய்யப்படாமல் தாராளமான முறையில் நடாத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அக்காலப் பிரிவில் ஐரோப்பாவில் தோன்றி வளர்சசியடைந்த இந்த சிந்தனைப் பாங்கு அவருக்குச் சாதகமாக அமைந்தது. எனவே எகிப்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அரபி பாஷாவின் பங்களிப்பை அவரது காலத்தினதும் அதற்கு சற்று முற்பட்ட காலப் பிரிவினதும் ஐரோப்பிய வரலல்றின் நிகழ்வுகளின் பின்னணியில் நோக்கும்போதே நாம் அது பற்றிய உரிய தெளிவைப் பெற முடிகின்றது.
எகிப்து மிகப் பழைய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க ஒரு நாடாகும். நெப்போலியன் எகிப்தைப் படையெடுத்தபோது, அவர் தன் போர் வீரர்களை நோக்கி “நான்கு நூற்றாண்டுகள் உங்களது பாதத்தின் கீழிலிருந்து உங்களை நோக்குகின்றன” எனக் குறிப்பிட்டதில் மிக ஆழமான வரலாற்றுண்மை பொதிந்துள்ளது. எகிப்தை அலெக்சாந்தர் படையெடுத்தது முதல் அது பல வெளிநாட்டு அரசியல் சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அரபி பாஷாவின் காலப் பிரிவில் அந்நாடு பிரிட்டிஷாரின் அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. ஆசிய ஆபிரிக்க நாடுகள் முழுவதும் ஐரோப்பாவின் ஏககிபத்தியவாதத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, முஸ்லிம் உலகானது பிளவுற்றுப் பிரிவுற்றுக் காணப்பட்டு, அவற்றின் எதிர்காலம் மிக இருள் சூழ்ந்திருந்த கால கட்டததில் அரபி பாஷாவின் கிளர்ச்சியானது ஒரு நம்பிக்கை நட்சத்தியரமாகத் தோன்றியது.
சுதந்திரம்
1983ஆம் ஆண்டு நடைபெற்ற அரபி பாஷாவின் கிளர்ச்சியானது அவரது நாட்டை விதேசிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுதலை சே்யயும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகப் பொதுவாக நோக்கப்பட்டாலும், அவரது நோக்கில் சுதந்திரம் என்பது வெறுமனே அரசியல் சுதந்திரமாக மட்டும் அமையவில்லை.
அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்பன உண்மையில் அறிவுச் சுதந்திரம், ஆன்மீகச் சுதந்திரம், ஆகியவற்றுக்கு வழியமைத்துக் கொடுக்கும் துணைச் சாதனங்கள் என்ற கருத்தையே அவர் கொண்டிருந்தார். இஸ்லாமிய நோக்கில் மனிதன் அறிவையும் ஞானத்தையும் பெறும் நோக்கில் அறியாமையின் நிலையிலிருந்து விடுதலை பெறும்படி ஆக்கப்படுகின்றான். சுதந்திரம் பற்றி அரபி பாஷாவின் இந்தப் பரந்த கண்ணோட்டம், ஆழமான நோக்கு காரணமாகவே, அவர் இலங்கையில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த அந்த 18 வருட காலப் பிரிவில் (1883-1901) இலங்கை முஸ்லிம்களை அறியாமை பிற்போக்குத் தன்மை ஆகிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். சுதந்திரம் என்ற கோட்பாட்டை வெறுமனே அரசியல், பொருளாதார நோக்கில் மட்டும் அணுகியவர்கள், எமது உடனிகழ்கால உலகமானது அரசியல், பொருளாதாரச் சதந்திரங்களைப் பெற்ற பின்னர் கூட வறமை, அமைதி நிறைவைக் காண முடியாததை உணரும்போது, ஏதோ மிக அடிப்டையானதொரு சுதந்திரம் இல்லாது வெறுமையாக இருப்பதே இந்நிலைக்குக் காரணம் என்பதை இன்று மானுசீகமாக உணர்கின்றனர்.
