கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி: ஓர் அறிஞனின் வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்தல் – அப்பான் அப்துல் ஹலீம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுப்புல அடையாளங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்த முடியுமான கலாநிதி ஷுக்ரியின் பங்களிப்பை மதிப்பீடு செய்வதாயின், அவர் எந்தத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார் என்பதையும் எந்த சிந்தனைப் பாரம்பரியத்திலிருந்து தனது அறிவுச் சேகரத்தைப் பெற்றார் என்பதையும் மிகச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அவரது வகிபாகம் பற்றிய கருத்தாடல்களுக்குள் நுழைய…

Read More

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி: வரலாற்றில் ஒளிரும் மகத்தான அறிவாளுமை! – சிராஜ் மஷ்ஹூர்

“இரும்பு, இரும்பைக் கூர்மைப்படுத்துகிறது. அறிஞர், அறிஞரைக் கூர்மைப்படுத்துகிறார்.” -வில்லியம் டிரம்மண்ட் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மரணம் ஏற்படுத்திய வலியை, சமீபத்தில் நிகழ்ந்த வேறெந்த மரணமும் தரவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்காக அழுதது. அந்தளவுக்கு முஸ்லிம் சமூக அரங்கில் மிக ஆழமாக உணரப்பட்ட இழப்பு அது. தென்னிலங்கையில் மாத்தறை நகரில் பிறந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, தமிழ்மொழியில் ஆழ்ந்த…

Read More

எனது பேராசான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி – கலாநிதி ரவூப் ஸெய்ன்

நான்கு தசாப்­தங்­க­ளாக ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றி வந்த கலா­நிதி சுக்ரி அவர்கள் கடந்த செவ்வாய் வபாத்­தா­னார்கள். இழப்பின் வலி தாளாமல் சொற்­க­ளுக்குள் கசியும் கண்­ணீரை துடைத்துக் கொண்டே அவரைப் பற்­றிய சில குறிப்­புக்­களை இங்கு பதிவு செய்­கிறேன். 2016இன் இறுதிக் கூறு­களில் கலா­நிதி அவர்­களை அவ­ரது கல்­கிஸ்ஸை வீட்டில் சந்­தித்து பல்­வேறு உரை­யா­டல்­களில் ஈடு­பட்­டவன்…

Read More

சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய அன்பான மனிதர். பேராசிரியர்.எம்.ஏ.நுஃமான்

  நண்பர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி காலமானார் என்ற துயரச் செய்தியை இன்று காலையில் நண்பர் பேராசிரியர் அனஸ் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நேற்று மாலைதான் நான் அவரைப்பற்றி கலாநிதி நபீலிடம் விசாரித்தேன். அப்போதுதான் அவர் கோமா நிலையில் இருப்பதாக அறிந்தேன். அவர் சுகவீனமாக இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவருடன் பேசவேண்டும் என்று நண்பர்…

Read More

இனிய நண்பர் கலாநிதி சுக்கிரி மறைந்தார்-பேராசிரியர். சி.மௌனகுரு

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை என் ஒரு சாலைமாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த கெழுதகை நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகசிறந்த பேச்சாளன்அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தனதமிழ் மாணவர் மத்தியில் பிரசித்தமானவர்முதலாம் வருடம் முடிந்ததும் விசேட கற்கை நெறியாக எதனத்…

Read More

இமாம் கஸ்ஸாலியின் கல்விச் சிந்தனை

கிரேக்க காலம் முதல் நவீன காலம் வரை பலவகைப்பட்ட கல்விக் கோட்பாடுகள் தோன்றியுள்ளதை கல்விச் சிந்தனையின் வரலாறு பற்றி ஆராயும் எவரும் காணமுடிகின்றது. இத்துறையில் கிரேக்கத் தத்துவஞானி  பிளேட்டோ முதல் நவீன காலப் பிரிவின் பொ்டன்‌ ரஸ்ஸல் வரை  பல கல்வித்தத்துவங்கள், கோட்பாடுகள் தோன்றியுள்ளன. இத்துறையில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகள் மிகப் பாரிய பங்களிப்பைச்…

Read More

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம்

இஸ்லாம் அறிவினதும் இறைதூதினதும் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு மதமாகும். அதன் வரலாறே  ‘இக்ரஃ’ என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும். நாகரிகமும் இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே  தோன்றி வளர்ந்தன. அறிவு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும், அதன் அறிவுக் கோட்பாட்டின் சில இயல்புகளையும் பொதுவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘’மறைவானவற்றின் திறப்புகள்…

Read More

 மாலிக் பின் நபியின் பார்வையில் சமூக மாற்றம்

முஸ்லிம் உலகில் சமூகமாற்றம், சமூக புனர்நிர்மாணம் பற்றிய கருத்துக்கள், சிந்தனைகள், பத்தொன்பதாம் நூற்றாண் டின் இறுதிக் காலப் பிரிவிலும், இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்; பிரிவிலும் பல சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தவாதிகளாலும் முன்வைக்கப் பட்டன. இந்த விடயம் தொடர்பான ஆய்வுகள் இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது. புத்திஜீவிகள், ஆய்வாளார்கள், பொதுவாக அரபு முஸ்லிம் சமூக…

Read More