புனர் நிர்மாணம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் சில அவதானங்கள்

சமூக மாற்றம் என்பது சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். அது சமூக பரிணாமத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும். இஸ்லாம் மனித சமூகத்தின் நேர்வழிக்கான இறுதி வழிகாட்டுதலைப் பொதிந்த ஒரு மார்க்கம் என்ற வகையில் சமூக வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் அங்கீகரிக்கின்றது. சமூக வளர்ச்சி, மாற்றத்திற்கேற்ப தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சமூக மாற்றத்…

Read More

இமாம் கஸ்ஸாலி (றஹ்) யின் சமூக விமர்சனப் பார்வை

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தி னடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய…

Read More

தோல்வி மனப்பான்மையைத் தவிர்த்து சவால்களை வெற்றிகொள்வோம்

இன்று குத்பா உரைகளிலும் சொற்பொழிவுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான ‘யஹூதி-நஸாராக்களின் சதி’ பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது. எமது பலவீனங்கள், பின்னடைவுகள் , தேக்க நிலை ஆகிய அனைத்திற்கும் யஹூதி நஸாராக்களின் சதியே காரணம் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது. இது உண்மையில் எமது பலவீனங்கள், இயலாமைக்கான காரணங்கள் என்பவற்றை சுயவிசாரணை செய்து அவற்றுக்கான தீர்வுகளைக் காணும்…

Read More

இஸ்லாமிய- கிரேக்க பண்பாட்டுத் தொடர்புகள்

முஸ்லிம்களும் கிரேக்கப் பண்பாடும் ரோம அரசன் அலெக்சாண்டர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றி யமை கிரேக்க கலாசாரம் கீழைத்தேய நாடுகளில் பரவ வழிவகுத்தது. மூன்று கண்டங்களையும் உள்ளடக்கி வியாபித்துப் பரவிய அலெக்சாண்டரின் சாம்ராஜ்யமானது ஐரோப்பாவில் கிறீஸ், மஸிடோனியா ஆகிய நாடுகளையும், ஆபிரிக்காவில் எகிப்து, லிபியா ஆகிய பிரதேசங்களையும் ஆசியாவில், சிரியா, பலஸ்தீனம், ஈராக், பாரசீகம், துருக்கிஸ்…

Read More

தஸவ்வுபினதும் ஸூபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப் பணிகளும்

இஸ்லாமிய வரலாற்றில் கால வளர்ச்சியில் தோன்றிய அகீதா> பிகஹ் போன்ற கலைகள் போன்றே குர்ஆன்> ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாக தஸவ்வு விளங்குகின்றது. அகீதா> இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகவும்> பிக்ஹ் இஸ்லாமிய சட்டவியலுடன் தொடர்புடைய கலையாகவும் அமைந்தது போன்று> தஸவ்வும் இஸ்லாத்தின் ஆத்மிகக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகும். முதகல்லிமீன்கள்>…

Read More

அரபி பாஷாவும் இலங்கை முஸ்லிம்களில் அவரது செல்வாக்கும்

புரட்சிக் காலம் அரபி பாஷாவின் 1883ஆம் ஆண்டுக் கிளர்ச்சியை 19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றின் பின்னணியில் நோக்கும்போது அது பற்றிய ஒரு தெளிவை நாம் பெற முடியும். அரபி பாஷாவின் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியை உள்ளடக்கிய 19ஆம் நூற்றாண்டின் பிந்திய அரை நூற்றாண்டுக் காலப் பிரிவானது ஐரோப்பிய வரலாற்றில் மிகப் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்த…

Read More

டார்வினின் பரிணாமவாதக் கோட்பாட்டின் ஒழுக்க,தார்மீக விளைவுகள்

நவீன மேற்கத்திய உலக நோக்கையும், சிந்தனைப் பாங்கையும் உருவாக்குவதில் சார்ல்ஸ் டார்வினின் (கி.பி 1809-1882) பரிணாமவாதக் கோட்பாடும், ஸிக்மன் ப்ரொய்டின் (கி.பி 1856-1939) உளவியல் கோட்பாடும் மிக முக்கிய கட்டத்தை வகிக்கின்றன. புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை முற்றிலும் புறக்கணித்து, புலன்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட சடவாதக் கோட்பாட்டின் அடிப் படையிலேயே, டார்வினதும், ப்ரொய்டினதும் சித்தாந்தங்கள் கட்டியெழுப்பப் பட்டுள்ளன….

Read More

இப்னு துபைலின் ‘ஹய் இப்னு யக்ளான்’ தத்துவ நாவல்

முஸ்லிம் ஸ்பெயினின் தத்துவஞானிகள் வரிசையில்,அபூபக்கர் இப்னு துபைல் சிறப்பிடம் பெறுகின்றார்.(மரணம் கி.பி 1185) மருத்துவம், தத்துவம், கணிதம், வானவியல் போன்ற பலதுறைகளில் புலமை பெற்ற இப்னு துபைல்  ஸ்பெயினில் மவஹித் ஆட்சியாளர் அபூ யாகூப் யூஸுபின் அரண்மனை  மருத்துவராகவும், நீதிபதியாகவும்  பணிபுரிந்தார். அவரது வாழ்வு பற்றி மிகக் குறைவான தகவல்களே உள்ளன. வானவியல், மருத்துவம், தத்துவம்…

Read More

அபூ ரய்ஹான் அல் – பெரூனி : மதங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வின் ஒரு முன்னோடி

மத்தியகாலப்பிரிவில் தோன்றிய, மிக அரிதான, அதிசயிக்கத்தக்க ஆளுமை படைத்த அறிஞர்களுள் அபூரய்ஹான் அல் – பெரூனியும் ஒருவர். எதனையும் பகுத்தாய்ந்து உணரும் வேட்கை, சத்தியம் எங்கி ருப்பினும் அதனைத்தேடி அறியும் தனியான தாகமும், பல்வேறு விடயங்களை ஒன்று திரட்டி, அவற்றை ஒன்றிணைத்து (Synthesize) அவற்றினூடே இழையோடி நிற்கும் ஒருமைப்பாட்டைத் தரிசிக்கும் சிந்தனைப் பாங்கும், உளப்பண்பும் கொண்ட…

Read More

தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் ஓர் அங்கமாகும். எனவே, இலங்கை முஸ்லிங்களின் வராறு கீழைத்தேய உலகிற்கும் மேற்குலகிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பின்னணியிலும், பாரசிக வளைகுடாப் பிரதேசத்திற்கும் சீனாவிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பகைப்புலனிலும் ஆராயப்படுவது போன்று, தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியிலேயே நோக்கப்படல் வேண்டும். வரலாற்றுப் பின்னணி…

Read More