ஆனால், இஸ்லாமிய நோக்கில் மனிதன் வெறும் சடவாத சக்திகளின் அடிமையாக வாழும் நோக்கோடு சிருஷ்டிக்கப்பட்டவனன்று. அவனது போராட்டக் களம் சடத்தையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கியது. இம்மையையும் மறுமையையும் பொதிந்தது. எனவேதான் அரபி பாஷா எகிப்தில் அவரது அரசியல் போராட்டம் தோல்வியடைந்தாலும் தனது தாயகத்திற்கு மிகத் தூரத்தே உள்ள இலங்கையில், இந்நாட்டின் முஸ்லிம்களுக்காக கல்வித் துறையில் அவரது சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
மூதாதையர் அரபியர்
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைச் சோனகர்கள், தங்களது மூதாதையர்கள் அரபியர் என்ற உணர்வுடன் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளனர். எனவே, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் படித்த வர்க்கத்தினர் முஸ்லிம் உலகின் அன்றாட நிகழ்வுகளை மிக மிக அக்கறையுடன் அவதானித்து, அவற்றுடன் மிகப் பரிச்சயமாயிருந்தனர். எனவே அவர்கள் எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்ட அரபி பாஷாவின் வருகையை மிக மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருந்தனர். அரபி பாஷாவின் புகழும் கீர்த்தியும் அவர் இலங்கையை வந்தடைய முன்னரே இலங்கையில் பரவிற்று. இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கும் அரபி பாஷாவுக்கும் இடையில் மிக இறுக்கமான ஒரு உறவு இருப்பதாக மானசீகமாக உணர்ந்தனர். இவர் மூலம் அக்கால முஸ்லிம் உலகுடன் ஒரு அத்யந்த உறவையும் பிணைப்பும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அவர்களில் செயல்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் அந்த அன்பினாலும் கௌரவத்தினாலும் ஆர்சிக்கப்பட்ட அரபி பாஷா, தனது அன்பையும் நேசத்தையும் இலங்கை முஸ்லிம்களுக்குப் பிரதி உபகாரமாக வழங்கினார். இலங்கை மு்லிம்கள் பல வழிகளிலும் அவரைப் பின்பற்றலாயினர். அவரைப் பின்பற்றி ‘துருக்கித் தொப்பி’ அணியும் வழக்கத்தை மேற்கொண்டனர். இலங்கை முஸ்லிம் சமூகம் அவர் மூலம் ஒரு கலாசார ஒருமைப்பாட்டைப் பெற்றது.
அரபி பாஷா இலங்கை வந்தடைந்த காலப் பிரிவு, இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மிக முக்கியமான கால கட்டமாக விளங்கியது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இலங்கை ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலப் பிரவிலிருந்து அவர்கள் கல்வித் துறையில் எதிர்நோக்கிய பின்னடைந்த நிலையை நீக்கும் போராட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே அரபி பாஷா இந்த நாட்டை வந்தடைந்தார். இந்தத் துறையிலே அரபி பாஷா மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றினார்.
நவீன கல்வி
நவீன கல்விை முஸ்லிம் சமூகம் பெறுவதற்கான களம் அமைத்துக் கொடுக்கப்பட்ட இப்போராட்டதில் அரபி பாஷாவின் பங்களிப்பு சிறப்பாகச் செயல்பட்டது. கி.பி. 1505 முதல் 1658 வரையிலான காலப் பிரிவில் போர்த்துக்கேயரின் கீழும், 1685 முதல் 1796 வரை ஒல்லாந்தரின் கீழும் இலங்கை முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகினர். போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மத மாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நிறுவிய கல்வி நிலையங்களில் புகட்டப்பட்ட கல்வியை முஸ்லிம்கள் மற்றிலும் புறக்கணித்தனர். எனவே, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அரபி பாஷா இல்கைக்கு நாடு கட்டத்தப்பட்டபோது இலங்கை முஸ்லிமக்ள் கல்வியில் மிகப் பின்தங்கியிருந்தார்கள். 1796-1948க்கும் இடைப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி இவ்விடயத்தில் ஓரளவு தாராளதத் தன்மையுடன் நடந்து கொண்டதால் முஸ்லிம்களை எதிர்நோக்கிய மதமாற்றம் தொடர்பான ஆபத்து ஓரளவு நீங்கிவிட்டதை உணர்ந்த அப்போதைய முஸ்லிம் தலைவர்களான எம்.