சுக்ரி பணிவும் அடக்கமும் உடைய அன்பான மனிதர். பேராசிரியர்.எம்.ஏ.நுஃமான்

  நண்பர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி காலமானார் என்ற துயரச் செய்தியை இன்று காலையில் நண்பர் பேராசிரியர் அனஸ் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நேற்று மாலைதான் நான் அவரைப்பற்றி கலாநிதி நபீலிடம் விசாரித்தேன். அப்போதுதான் அவர் கோமா நிலையில் இருப்பதாக அறிந்தேன். அவர் சுகவீனமாக இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவருடன் பேசவேண்டும் என்று நண்பர்…

Read More

இனிய நண்பர் கலாநிதி சுக்கிரி மறைந்தார்-பேராசிரியர். சி.மௌனகுரு

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை என் ஒரு சாலைமாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த கெழுதகை நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகசிறந்த பேச்சாளன்அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தனதமிழ் மாணவர் மத்தியில் பிரசித்தமானவர்முதலாம் வருடம் முடிந்ததும் விசேட கற்கை நெறியாக எதனத்…

Read More

இமாம் கஸ்ஸாலியின் கல்விச் சிந்தனை

கிரேக்க காலம் முதல் நவீன காலம் வரை பலவகைப்பட்ட கல்விக் கோட்பாடுகள் தோன்றியுள்ளதை கல்விச் சிந்தனையின் வரலாறு பற்றி ஆராயும் எவரும் காணமுடிகின்றது. இத்துறையில் கிரேக்கத் தத்துவஞானி  பிளேட்டோ முதல் நவீன காலப் பிரிவின் பொ்டன்‌ ரஸ்ஸல் வரை  பல கல்வித்தத்துவங்கள், கோட்பாடுகள் தோன்றியுள்ளன. இத்துறையில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகள் மிகப் பாரிய பங்களிப்பைச்…

Read More

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம்

இஸ்லாம் அறிவினதும் இறைதூதினதும் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஒரு மதமாகும். அதன் வரலாறே  ‘இக்ரஃ’ என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும். நாகரிகமும் இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே  தோன்றி வளர்ந்தன. அறிவு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும், அதன் அறிவுக் கோட்பாட்டின் சில இயல்புகளையும் பொதுவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘’மறைவானவற்றின் திறப்புகள்…

Read More

 மாலிக் பின் நபியின் பார்வையில் சமூக மாற்றம்

முஸ்லிம் உலகில் சமூகமாற்றம், சமூக புனர்நிர்மாணம் பற்றிய கருத்துக்கள், சிந்தனைகள், பத்தொன்பதாம் நூற்றாண் டின் இறுதிக் காலப் பிரிவிலும், இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்; பிரிவிலும் பல சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தவாதிகளாலும் முன்வைக்கப் பட்டன. இந்த விடயம் தொடர்பான ஆய்வுகள் இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது. புத்திஜீவிகள், ஆய்வாளார்கள், பொதுவாக அரபு முஸ்லிம் சமூக…

Read More

சமூக மாற்றமும் தனிமனித புனர் நிர்மானமும்- மாலிக் பின் நபியின் சில அவதானங்கள்

மனித சிந்தனையிலும், நாகரிகதத்திலும் ஐரோப்பிய சிந்தனை ஏற்படுத்திய எதிர்‌மறையான விளைவுகள் வரலாற்றில்‌ ஏற்படுத்திய தாக்கங்கள் மிகப் பாரதூரமானவையாகும். இந்தப் பாதகமான விளைவுகள் குறித்து மாலிக் பின் நபி பகுப்பாய்வு செய்து அவரது “விஜ்ஹதுல் ஆலமுல் இஸ்லாமி பீ மஹப்பில் மஃரக்””அல் ஆபாகுல் ஜஸாயிரிய்யா” போன்ற நூல்களில் மிக விரிவாக விளக்கியுள்ளார். அவரது கண்ணோட்டத்தில், இத்தகைய பாதகமான…

Read More

இக்பாலின் வரலாற்றுத் தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல்  

  அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி் தத்துவஞானி் சிந்தனையாளர்‌ ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக்குரியதன்று. இந்த வகையிலேயே  வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது…

Read More

மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு

இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலி வகிக்கும் மிக முக்கிய இடத்தைப் போன்றே மேற்கத்திய சிந்தனையில் டேகார்ட் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றார். இருவரும் அவர்களது காலப்பிரிவில் சிந்தனைப் போக்கில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலியின் ஆளுமைச் செல்வாக்கைப் பேரறிஞர் ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி…

Read More