சீ. சித்திலெப்பை, வாப்பாச்சி மரிக்கார், அப்போது மிக இளவதினராக இருந்த ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் அகியோர் முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திக்கலாயினர். அறபு, இஸ்லாமியக் கல்வியுடன் நவீன கல்வியையும் கற்க வழி செய்ததன் மூலம் சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சியையும், புத்துணர்வினையும் தோற்றுவிக்கும் நோக்கோடு அவர்கள் செயல்பட்டனர். ஆனால், முஸ்லிம் பெற்றோர்களின் போதிய ஒத்துழைப்பின்மை, சமூகத்தின் பழைமைவாதிகளின் குறுகிய சிந்தனைப் போக்கு ஆகியவை காரணமாக சித்திலெப்பையினதும், வாப்பிச்சி மரிக்காரினதும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. அவர்களது இப்பணியின் வெற்றிக்கு அரபி பாஷாவின் வருகை களம் அமைத்துக் கொடுத்தது. நவீன எகிப்தைத் தோற்றுவித்த அம்முன்னோடி, இலங்கை முஸ்லிம்களின் நவீன ஆங்கிலக் கல்வியைப் பெற வழிசெய்யும் இக்கல்விப் பணிக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
அரபி பாஷா இலங்கை வந்தடைந்தபோது கொழும்பு பழைய துறைமுகத்தில் இன்னும் பல முஸ்லிம்களம் சித்திலெப்பையும், வாப்பிச்சி மரிக்காரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். இவர் இலங்கையை வந்தடைந்த காலம் முதல் பல்வேறு இனப் பிரிவுகளைச் சார்ந்த இலங்கை முஸ்லிம்களிடையே ஒருமைப்பாட்டைத் தோற்றுவிக்கும் ஒரு சக்தியாக அரபி பாஷா விளங்கினார். இலங்கை மஸ்லிம்கள் ஆங்கிலக் கல்வியைப் பெற வழியமைத்துக் கொடுக்கும் சித்திலெப்பையின் இடையறாப் போராட்டத்தில் அரபி பாஷா அவருக்கு மிக்க பக்கபலமாக நின்றார். சித்திலெப்பை, வாப்பிச்சி மரிக்கார், அரபி பாஷா ஆகியோரின் கூட்டு முயற்சியிலேயே 1892ம் ஆணடு கொழும்பு ஸாஹிராக் கல்லூரி உருப்பெற்றது. இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1982ஆம் ஆண்டு கொழும்பு மருதானைப் பள்ளி முற்றவெளியில் நடைபெற்ற ஸாஹிரா கல்லூரியின் அங்குராப்பணக் கூட்டத்திற்கு அரபி பாஷா தலைமை தாங்கினார். 1901ஆம் ஆண்டு அவர் இலங்கையை விட்டுச் செல்லும் வரை அவர் ஸாஹிராவை அடிக்கடி தரிசித்து ஆசிரியர்களக்கும் மாணவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்கினார்.
எற்கனவே குறிப்பிடப்பட்டவாறு எகிப்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அரபி பாஷா மேற்கொண்ட கிளர்ச்சி, முஸ்லிம் உலகில் மட்டுமன்றி ஆசிய, ஆபிரிக்க நாடுகள் அனைத்திலும் சுதந்திரத் தீயை மிக வேகமாகப் பரவச் செய்தது. ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நம்பிக்கையையும் உறுதியையும் அது வழங்கியது. ஆசிய ஆபிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தவராக நாம் தயக்கமின்றி அவரைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு நோக்கும்போது அரபி பாஷாவிற்கும், தேசியவாதத்திற்கும் இடையிலான தொடர்பை நாம் உரிய முறையில் விளங்க வேண்டியுள்ளது. தேசியவாதம் பற்றிய கோட்பாடு பெரும்பாலும் மயக்கமானதாகவும், தெளிவற்றும் காணப்படுகிறது. தேசியவாதம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு தனியான வலாறு உண்டு. பொதுவாக மக்களை அடிமைப்படுத்தி, அவமானத்திற்கும் இழிவிற்கும் ஆளாக்கும் விதேசிய ஆட்சிக்கு எதிராக எழுசசி பெறுவதையும், போராடுவதையுமே தேசியவாதம் என்ற பதம் குறிக்கின்றது. இந்த வகையில் வரலாற்று ரீதியாக நோக்கும்போது ஐரோப்பிய வரலாற்றில், ரோம சாம்ராஜ்யத்தின் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் சக்தியாகவும், சுதந்திர எழுச்சியாகவுமே தேசியவாதம் தோற்றமெடுக்கிறது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றத்தோடு ஐரோப்பாவில் இத்தாலியர், பிரான்ஸியர், ஆங்கிலேயர் ஆகியோர் தமது தனித்துவத்தை உணர்ந்து செயல்பட ஆரம்பிக்கின்றனர். 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்தத் தெளிவற்ற மயக்கமான தேசயி உணர்வானது கி.பி. 1795க்கும் 1815க்கும் இடையில் நெப்போலியனுடன் எழுச்சி பெற்ற பிரான்ஸிய ஏகாதிபத்தியவாதம் திணிக்கப்பட்டதன் பின்னர் ஒரு தெளிவையும் பரிமாணத்தையும் பெற்றது. அதன் மூன்றாவது வளர்ச்சிப் படியில் தேசியவாதமானது போல்கன் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின், துருக்கிய ஆதிக்கத்தில் இரந்த விடுதலைக்காப் போராடும் எழுச்சிப் போராட்டமாக மாறியது.
தேசியவாதத்தின் அடுத்த கட்டம், ஆசியி ஆபிரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிரான போராட்ட உணர்வாக வளர்ச்சி பெற்று, தேசியவாதத்தின் வளர்ச்சியில் இந்த நான்காவது வளர்ச்சிப் படிவத்திலேயே அரபி பாஷாவின் போராட்டம் நிகழ்கிறது.
இன்று அணிசேரா நாடுகள் என வர்ணிக்கப்படும் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாகவே அவர் வரலாற்றிலே பிரவேசிக்கிறார். எனவே, ஆசிய ஆபிரிக்க நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாகவே அவர் விளங்குகின்றார். ஆசிய, ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் இப்பிரதேசத்தில் சுதந்திரப் போராட்டத்தைத் தொடக்கி வைத்த மிகப் பஐாய இயக்கமாக இந்திய தேசிய காங்கிரஸ் கருதப்படுகின்றது. இந்திய தேசிய காங்கிரஸ் 1884ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அரபி பாஷாவின் போராட்டம் 1183ஆம் ஆண்டு நிகழ்கின்றது. அரபி பாஷாவின் எபச்சிப் போரின் ஓராண்டுக்குப் பின்னரே இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றத்தை நாம் காண முடிகின்றது.
முஸ்லிம்களின் வரலாற்றில் தோன்றிய அரபி பாஷா போன்ற வீர புருஷர்களை நாம் நினைவுகூர்ந்து அவர்களுக்காக நினைவு விழாக்களைக் கொண்டாடும்போது, இயற்கையிலேயே ஒரு கேள்வி எமது உள்ளத்தில் எழுகின்றது. இத்தகைய விழாக்கள் வீர வணக்கத்தைப் பிரதிபலிக்கவில்லையா? இது எவ்வளவு தூரம் இஸ்லாமியக் கோட்பாட்டுடன் உடன்பாடானதாக உள்ளது என்பதே அந்த வினாவாகும். வீர வணக்கம் என்பது வரலாற்றிலே மிக ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளதை மேற்கத்திய பாரம்பரிய்தில் ஹோமர், ஹெஸியட் போன்றோரும் கீழைத்தய பாரம்பரியத்தில் வான்மீகி, கம்பர் போன்றோரும் தமது காவியங்களை வீரபுருஷர் ஒருவரை மையமாக வைத்தே உருவாக்கியுள்ளனர். ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பின்னர் தோன்றிய மானிடவாதக் கோட்பாட்டின் தோற்றத்தோடு பிரபஞ்சத்தில் இறைவன் பெற்றிருந்த மதிய நிலை மனிதனுக்கு வழங்கப்பட்டதுடன் வீர வணக்கம் அதன் உச்சக் கட்டத்தினை அடைந்தது. மனிதனை தெய்வமாகப் பூஜித்த இந்த வீர வணக்கத்தின் வீழ்ச்சியை அண்மைய சோவியத் ரஷ்யாவின் நிகழ்வுகளில் நாம் அவதானிக்க முடிந்தது. இஸ்லாம் வீர வணக்கத்தை எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை. “அவனைத் தவிர அனைத்தும் அழியக் கூடியவையே” (குர்ஆன் 29:88) என்பது இஸ்லாமியக் கோட்பாடாகும். இஸ்லாத்தின் திருத்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவுமே நோக்கப்படுகிறார்கள். எனவே இஸ்லாமிய பாரம்பரியத்தில் மனிதனுக்கு தெய்வீகத் தன்மை கற்பிக்கும் பண்போ அல்லது வீர வணக்கம் செய்யும் பண்போ தோன்றவில்லை. எனவே எகிப்திய வரலாற்றிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் அரபி பாஷா வகித்த நிலையையும் அவரது மக்தான பங்களிப்பையும் நாம் நினைவுகூரும்போதும் நாம் வீர வணக்கம் செய்யவில்லை. ஆனால், மனித வாழ்வின் மேம்பாட்டிற்கும் ஒரு மகத்தான பங்களிப்புச் செய்த ஒரு மாமனிதரையே நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறோம். இத்தகைய தலைவர்களின் நினைவும், அவர்களது பணிகள் பற்றிய வரலாற்றுண்மையுமே எதிர்காலத்தில் தலைவர்கள் தோன்ற வழிவகுக்கும், கடந்த காலங்களில் வாழ்ந்த எமது தலைவர்களை நாம் நினைவுபடுத்தாவிட்டால், எதிர்காலத்தில் எம்மத்தியில் தலைவர்களை உருவாக்குவதற்கு நாம் தவறிவிடுவோம்” எனக் குறிப்பிட்ட அறிஞர் அஸீஸின் கருத்து இவ்விடத்தில் மிகப் பொருத்தமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *