கலாநிதி சுக்ரி

கலாநிதி சுக்ரி – ஒரு பன்முக ஆளுமை

அஷ்ஷெய்க்.ஏ.ஸீ அகார் முஹம்மத்
பிரதிப் பணிப்பாளர்- ஜாமிஆ நளீமியா

‘’சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக்காலம் சிலர் தோன்றுகின்றார்கள். அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்களன்றுளூ சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணமானவர்கள்ளூ தங்களது தனிப்பட்ட வாழ்வு என்ற நதியை சமூகம் என்ற சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தவர்களளூ; சமூக மேம்பாட்டையும் நல்வாழ்வையும் தங்களது இலட்சியமாக வரித்துக்கொண்டவர்கள். இத்தகையவர்களின் வாழ்வும் அதன் நிகழ்வுகளும் சமூக வரலாற்றோடு இரண்டறக் கலந்து அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறிவிடுகின்றன. அத்தகையவர்களின் வாழ்க்கையினூடே  நாம் அவர்களது கால சமூகத்தைத் தரிசிக்கின்றோமளூ; அதன் வளைவு நெளிவுகளை, ஏற்ற இறக்கங்களை இனங்கண்டு கொள்கிறோம். தனிமனிதர்களின் வரலாறுகள், வாழ்க்கை நிகழ்வுகள், அவர்கள் சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் நிச்சயம் பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததிகளுக்குப் பாத்தியதையாக வழங்கப்படல் வேண்டும். அத்தகைய ஒரு தனிமனிதனின் வரலாறே நளீம் ஹாஜியாரின் வரலாறு.’’

இவை ‘நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும்’ எனும் தனது நூலின் முன்னுரையில் கலாநிதி சுக்ரி   அவர்கள் எழுதியுள்ள சில வரிகள். இந்த வரிகள் நளீம் ஹாஜியாருக்குப் போலவே கலாநிதி சுக்ரி அவர்களுக்கும் பொருந்தும் என்பதை அவரைப் பற்றி அறிந்த எவரும் மறுக்கப் போவதில்லை. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் சன்மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் அறிஞன் என்ற வகையில் கலாநிதி சுக்ரி அவர்களின் வாழ்வும் பணியும் எழுத்துருப் பெறுவது இன்றியமையாததாகும். இவரது அரிய பணிகள் முழு சமூகத்தாலும் நினைவு கூரப்படல் வேண்டும். அவை போற்றிப் பாதுகாக்கப்படல் வேண்டும். எதிர்கால பரம்பரையினர் அறிந்து கொள்வதற்காக பதிவு செய்யப்படல் வேண்டும்.

“உங்களது வாழ்க்கைச் சரிதையை நீங்களே ஏன் எழுதக்கூடாது? அது உங்களை நீங்களே புகழ்ந்து பாராட்டுவதாக அமைந்து விடும் என்றோ, சுய புராணம் பாடுவதாகக் கருதப்படும் என்றோ  அஞ்ச வேண்டியதில்லை. மாறாக அது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளை எடுத்துச் சொல்வதாகவும் பிறருக்கு படிப்பினையும் உணர்வும் ஊட்டுவதாகவும் அமையும் என நான் நினைக்கிறேன்“ என்று பல சந்தர்ப்பங்களில் நான் கலாநிதி சுக்ரியிடம் கூறியிருக்கின்றேன். ஷேய்க் அப்துல் ஹலீம் மஹ்முத், மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஷேய்க் யூசுப் அல்கர்ளாவி போன்ற பிற்பட்ட கால, சமகால அறிஞர்கள் கூட தமது வாழ்க்கை வரலாற்றை தாமே எழுதியிருக்கின்றார்கள் என்பதை நினைவு படுத்தி அவரை இப்பணியில் ஈடுபட உற்சாகப்படுத்தியிருக்கின்றேன். ஆயினும் எனது எதிர்ப்பார்ப்பு இன்று வரை நிறைவேற வில்லை. இந்நிலையில் அவரது வாழ்வையும் பணியையும் பற்றி எழுதும் அரிய வாய்ப்பு ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர் அமைப்புக் கூடாக எனக்குக் கிட்டியிருக்கின்றது.

ஒரு வகையில் கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றி எழுதுவதற்கு நான் தகுதியுடையவனே. ஏனெனில் கடந்த மூன்று தசாப்த காலமாக ஒரு மாணவனாகவும் ஜாமிஆவில் அவரின் நிர்வாகத்தின் கீழ் இருந்து பணியாற்றும் ஓர் ஊழியனாகவும் இருந்து வருபவன் மாத்திரம் அல்ல காரியாலய தொடர்புகளுக்கு அப்பால் அவரோடு நெருங்கிப் பழகுபவனாகவும் நான் இருக்கின்றேன். அவரோடு  பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவன் நான். இதனால் அவரது குண இயல்புகளைப் புரிந்து கொள்ளவும் அவர் தொடர்பான பல தகவல்களை நேரடியாக அவர் மூலமே தெரிந்து கொள்ளவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

உண்மையில் கலாநிதி சுக்ரி பன்முக ஆளுமை கொண்ட ஒரு மனிதர். அவரைப் பற்றியும் அவரது ஆளுமைப் பண்புகளைப் பற்றியும் அவரின் காத்திரமான சமூகப் பங்களிப்புக்கள் பற்றியும் பேசும்  ஒரு தனியான நூல் எழுதப்படல் வேண்டும். அதற்கான சில அடிப்படைக் குறிப்புக்களைத் தருவதாக மட்டுமே எனது இந்த ஆக்கமும் இம்மலரில் இடம்பெற்றுள்ள சகோதரர்களான எம்.ஐ.எம். அமீன், எம்.எச்.எம். நாளிர், கலாநிதி ஹஸ்புல்லாஹ் போன்றோரின் கட்டுரைகளும், பிற ஆக்கங்களும் அமையும் என நான் கருதுகின்றேன்.

குடும்ப வாழ்வு

கலாநிதி சுக்ரி தென்மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை நகரில் 1940 ஜூன் 24 ஆம் திகதி பிறந்தார். தந்தை முஹம்மத் அலிளூ தாயின் பெயர் ஆயிஷா பீபீ. சகோதரர்கள் இருவர். தனது குடும்பத்தில் இருவரை கலாநிதி சுக்ரி குறிப்பாகவும் சிறப்பாகவும் நினைவு கூருவார். தாயின் சகோதரர்களான தாஸிம் ஹாஜியாரும் யாஸீன் ஹாஜியாருமே அவர்கள் இருவருமாவர். இவர் தனது கல்விப் பயணத்தைத் தொடர பின்புலமாக நின்றவர்களே இவர்கள் இருவரும்.

1970 ஆம் ஆண்டு டாக்டர் S.M சலாஹுத்தீன் அவர்களின் ஏகப்புதல்வி நூருள் புஷ்ராவை  இவர் மணம் முடித்தார். சுக்ரி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். இருவர் ஆண்கள்.ஒருவர் பெண். மகள் சுமையா திருமணமாகி அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

பாடசாலைக் கல்வி

கலாநிதி சுக்ரி தனது ஆரம்பக் கல்வியை மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் பெற்றார். அங்கு பௌத்த, கிறிஸ்தவ மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அன்று எல்லா இனத்தவர்களையும் மதத்தவர்களையும் இணைக்கும் மொழியாக ஆங்கிலம் காணப்பட்டது. ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே ஒரு நல்ல ஆசானின் சிறந்த வழிகாட்டல் இவருக்குக் கிடைக்கின்றது. சென்தோமஸ் கல்லூரியில் இருந்த கந்தையா மாஸ்டர் சிறுவன் சுக்ரியை அடையாளம் கண்டு  வழி;காட்டுகின்றார்ளூ அவரை வாசிப்புக்குத் தூண்டுகின்றார்ளூ தமிழ் நாவல்களையும்  சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றையும் வாசிக்க வழிப்படுத்துகின்றார்ளூ எழுத்துத் துறையிலும் ஆர்வமூட்டுகின்றார். இதன் விளைவாக 15 வயது கூட பூர்த்தியடையாத நிலையில் மாணவர் சுக்ரி எழுத்துலகுக்கு பிரவேசிக்கின்றார். இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையில் எங்கள் கழகம், சிறுவர் அரங்கம் போன்ற பக்கங்களில் ஆரம்பமாக வெளிவருகின்றன.

மொழிமாற்றுக் கொள்கை காரணமாக சென்தோமஸ் கல்லூரியின் போதனா மொழியாக சிங்களம் ;;மாற்றப்பட்டதனால் கல்வியை ஆங்கில மொழிமூலம் தொடர இவரை கம்பளை ஸாஹிராக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க குடும்;பத்தார் தீர்மானிக்கின்றனர். பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு தர்கா நகர் அல்ஹம்ரா கல்லூரியில் சேர்க்கப்படுகின்றார். அக்காலத்தில் அல்ஹம்ரா நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்கும் புகழ் பெற்ற கல்லூரியாக விளங்கியது. அல்ஹம்ரா இளைஞன் சுக்ரியின் இலட்சியப்பயணத்தின்  மற்றொரு மைற்கல்லாக அமைந்தது. இவரது திறமைகளை இனங்கண்டு இவரில் புதைந்து கிடந்த உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணரவும் வளர்த்து விடவும் மற்றுமொரு நல்லாசான் அங்கிருந்தார். பின்னொரு காலத்தில் ஜாமிஆ நளீமிய்யாவில் எனது ஆசானாகவும் இருந்த காலியைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எஸ்.எம். ஹரீஸ் ஆசிரியர் அல்ஹம்ராவில்  இவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். கலாநிதி சுக்ரி பிற்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராக உருவாவதற்கு பின்புலமாக இருந்தவர் ஹரீஸ் ஆசிரியரே எனக் கூறினால் அது பிழையல்ல.

கலாநிதி சுக்ரி மாணவர் பருவத்தில் சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருந்தவர். இதனால் இவர் மாணவர் மன்றங்களில் கூட வெட்கத்தின் காரணமாகவும் தயக்கத்தின் காரணமாகவும் பின்வரிசையிலேயே அமர்வார். இதனை அவதானித்த ஹரீஸ் ஆசிரியர் இவரை அழைத்து முன்வரிசையில் அமரச் செய்ததோடு மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தூண்டினார்ளூ பேச்சுக்களை எழுதிக் கொடுத்து பேச வைத்தார்ளூ காலி முஸ்லிம் கலாசாரச் சங்கம் நடாத்தி வந்த அகில இலங்கை மீலாத் பேச்சுப் போட்டிக்கு இவரைத் தயார்படுத்தி அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்கவைத்து போட்டியில் கலந்துகொள்ளச் செய்தார். இப்போட்டியில் இவருக்கு முதலாம் இடம் கிடைத்தது. இதே ஹரீஸ்  ஆசிரியர் இந்நிகழ்வு நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஜாமிஆவில் தமிழ் ஆசிரியராக இருந்த போது காலி முஸ்லிம் கலாசார சங்கம் நடாத்திய அகில இலங்கை மீலாத் சிங்கள பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்துச் சென்றார். போட்டிக்கு முன்னைய நாள் தனது வீட்டில் என்னையும் தங்கவைத்தார். அடுத்த நாள் போட்டியில் கலந்து கொண்டு நானும் முதல் பரிசைப் பெற்றுக்கொண்டேன். அல்லாஹ் நல்லாசான் ஹரீஸ் ஆசிரியருக்கு நல்லருள் பாலிப்பானாக!.

பிற்காலத்தில் தனது அரபுப் பாட நிகழ்ச்சி மூலமும் ஷதத்துவ வித்துக்கள்| என்ற தொடர் உரையின் மூலமும் மற்றும் பல நிகழ்ச்சிகள் மூலமும் புகழ்பெற்ற வானொலிப் பேச்சாளராக மிளிர்ந்த கலாநிதி சுக்ரியை முதல் தடவையாக வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் சென்றவரும் ஹரீஸ் ஆசிரியர் அவர்களே. ஷஇணையற்ற இஸ்லாமிய யுத்த தர்மம்| என்ற தலைப்பிலான வானொலி நாடகமே கலாநிதி சுக்ரி கலந்து கொண்ட முதலாவது வானொலி நிகழ்ச்சி. இந்நாடகத்தில் பிரதான பாத்திரமான சலாஹூத்தீன் அய்யூபியின் பாத்திரத்தை இவர் ஏற்று நடித்தார். ஹரீஸ் ஆசிரியரே நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவராவார்.

தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் மணிவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த அ.க. அப்துஸ்ஸமத் இலங்கை வந்த போது அவருக்கான வரவேற்பு வைபவத்தில் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக ஹரீஸ் ஆசிரியர் மாணவர் சுக்ரியை அழைத்துச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும்.

ஸாஹிரா வாழ்வு

1956 வரை அல்ஹம்ராவில் கற்ற மாணவர் சுக்ரி அங்கு SSC பரீட்சை எழுதி அதில்

சித்தியடைந்ததைத் தொடர்ந்து  HSC  உயர்தரம் கற்பதற்காக கொழும்பு ஸாஹிராவுக்குச் சென்றார். இவர் ஸாஹிரா சென்ற காலம் அதன் பொற்காலமாக இருந்தது. அக்காலத்தில் அதன் அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள். பிற்பட்ட காலத்தில் சிறந்த ஆய்வாளர்களாக விளங்கிய எம்.எம்.மஃறூப், முஹம்மத் சமீம் ஆகியோரிடமும் பேராசிரியர் கா.சிவத்தம்பியிடமும் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவரது அறிவும் ஆற்றல்களும் வளர்வதற்கு மற்றொரு களமாக ஸாஹிரா அமைந்தது.அறிஞர் அஸீஸ், கலாநிதி சிவத்தம்பி முதலானோரின் வழிகாட்டல் இவருக்கு நிறைவாகக் கிடைத்தது. அல்லாமா இக்பாலைத் தெரிந்து கொள்ளவும் அவரது சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்படவும் ஸாஹிரா வாழ்வு இவருக்குத் துணைபுரிந்தது. இக்பால் போன்ற ஆளுமைகளைப் படிப்பதற்கும் பரந்த அளவிலான வாசிப்பிற்கும் ஸாஹிரா நூலகத்தை இவர் பயன்படுத்திக் கொண்டார்.

மாணவர் சுக்ரி இக்காலப் பிரிவில் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற பல விவாதப் போட்டிகளில் பங்கேற்றார். பல விவாதங்களில் ஸாஹிரா குழுவுக்கு இவரே தலைமை தாங்கினார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. நாடளாவிய ரீதியில் நடாத்திய தமிழ்மொழிமூல மீலாத் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை இவர் பெற்றுக்கொண்டமையும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். கலாநிதி அமீர் அலி, கல்வியியலாளர் எஸ்.எச்.எம.;ஜெமீல் ஆகியோர் இவரது ஸாஹிரா வகுப்புத் தோழர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழக வாழ்வு

ஸாஹிராவில் கற்று உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் சுக்ரி 1960 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்ற இவருக்கு தனது சிறப்புத் துறையைத் தெரிவு செய்வதில் ஒரு குழப்ப நிலை தோன்றியது. இங்கு அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் வழிகாட்டல் இவருக்குக் கிடைக்கின்றது. அறபு மொழியை சிறப்புத் துறையாக தெரிவு செய்யுமாறு அவர் ஆலோசனை வழங்கினார். ஏலவே மாணவர் சுக்ரிக்கு அரபு மொழியுடன் பரீச்சயம் இருந்தது. தனது ஊரில் சென்தோமஸ் கல்லூரியில் கற்கும் காலத்தில் ஷாபி ஆலிம் என்பவர் நடாத்தி வந்த மாலை நேர மத்ரஸாவில் இவர் அரபு மொழி கற்றிருக்கின்றார். எனவே தயக்கமின்றி அரபு மொழியைத் தனது சிறப்புத்துறையாக இவர் தெரிவு செய்தார். அன்று அரபுத்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் இமாம் அவர்கள். அவரது ஏக மாணவராக இவர் இருந்தார். மாணவர் சுக்ரியின் ஆளுமை விருத்தியில் பேராசிரியர் இமாமுக்கு பெரும் பங்குண்டு. அவர் தனது மாணவனுக்கு பாடத்திட்டத்திற்கு வெளியே சென்றும் பாட போதனை நடாத்தினார்ளூ நேர சூசிக்கு அப்பால் சென்று மாலை நேர, இரவு நேர வகுப்புகளை நடாத்தினார்ளூ பரந்த அளவிலான தேடலுக்கும் வாசிப்புக்கும் வழிகாட்டினார்ளூ ஆரம்பகால, பிற்பட்ட கால இஸ்லாமிய அறிஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை மதிக்கும் மனப்பாங்கை வளர்த்தார். பிற்பட்ட காலத்தில் தனது ஆசானை நினைவு கூரும் பொழுதெல்லாம் ஷஷஅவர் என்னை ஒரு மாணவனாக மட்டுமன்றி தனது மகனாகவும் கருதினார்|| என கலாநிதி சுக்ரி நன்றியுடன் குறிப்பிடுவார்.

இக்காலப் பகுதி பேராதனைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியத்துறையில் ஒரு பொற்காலமாக இருந்தது. தமிழ்த் துறையில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியாநந்தன், போன்றோர் இருந்தனர். சமகால மாணவர்களில் மௌனகுரு, செங்கையாழியான் முதலானோர் இருந்தனர். இக்காலப்பகுதியில் மாணவர் சுக்ரி தமிழ் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் காட்டினார்ளூ பேசினார்ளூ எழுதினார்ளூ விவாதங்களில் பங்கேற்றார்ளூ இலக்கிய மன்றங்களில் கலந்து கொண்டார். இலக்கியத்துறையில் இவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டல் இவருக்கு நிறைவாகக் கிடைத்தது. 1963 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் வெற்றிக் கேடயத்திற்கான தமிழ் பேச்சுப் போட்டியில் திறமையான பல மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கேடயத்தைச் சுவீகரிக்கும் அளவிற்கு மாணவர் சுக்ரியின் தமிழ் மொழி ஆற்றலும் நாவன்மையும் நன்கு வளர்ந்திருந்தன. இவர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய காலத்தில் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதினார். இக்காலப் பகுதியில் இவர் எழுதிய இலக்கிய ஆக்கங்களுள் மூன்று சிறுகதைகளும் அடங்கும். ஷதலாக்| இவர் எழுதிய முதல் சிறுகதையாகும். இது இவர் பல்கலைக்கழகம் செல்ல முன்னர் எழுதப்பட்டது. கொழும்பு முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் 1958 இல் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் இக்கதை வெளிவந்தது. மற்றைய இரு சிறுகதைகளும் ஷவாரிசு|, ஷகழுவாய்| ஆகிய தலைப்புக்களைத் தாங்கி வெளிவந்தன. இவை இரண்டும் இவர் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்த காலத்தில் எழுதப்பட்டவையாகும். இவரது இலக்கிய ஈடுபாடு பற்றி பிற்காலத்தில் இளங்கீரன் சுபைர் எழுதும்போது, கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தால் ஒரு பெரும் இலக்கியவாதியாக இருந்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரி மாணவராக இருந்த காலத்திலேயே கலாநிதி சுக்ரி நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று மீலாத் விழாக்களிலும் ஹதீஸ் மஜ்லிசுகளிலும் சமூகவிவகாரங்கள் தொடர்பான ஒன்று கூடல்களிலும் உரை நிகழ்த்தி வந்தார். 1960 களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே சிறந்த மேடைப் பேச்சாளர்களாக விளங்கினர். அவர்களுள் மஸ்ஊத் ஆலிம், மௌலவி யூ.எம். தாஸிம் நத்வி, மௌலவி ஏ.ஆர்.எம். ரூஹூல் ஹக், ஜனாப் எம்.பீ.எம். மாஹிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வரிசையில் இளைஞர் சுக்ரி சிறப்பிடம் பெற்றார். இக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அறியப்பட்ட தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இவர் இருந்தார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே நாடளாவிய ரீதியில் சமூகப்பணியிலும் சன்மார்க்கப் பணியிலும் தீவிர ஈடுபாடு காட்டிய இளைஞர் சுக்ரி தனது பிறந்த ஊருக்கும் பணி செய்ய மறந்துவிடவில்லை. தனது சொந்த ஊரான மாத்தறையில் இஸ்லாமியக் கலாசார இயக்கம் என்ற பெயரில் ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டார். மாத்தறை கடை வீதி ஜூம்மா பள்ளிவாயலில் அல்குர்ஆன் விளக்க வகுப்பொன்றையும் நடாத்தி வந்தார்;. மிக அண்மைக் காலம் வரை இவரால் இந்த வகுப்பு நடாத்தப்பட்டு வந்தமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்

1965 ல் பட்டப்பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த கலாநிதி சுக்ரி தொடர்ந்து இலங்கை நிருவாக சேவையில் இணைய வேண்டும் என உத்தேசித்தார். ஆயினும் பின்னர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸின் ஆலோசனைப்படி பேராசிரியர் இமாமின் வாரிசாக கல்வித்துறையிலேயே தனது பணியைத் தொடரத் தீர்மானித்தார். பட்டப்படிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். 1973 வரை சிறிது காலம் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பின்னர் பேராதனைப்  பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இக்கால இவரது மாணவர்களுள் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம், ஜனாப் எம்.ஐ.எம். ரியாழ், ஜனாப் முக்தார் ஏ. முஹம்மத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.இவர்கள் அனைவரும் தமது விரிவுரையாளர் சுக்ரியை விட வயதில் மூத்தவர்களாக இருந்தனர். பாடசாலை ஆசிரியர்களாக இருந்த இவர்கள் விரிவுரையாளர் சுக்ரி அவர்களின் கீழ் தமது பட்டப் படிப்பை மேற்கொண்டார்கள்.  மௌலவி கே.எம்.எச்.காலிதீனும் இவரது ஆரம்பகால மாணவர்களுள் ஒருவராவார்.

கலாநிதி சுக்ரி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்ற பின்னரும் மாணவர் பருவத்தில் துவங்கிய தனது சமூக, சமயப் பணிகளை தொடர்ந்தும் முனைப்புடன் மேற்கொண்டு வந்தார். 1972 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய ஆய்வு எகடமி கெய்ரோ நகரில் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் இவருக்குக் கிட்டியது. இது இவர் பங்கேற்ற முதலாவது சர்வதேச மாநாடாகும்.

விரிவுரையாளர் சுக்ரி தனது பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு மே மாதம் குருணாகல், தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற குருணாகல், குளியாப்பிட்டி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும்  விழாவில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். அங்கே பரிசு பெறும் மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். இவ்வைபவத்தில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் சார்பில் உரை நிகழ்த்தும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். கலாநிதி சுக்ரி அவர்களைப் பார்ப்பதற்கும் அவரது உரையைக் கேட்பதற்கும் எனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பட்டப்பின் படிப்பு

பட்டப்பின் படிப்பைத் தொடர்வது கலாநிதி சுக்ரியின் இலட்சிய வாழ்வின் அடுத்த நகர்வாக அமைந்தது. பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்கு எந்த நாட்டின் எந்தப் பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்வது என்பதை இவரால் தீர்மானிக்க முடியாமல் இருந்தது. பேராசிரியர் இமாம் மேற்குலக பல்கலைக்கழகம் ஒன்றிற்கு செல்லுமாறு தூண்டினார்ளூ மற்றும் சிலர் அரபு நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றிற்கு செல்லுமாறு ஆலோசனை கூறினர். இறுதியில் அன்று இலங்கைக்கான எகிப்திய தூதுவராக இருந்த கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்களின் ஆலோசனையின்படி எகிப்து அல்அஸ்ஹருக்கு செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை கலாநிதி சுக்ரிக்கு தெரியவந்தது. இதில் ஆர்வம் கொண்ட அவர் இது தொடர்பாக கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதை அணுகினார். அவரும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவே குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கூடாக ஐக்கிய இராச்சிய எடின்பரோ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார். அல்லாஹ்வின் அருளால் அனுமதியும் கிடைத்தது. 1973 ஆம் ஆண்டு தனது மனைவியுடனும் கைக்குழந்தையாக இருந்த மகனுடனும் ஐக்கிய இராச்சியம் நோக்கி இவர் பயணமானார்.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இவரது மேற்பார்வையாளராக பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் இருந்தார். இவர் ஒரு கீழைத்தேய அறிஞர். இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். இஸ்லாம் சார்பு கீழைத்தேயவாதிகளின் வரிசையில் பேராசிரியர் வொட் சிறப்பிடம் பெறுகின்றார். இவரது வழிகாட்டலின் கீழ் தனது பட்டப் பின்படிப்பை கலாநிதி சுக்ரி தொடர்ந்தார். ஆரம்பமாக ஆய்வுக்குரிய தலைப்பைத் தெரிவு செய்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நீண்ட தேடலுக்குப் பின்னர் ஹி. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் அபூதாலிப் அல்மக்கியின் ஷஷகூதுல் குலூப்||; என்ற நூலை ஆய்வுக்காகத் தெரிவு செய்தார். ஆய்வுக்குரிய தலைப்பைத் தெரிவுசெய்வதற்கும் அதற்கான உசாத்துணை நூற்களைக் கண்டறிவதற்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பேராசிரியர் இமாம் அவர்கள் மூலம் கிடைத்த வழிகாட்டல்கள் இவருக்குப் பெரிதும் உதவின. குறுகிய காலத்துக்குள் ஆய்வுக்கான அடிப்படை முன்னாயத்தங்களை இவர் செய்து முடித்தமையைக் கண்டு பேராசிரியர் வொட் பெரிதும் மகிழ்ந்தார்.

ஆய்வு தொடர்ந்தது. அதுவொரு பெரும் போராட்டமாகவே அமைந்தது. இரவு பகலாக முழு மூச்சாக ஆய்வில் ஈடுபட்டார் கலாநிதி சுக்ரி. தொடர்ந்தேர்ச்சையான தேடலின் விளைவாக ஒரு கட்டத்தில் நரம்புத் தளர்ச்சியினால் பாதிப்படையும் நிலை கூட இவருக்கு ஏற்பட்டது. இறுதியில் அல்லாஹ்வின் அருளால் தனது ஆய்வை வெற்றி;கரமாக முடித்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.பெரும் சவாலாக அமைந்த தனது கல்விப் பணி சிறப்பாக நிறைவு பெறுவதற்கு நேரடியாகத் துணைநின்ற இருவரை கலாநிதி சுக்ரி என்றும் நன்றியுடன் நினைவு கூருவார். ஒருவர் பேராசிரியர் வொட் அவர்கள், அடுத்தவர் இவரது அருமை மனைவியவர்கள். தகப்பனார் கடும் சுகயீனமுற்றிருந்த நிலையிலும் தன்னுடன் இங்கிலாந்து வந்து மூன்று வருடங்கள் தனது பணியைத் தொடர்வதற்குப் பெரும் உதவியாக இருந்தவர் தனது துணைவியார் என கலாநிதி சுக்ரி அடிக்கடி நினைவு படுத்துவதுண்டு.

கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை முடித்ததைத் தொடர்ந்து தான் ஓர் இராட்சத மனிதனாக மாறிய உணர்வு தனக்குள் பிறந்ததாக கலாநிதி சுக்ரி ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் உணரும் அளவிற்கு அவரது ஆய்வு அவரின் அறிவையும் ஆற்றல்களையும் வளர்த்தெடுக்க உதவியது என்பதையே இதற்கூடாக அவர் சொல்ல விரும்பினார். பிரியாவிடை பெறுவதற்காகத் தனது பேராசிரியரைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் கூறிய ஓர் உபதேசத்தைக் கலாநிதி சுக்ரி பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்தியுள்ளார். கல்வித்துறையில் அடையக்கூடிய அதி உயர் பட்டத்தைப் பெற்றிருந்த தனது மாணவரை விழித்து பேராசிரியர் வொட் பின்வருமாறு கூறினார்.

ஷஷசுக்ரி! நீங்கள் இதற்குப் பிறகுதான் கற்கப் போகின்றீர்கள். இதுவரை எதைப் படிப்பது? எப்படிப் படிப்பது என்பதையே கற்றுக்கொண்டீர்கள்.|| இக்கருத்து பட்டச்சான்றிதழ்களையும் பட்டப்பின் படிப்புச்; சான்றிதழ்களையும் சுமந்திருக்கும் அனைவரினதும் கவனத்திற்கும் சிந்தனைக்குமுரியதாகும்.

தனது பாரமான ஆய்வுப் பணிக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் மத்தியிலும் தனக்குக் கிடைத்த பொதுநலவாய புலமைப் பரிசில் நிதியின் ஒரு பகுதியைச் சேமித்து 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தே குடும்பத்தோடு சென்று புனித ஹஜ் கடமையை இவர் நிறைவேற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய கலாநிதி சுக்ரி மீண்டும் தனது பல்கலைக்கழகப் பணியில்  இணைந்து கொண்டார். கலாநிதி பட்டப்பின்படிப்பை நிறைவு செய்;திருந்ததனால் முதுநிலை விரிவுரையாளராகவும் பதவியுயர்வு பெற்றார். தொடர்ந்து அறபு இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவராகவும் நியமனம் பெற்றார்.இக்காலத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை களனிப் பல்கலைக்கழகத்தில் இயங்கியது. 1978 ல் இத்துறை மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டு அறபு நாகரிகத்துறை பேராதனைப் பல்கலைக்கழக தும்பறை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த இடமாற்றம் கலாநிதி சுக்ரிக்கு திருப்தியளிக்கவில்லை. ஆயினும் அவர் தனது பணியை அங்கு தொடர்ந்தார்.

ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர்

இந்நிலையில் ஜாமிஆ நளீமிய்யாவின் நிருவாகத்தைப் பொறுப்பேற்குமாறு நளீம் ஹாஜியார் இவரை வேண்டிக்கொண்டார். இதற்கு முன்னரும் அவர் பல சந்தர்ப்பங்களில் இந்த வேண்டு;கோளை முன்வைத்ததுண்டு. இவர் இங்கிலாந்தில் இருந்த போது 1974 ஆம் ஆண்டளவில் நளீம் ஹாஜியார் ஹொங்கொங்கிலிருந்து இவருக்கு எழுதிய கடிதத்தில் கலாநிதிப் பட்டப்பின்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பியதும் ஜாமிஆ விவகாரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டுமென வேண்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட மனப் போராட்டத்தின் பின்னர் தனது பல்கலைக்கழக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜாமிஆவின் பொறுப்பைச் சுமப்பது எனத் தீர்மானிக்கின்றார். 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாநிதி சுக்ரி ஜாமிஆ நளீமிய்யாவில் பணிப்பாளராகப் பதவியேற்றார். இப்பதவிக்கு இவர் புதியவராக இருந்த போதும் ஜாமிஆவுடன் இவருக்கு அதன் தோற்றம் முதலே நெருக்கமான உறவு இருந்தது. ஜாமிஆவை நிறுவுவது தொடர்பான பூர்வாங்க ஆலோசனைக் கூட்டங்களில் கலாநிதி சுக்ரி கலந்து கொண்டார். அப்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். ஜாமிஆ நளீமிய்யாவிற்கான பாடத்திட்டத்தை அமைக்கும் குழுவிலும் இவர் அங்கம் வகித்தார். இந்நாட்டில் ஜாமிஆ நளீமி;ய்யா போன்ற ஒரு முன்னோடி கல்வி நிலையத்திற்கான மாதிரியோ, பாடத்திட்ட அமைப்போ இலங்கையில் இல்லாதிருந்த காரணத்தினால் பாகிஸ்தான் போன்ற ஒரு முஸ்லிம் நாட்டைத் தரிசி;த்து அங்குள்ள இஸ்லாமிய கலாநிலையங்களுக்குச் சென்று அவற்றின் செயற்பாடுகளை அவதானித்து அங்குள்ள புகழ்பெற்ற அறிஞர்களைச் சந்தித்து  அவர்களது ஆலோசனைகளையும் பெற்று ஜாமிஆ நளீமிய்யாவிற்கான கல்விக் கொள்கையையும் பாடத்திட்டத்தையும் வகுப்பதே மிகப்பொருத்தமானதாக அமையுமென அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்தை நளீம் ஹாஜியாரும் ஏனையோரும் ஏற்றுக்கொண்டதோடு இதற்காக ஒரு குழு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கமைய ஐவர் கொண்ட ஒரு குழு 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணமாகியது. இக்குழுவுடன் கலாநிதி சுக்ரியும் சென்றார்.

இக்குழு இலங்கை திரும்பியதும் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் உள்ள பல்வேறு கலாநிலையங்களின் பாடத்திட்டங்களில் உள்ள பயனுள்ள அம்சங்கள் இணைக்கப்பட்டு ஜாமிஆவின் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இப்பணிகளில் எல்லாம் தனது காத்திரமான பங்களிப்பை கலாநிதி சுக்ரி வழங்கினார். இவ்வாறு ஆரம்பம் முதல் ஜாமிஆவின் விவகாரங்களில் பங்கேற்ற இவர் பணிப்பாளராகப் பதவியேற்க முன்பே அவ்வப்போது ஜாமிஆவிற்கு வருகை தந்து மாணவர்களுக்குத் தொடர்வகுப்புக்களையும் விரிவுரைகளையும் நடாத்தி வந்தார் என்பதும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்ததன் பின்னர் கலாநிதி சுக்ரியின் பணிகள் புதிய பல பரிமாணங்களைப் பெற்றதெனலாம். ஜாமிஆவினதும் முஸ்லிம் சமூகத்தினதும் நலனும் மேம்பாடுமே நளீம் ஹாஜியாரின் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்தது. அவரது கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மனிதராகவே கலாநிதி சுக்ரியைக் காணமுடிகின்றது. ஜாமிஆவின் மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியார் மேற்கொண்ட எல்லாப் பணிகளிலும் இவர் பங்கேற்றார்ளூ அவரோடு தோளோடு தோள் நின்று உழைத்தார். ஜாமிஆவின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் நளீம் ஹாஜியாருடன் இவரும் சென்றார். உலகின் பல பாகங்களுக்கும் சென்று ஜாமிஆவை அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பின்புலமாக நின்றவர் கலாநிதி சுக்ரி அவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளில் உள்ள பல கல்வி நிறுவனங்களுடனும், சமூக சேவை அமைப்புக்களுடனும் ஜாமிஆவுக்குத் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இவருடைய பங்கு மகத்தானதாகும். ராபிதா நிறுவனம், ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, ஜித்தா இக்ரஃ நலன்புரி அமைப்பு உட்பட மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடன் ஜாமிஆவிற்கு நெருக்கமான தொடர்புகள் உருவாக இவர் முன்னின்று உழைத்தார். ஜாமிஆவின் வெளிநாட்டு உறவுகளைப் பேணுவதில் இன்றுவரை சளைக்காமல் செயற்பட்டு வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இப்பணியில் அவருடன் இணைந்து செயற்படும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவருடன் மேற்கொண்ட பயணங்களை இங்கு நான் நினைத்துப் பார்க்கிறேன். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் நாங்கள் மேற்கொண்ட சில கஷ்டமான பிரயாணங்கள் எனது நினைவில் நிழலாடுகின்றன.

ஜாமிஆவின் பட்டச்சான்றிதழை சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாற்றுவதற்கு கலாநிதி சுக்ரி அரும்பாடு பட்டார். பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஜாமிஆவின் சான்றிதழை அதன் பட்டச் சான்றிதழுக்கு சமமானதாக ஏற்று அங்கீகரிப்பதற்கு ஜாமிஆவின் கல்வித்தரம் காரணமாக அமைந்தது போலவே கலாநிதி சுக்ரியின் ஆளுமையும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவரது முயற்சியின் விளைவே இஸ்லாமிய உலக பல்கலைக்கழக ஒன்றியத்தில் ஜாமிஆவுக்குக் கிடைத்த அங்கத்துவமாகும். தொடர்ந்து மூன்று தவணைகள் ஒன்றியத்தின் செயற்குழுவில் ஜாமிஆவின் சார்பில் இவர் அங்கத்துவம் வகித்தமையும் இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். பல சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஜாமிஆவிறகு விஜயம் செய்யவும் அவர்களில் சிலர் இங்கு தங்கி நின்று விரிவுரைகள் நடாத்தவும் வழிசெய்த பெருமையும் இவரைச் சாரும். மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஷேய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி, கலாநிதி யூஸூப் அல்கர்ழாவி, பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், கலாநிதி ஹூஸைன் ஹாமித் ஹஸ்ஸான், கலாநிதி அஹ்மத் அல்அஸ்ஸால் போன்ற பல அறிஞர்கள் இவரது ஏற்பாட்டின் பேரில் ஜாமிஆவிற்கு வருகைதந்தவர்களாவர்.

ஜாமிஆவின் வெளியீட்டுப் பணியகத்தின் வளர்ச்சிக்கும் கலாநிதி சுக்ரி பெரும் பங்காற்றியுள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெளிவரும் காலாண்டு இஸ்லாமிய சஞ்சிகையான ஷஇஸ்லாமிய சிந்தனை| யின் ஆலோசராகவும் தற்போது அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து வரும் இவர் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை தொடர்ந்தேர்ச்சையாக ஆக்கங்களையும் வழங்கி வருகின்றார். ஜாமிஆ வெளியீட்டுப் பணியகம் வெளியிட்ட நூல்களில் பல கலாநிதி சுக்ரி எழுதியவையாகும்.

ஜாமிஆ நளீமிய்யாவின் ஆய்வு நிறுவனத்திற்கூடாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு இவர் மேற்கொண்ட முயற்சி இவரது மிகப்பெரும் சாதனையாகும். உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம், முஸ்லிமல்லாத வரலாற்றுத்துறை அறிஞர்களை ஒன்று கூட்டி சர்வதேச தரத்திலான ஒரு கருத்தரங்கை நடாத்தி அதன் நிறைவாக இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஒரு பெரு நூலை தொகுத்தளிக்கும் காத்திரமான பணிக்கு முன்னோடியாக அமைந்தவர் இவரே. இன்று இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பேசும் முதற்தர உசாத்துணை நூலாக 1986 ல் இவர் தொகுத்து வெளியிட்ட “Muslims of  Sri Lanka- Avenues to Anitiquity”  எனும் நூல் விளங்குகின்றது.

சமூகப் பங்களிப்புக்கள்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இவர் மேற்கொண்ட மற்றொரு பணியே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கியமையாகும். அதன் நிருவாகத் தலைவராக இருந்து இவர் செய்த பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாகத் தோன்றிய இக்ரஃ தொழிநுட்பக் கல்லூரியின் உருவாக்கத்திலும் இவர் முக்கிய பங்காற்றினார். இன்றும் இக்கல்லூரியின் பொதுநிலைப் பொறுப்பாளராக (Custodian)  இருந்து வருகின்றார். ஜித்தா இக்ரஃ நலன்புரி நிறுவனத்திற்கும் இக்ரஃ தொழிநுட்பக் கல்லூரிக்கும் இடையே பாலமாக இருந்து செயற்பட்டவரும் இவரே.

பல்வேறு பொறுப்புக்களை சுமந்துள்ள நிலையிலும் கலாநிதி சுக்ரி ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டுவிடவில்லை. இந்த வகையில் பல நூல்களை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆங்கில மொழிக்கட்டுரைகள் The Muslim World League Journal, Islamic Studies, Journal of the Archaeological Survey Department, An Nahdah, Hamdard  Islamicus முதலான சர்வதேச தரம் மிக்க ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல ஆய்வுக் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ள கலாநிதி சுக்ரி அவற்றில் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிய போதிலும் இலங்கையின் தேசிய கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான பங்களிப்பை இவர் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார். இந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தினதும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறைகள் இவரது வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றன. மேலும் நாட்டின் பாடசாலைக் கல்வி வளர்ச்சிக்கும் இவரது பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. பாடசாலைகளின் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிக பாடத்திட்டங்களை வகுப்பதிலும் பாடநூல்களை எழுதுவதிலும் ஆசிரியர் கைநூல்களைத் தயாரிப்பதிலும் இவர் தனது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.

தேசிய மட்டத்திலான பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகிக்கும் இவர் அவற்றுக்கூடாக தனது நாட்டுக்கான பங்களிப்பையும் செய்துவருகின்றார். யுனெஸ்கோ நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய கவுன்ஸில், களனிப் பல்கலைக்கழக கவுன்ஸில், அரச மொழிகளுக்கான கமிஷன், மனித உரிமைக் கமிஷனின் தென் மாகாண கமிட்டி, குற்றத்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் கவுன்ஸில் போன்ற பல்வேறு அமைப்புக்களில் கடந்த காலங்களில் அங்கத்தவராக இருந்து பணிபுரிந்துள்ளார். மேலும் தொல்பொருள் ஆய்வுக்கான பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் நிருவாக சபை, தேசிய அரும்பொருட்காட்சியகத்தின் ஆலோசனை சபை, நூலக சேவைகள் சபை முதலான தேசிய அமைப்புக்களில் தற்போதும் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.

இளமைக் காலம் முதலே சுதந்திரமாக நின்று இஸ்லாமிய பிரசாரப் பணியில் ஈடுபட்டு வந்தவர் கலாநிதி சுக்ரி அவர்கள். ஆயினும் இஸ்லாமிய இயக்கப்பணிகளிலும் இவர் பங்கேற்க தவறவில்லை. இலங்கை இஸ்லாமிய இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி முகாம்கள் முதலானவற்றில் கலந்து கொண்டு தனது காத்திரமான அறிவுப் பங்களிப்பை செய்து வந்திருக்கின்றார். பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு கொண்டவர் இவர். பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆளுமையினால் இவர் ஆகர்ஷிக்கப்பட்டவராவார். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய எழுச்சிக்கு  முன்னோடிகளாக அமைந்த இமாம் ஹஸனுல் பன்னாவையும் மௌலானா மௌதூதியையும் இவர் பெரிதும் மதிக்கின்றார். ஷேய்க் யூஸூப் அல் கர்ளாவியின் பரந்த அறிவினாலும் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வியின் பண்பட்ட ஆன்மீகத்தினாலும் பேராசிரியர் குர்ஷித் அஹ்மதின் உயர்ந்த ஆளுமையினாலும் கவரப்பட்டவர் கலாநிதி சுக்ரி.

 

சுருங்கக் கூறின் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு பெரும் புலமைச் சொத்து கலாநிதி சுக்ரி;. இவரது பெறுமதியை என்றோ புரிந்து வைத்திருந்தவர் மர்ஹூம் நளீம் ஹாஜியார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியைப் பொறுப்பேற்க கலாநிதி சுக்ரியை ஜாமிஆவில் இருந்து விடுவிக்குமாறு நளீம் ஹாஜியாரிடம் வேண்டப்பட்டபோது அவர் கூறிய பதில் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். ஷஷகலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும் அவருடைய பாரத்திற்கு தங்கத்தை மறுதட்டிலும் வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் வேண்டப்பட்டால் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன்.

கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை நாளைய இலங்கை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவு கூரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் வாழும் காலத்திலேயே அவரது சேவை நலனைப் பாராட்டுவதே நன்றியுடமையாகும். இந்த வகையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ள அவரது மாணவர்களான நளீமிய்யா பட்டதாரிகள் அவரை கௌரவிக்குமுகமாக ஒரு பாராட்டு விழாவை நடாத்த முன்வந்தமை மெச்சத் தக்கதாகும். இவ்விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகின்ற இம்மலரும் இதில் இடம்பெறும் ஆக்கங்களும் கலாநிதி சுக்ரியைப் பாராட்டுவதாக மாத்திரமன்றி அவர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளாகவும் அமையும் என நான் நம்புகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா கலாநிதி சுக்ரி அவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்வையும் வழங்கி அருள வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திப்போமாக.

 

 

கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப் பணி – ஒரு பார்வை

எம்.எச்.எம். நாளிர்

 

அல்லாஹ் எனக்கு நிறைய செல்வத்தைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லா ஆனால் கல்விப் பாக்கியத்தைத் தரவில்லை. நான் படித்தது ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் உங்களுக்கு அறிவைக் கொடுத்துள்ளான். நாங்கள் எங்களது செல்வத்தைப் பொருத்தமான வழியில் பயன்படுத்த உங்களைப் போன்ற படித்தவர்களின் உதவியும் ஆலோசனையும் அவசியம். அப்படியில்லாத நிலையில் மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் நீங்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். எனக்கு சமூகப்பணியில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். (நளீம் ஹாஜியார்: வாழ்வும் பணியும் பக். 47-48).

 

இவை 1943ஆம் ஆண்டில் கலாநிதி எம்.ஏ.எம் சுக்கிரி அவர்கள், முதன் முதல் நளீம் ஹாஜியார் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது அவர் குறிப்பிட்ட வார்த்தைகளாகும். இதனைக் குறிப்பிட்டுள்ள காலாநிதி சுக்கிரி அவர்கள், சுல்தான் மஹ்மூத் கஸ்னவி – அல்பிரூனி சுல்தான் நூஹ் இப்னு மன்ஸுர், இப்னு ஸீனா, நிஸாமுல் முல்க்; இமாம் கஸ்ஸாலி என்றவாறு ஆட்சியாளர்களையும் அறிஞர்களையும் தொடர்புபடுத்துகிறார். நாமும், எம்.ஸி. சித்திலெப்பைக்கு வாப்பிச்சி மரைக்கார் அமைந்தது போல, நளீப் ஹாஜியாருக்கு கலாநிதி சுக்ரியை அல்லாஹ் தொடர்புபடுத்தி வைத்தான் எனக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

பொதுவாக, உலகின் கல்விப்பணி இரண்டு வகையில் இடம்பெறுகிறது. வகுப்பறைக்கற்றல் கற்பித்தல் செயற்பாடு அதில் ஒன்றாகும். கற்பவரும் கற்பிப்பவரும் நேரடியாக தொடர்புகொள்கின்ற இந்தப் பணி கல்வி உலகில் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றது. இது இருவழித் தொடர்பாடலுக்கூடாக இடம் பெறுகின்றது. இதனை முறைசார் கல்வி எனவும் குறிப்பிடலாம். சில சந்தர்ப்பங்களில் உரையாடல் மூலம் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது நவீன கல்வி முறைகளோடு நெருங்கிய தொடர்புடையது. இவ்வகைக் கல்விச் செயற்பாடு, நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைள் போன்ற அச்சு ஊடகங்களுக்கூடாகவோ, அல்லது வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம் போன்ற மின்னியல் ஊடகங்களுக்கூடாகவோ இடம்பெறுகின்றது. இன்று பெருவழக்காக வளர்ந்து வருகின்ற தொலைக்கல்வி முறையும் இதிலடங்கும்.

பொதுவாக பாடசாலைகளிலும், மதுரஸாக்களிலும் கற்றல்-கற்பித்தல் இடம் பெறுகின்றது. ஆனால் பெரும்பாலும் அங்கு பாடங்களே (ளரடிதநஉவள) கற்பிக்கப்படுகின்றன. அதாவது மொழி, கணிதம், வரலாறு, ஹதீஸ், தப்ஸீர் போன்ற பாடங்களை மையப்படுத்தியே கற்றல் கற்பித்தற் செயற்பாடு தொடர்கின்றது. இதன் முடிவில் கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் மிகச் சிறியதொரு விளைவேயன்றி முதன்மையான விளைவு அல்ல. அறிவு, திறன், மனப்பாங்கு, பழக்கவழக்கங்களில் ஏற்படுகின்ற, எதிர்பார்க்கின்ற அடைவுகளைப் பெற்றுக் கொள்வதே கற்றல் கற்பித்தற் செயற்பாட்டின் இலக்காகும். மற்றொரு வகையில் சொல்வதானால் முழுமையான ஆளுமையுடைய தனிநபர்களை உருவாக்குவது என்று குறிப்பிடலாம்.

இதனை, ஷஷகல்வி என்பது பாடபோதனைகளிலிருந்து வித்தியானசமானதும், ஒரு தனிமனிதனின் ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடியதுமாகும். பாடபோதனையின் நோக்கம் ஒரு தனிமனிதனுக்கோ குழுவினருக்கோ ஒரு வேலையைத் திறம்படச் செய்வதற்குப் பயிற்சியளிப்பதாகும். ஒரு மனிதன் சிறந்த தச்சனாக, வழக்கறிஞனாக, மருத்துவனாக விளங்கலாம். அதே நேரத்தில் அவன் அரைகுறைக்கல்வியைப் பெற்ற, ஒழுக்கநடத்தையற்ற, பண்பாடில்லாத மனிதனாக இருக்கலாம். அத்தககையவர்கள் தமது தொழில் துறைகளில் போதனை பெற்று நிபுணத்துவம் அடைந்தவர்களேயன்றி கல்வியைப் பெற்றவர்களல்லர்||;. (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு, பக். 02) என்று கலாநிதி சுக்ரி எடுத்துக் காட்டுகிறார்.

இந்த நோக்கை, கல்லூரிகளிலும் மத்ரஸாக்களிலும் கற்பிக்கின்ற பாடங்கள் எந்தளவு தூரம் நிறைவு செய்கின்றன என்பது கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் ஈடுபடுவோரின் அணுகுமுறையில் தான் தங்கியிருக்கின்றது. கல்வியின் நோக்கம் மாணவரின் உள்ளத்தில் தகவல்களையும் உணர்வுகளையும் திணிப்பதன்றி அவனைத்தூய்மையும் நேர்மையும் றிறைந்த ஒரு வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவதாகும். இதுவே எல்லா முஸ்லிம் கல்வியாளர்களதும் ஏகோபித்த கருத்தாகும். (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பக். 20) என்று இதனை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கலாநிதி சுக்ரி அவர்களின் கல்விப்பணி, வகுப்பறைக் கற்பித்தலோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. கொழும்பு, களனி, பேராதனை பல்கலைக்கழகங்களில் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் அவர் வகுப்பறைக் கற்பித்தலில்  ஈடுபட்ட அதேவேளை அதற்கு வெளியே முறைசாராக் கல்வி மூலம் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய காலத்திலேயே அவரது ஆக்கங்கள் எமது நாட்டுப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்று வந்தன. அவரையும் ஆசிரியர் குழாத்தில் இணைத்துக் கொண்டு ஷஷஅல் மதீனா|| என்ற சஞ்சிகை அவரது ஆக்கங்களுக்கு இடமளித்தது. பிரசித்த பாடசாலைகள், ஆசிரிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வெளியிடும் சஞ்சிகைகளிலெல்லாம் அவரது கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. அதேவேளை வானொலி உரைகளும், பொதுச் சொற்பொழிவுகளிலும் சமூகத்துக்கு அறிவூட்டிக் கொண்டிருந்தன.

ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கியபோது அவரது கல்வி;ச்சேவை இன்னும் விரிவடைந்தது. குறிப்பாக படித்த மத்தியதர வகுப்பினரை மையப்படுத்தி அவர் தனது கல்விச் செயற்பாட்டை விரிவுபடுத்தினார்;. அது முறைசாராக் கல்விப்பணியாகவே அமைந்தது. வகுப்பறையில் குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுள் ஒருவராகவன்றி, சமூகம் என்ற மாணவர் தொகுதிக்கு வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்பிப்பதில் அவர் ஈடுபாடு கொண்டார். அவரது பகிரங்கச் சொற்பொழிவுகள், வானொலி உரைகள், மாநாட்டுப் பேருரைகள், தொடக்கவுரைகள், ஆய்வுரைகள், விரிவுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் யாவும் இந்தப் பணியை நிறைவேற்றுவனாவாகவே உள்ளன.

அவரது கல்விப்பணி இளைஞர்களையும், படித்த மத்தியதர வகுப்பினரையும் மையப்படுத்தி நடைபோடுவதை அவதானிக்கலாம். பல்கலைக்கழகத்துக்கு வரும் பட்டதாரிகள் மூலம் கற்றுக் கொண்ட ஒரு பாடமாகவும் இதனைக் கருதலாம்.

நவீன உலகாயதவாதிகள் தமது பிரசார சாதனங்களான நூல்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற இலட்சியவாத சிந்தனைப் படை எடுப்புக்களுக்கு எமது இளைஞர் சமுதாயம் பலியாகி ஈமான் இஸ்லாம் என்பன சூறையாடப்பட்டுள்ளன. இப்பயங்கரமான காலகட்டத்தில் இளைஞர்களை இஸ்லாத்தின் பால் மீட்கும்பணி அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது. இதுவே இன்றைய ஜிஹாத் ஆகும்.  இஸ்லாத்தின் உன்னத உயர்ந்த கருத்துக்களை நவீன தத்துவங்களோடு ஒப்பு நோக்கி விளக்கி இஸ்லாமிய போதனைகளை வழங்கும் நூல்களையும் சஞ்சிகைகளையும் வெளியிடுவதன் மூலமே இத்தகைய பயங்கர சவாலை சமாளிக்க முடியுமென்பது எமது ஆழ்ந்த நம்பிக்கையாகும் என்று மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி அவர்களின் ஷகாலத்தின் அறைகூவலும் நவயுகத்தின் சவாலும்| என்ற நூலின் அறிமுகத்தில் எழுதியுள்ள கலாநிதி சுக்ரி அவர்கள், அவரது ஆக்கங்களை இந்தப் பாணியிலேயே வடிவமைத்துள்ளார். இதற்கு இஸ்லாமும் மனித உரிமைகளும் (1995), மதமும் அறிவியலும் (1994), இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் (1999) முதலிய நூல்களையும், இஸ்லாமிய சிந்தனை இதழில் தொடராக எழுதிவரும் ஆய்வுக் கட்டுரைகளையும் ஆதாரமாகக் குறித்துக் காட்டலாம்.

இஸ்லாமிய சிந்தனைகளை புத்திஜீவிகளுக்கு மத்தியில் உருவாக்குவதும், பரப்புவதுமென்ற அவரது இலக்கை மையப்படுத்தியே அவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட ஷஷஇஸ்லாமிய சிந்தனை|| என்ற ஜாமிஆ நளீமிய்யாவின் ஆய்வுச் சஞ்சிகை வெளியாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் வாழ்வையும் அதனோடு தொடர்புடைய விடயங்களையும் இஸ்லாமிய சிந்தனை, உளப்பண்பு கண்ணோட்டம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதற்குப் புறம்பான நிலைகளில் அணுக முற்படுகின்றனர்.  பெரும்பாலானோர் பெயரளவில் முஸ்லிம்களாகவும், இஸ்லாத்துக்கு முரணான வகையில் செயற்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலை முஸ்லிம்களின் கலாசார தனித்துவத்தின் சீர்குலைவுக்கு அடிப்படைக் காரணமாக அமைவதில் வியப்பில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் இந்த அவசரத் தேவையை பூர்த்தி செய்யும் இலட்சியத்தை முன் வைத்து ஷஇஸ்லாமியச் சிந்தனை| மலர்ந்துள்ளது என்று இஸ்லாமியச் சிந்தனையில் முதலாவது இதழில் (அக்டோபர் 1978) குறிப்பிட்டுள்ள அவர், அதன் தாக்கத்தை விளங்கிக் கொண்ட பின்னர் நூறாவது இதழில் ஷஇது சிந்திக்கும் வர்க்கத்தினரை நோக்கமாகக் கொண்டு| வெளியிடப்படுகிறது. எனவே அதன் வாசகர் மட்டம் குறுகியது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இந்தக் குறுகிய வட்டம் சமூகத்தில் மிகக் கணிசமாக சிந்தனைச் செல்வாக்கைச் செலுத்தும் ஆற்றல் படைத்தது. மக்களின் அறிவு, சிந்தனை ரசனைக்கேற்ப ஷஇஸ்லாமிய சிந்தனை|யின் தரத்தைப் பேணுவதைத் தவிர்த்து இஸ்லாமிய சிந்தனையின் தரத்திற்கு மக்களின் அறிவையும் சிந்தனையையும் உயர்த்துவதே எமது நோக்கம் (இஸ்லாமிய சிந்தனை – டிசம்பர் 2003) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் பரந்த அளவிலான புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் விரும்புகிறார். இந்த யுகம் முஸ்லிம் உம்மத்தை நோக்கி விடுக்கும் அறைகூவல்களை சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கல்விமான்களும், அறிஞர்களும் தேவைப்படுகிறார்கள். பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய ஷரீஆவை முஸ்லிம் சமூகத்தில் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க ஷபிக்ஹூல் அகல்லியா| போன்ற துறைகளில் அறிவும் ஆர்வமும் படைத்த அறிஞர்கள் அவசியப்படுகிறார்கள். பல்வேறு மதங்கள் பற்றிய அறிவையும் விளக்கத்தையும் பெற்று மதங்கள் பற்றிய உரையாடலில் பங்குபற்றி இஸ்லாத்தின் கருத்தை எடுத்துக் கூறும் ஆற்றல் படைத்த அறிஞர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த நாட்டில் எமது இருப்பையும் வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஆதாரபூர்வமாக நிறுவும் ஆற்றல் படைத்த வரலாற்று அறிஞர்கள் தேவைப்படுகிறார்கள் (இஸ்லாமிய சிந்தனை – ஒக்டோபர் – டிசம்பர் 1999) என்ற அவரது கருத்து அவதானமாக நோக்கப்பட வேண்டியதாகும்.

இங்கே மத்ரஸாக் கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் இணைத்து பேசுவதைக் காண்கின்றோம். கல்வியில் ஆன்மீகக்கல்வி, உலகக் கல்வி எனக் கூறுபோட்டுப் பார்ப்பதை அவர் எப்போதும் விரும்புவதில்லை. இதனை அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் வலியுறுத்தி வருகின்றார். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் ஓர் ஆத்மீகப் பரிமாணத்தை வழங்கி மனிதனின் முழு வாழ்வையும் ஒரு வணக்கமாக மாற்றும் சிறப்பம்சம் பெற்ற ஒரு மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது. முதலீடு. பொருளீட்டல், உழைப்பு செல்வப் பங்கீடு என்பன மதத்தோடும் ஆன்மீகத் துறையோடும் எத்தகைய தொடர்புமற்ற முற்றிலும் உலகியல் சார்ந்த முயற்சிகளாகவே பொதுவாகக் கருதப்படுகின்றன. ஏனைய மதங்களின் கண்ணோட்டமும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் இந்த முறையிலேயே உள்ளன. ஆனால் இவ்விடயத்தில் இஸ்லாத்தின் கண்ணோட்டம் முற்றிலும் வித்தியாசனமான வகையிலேயே அமைந்துள்ளது;.

இஸ்லாம் மனித வாழ்;வை லோகாயதம். ஆன்மீகமென்று இரு கூறாகப் பிரித்து நோக்கவில்லை. மதம் சார்ந்தவை, மதசார்பற்றவை என்ற பாகுபாடும் இஸ்லாத்துக்க முற்றிலும் அன்னியமானது. மனிதனின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், பொருளாதாரம், அரசியல், சமூக உறவு, கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தையும் பொறுத்தவரை அல்லாவினதும் அவனது தூதரினதும் போதனைகள் வரையறைகள் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு கட்டுக்கோப்பை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. பரந்து விரிந்த இப்பூமியை ஒரு வணக்கத்தலமாகவும், மனித வாழ்வு முழுவதையும் வணக்கமாகவும் மாற்றும் இப்பண்பு இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும். (ஸகாத்: கோட்பாடுகளும் நடைமுறையும் முன்னுரை ப ஐஐ) இந்தக் கருத்தை மறுதலைப்படுத்தி ஆத்மஞானிகள் உலகைத் துறந்தவர்களல்லர். அவர்கள் உலக நலனுக்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக கலாநிதி சுக்ரி அவர்களின் ஆத்மஞானிகளும் அறப் போராட்டமும் என்ற நூல் அமைந்துள்ளது.

வாழ்வைப் போன்றே கல்வியிலும் இந்த வேறுபாடு நோக்கப்படக்கூடாது என்பதை அவர் வலியுத்தி வருகிறார். ஜாமிஆவின் தோற்றமும் செயற்பாடும் விளைவுகளும் இதே சிந்தனையில் இடம்பெற்றுவருவதை அவதானிக்கிறோம். இஸ்லாமிய நோக்கில் அறிவியலுக்கும் மதத்துக்குமிடையில் மேற்குலகில் நிலவுவது போல எத்தகைய மோதலும் நிலவ முடியாது. ஏனெனில் விஞ்ஞானமும் மதமும் ஒன்றையொன்று அணிந்ததாக மனிதனின் இயற்கையிலேயே அமைந்துள்ளன. இஸ்லாம் உருவாக்க முனையும் மனிதனின் இந்த இரண்டு அம்சங்களோடும் தொடர்புடைய அறிவு எத்தகைய முரண்பாடோ மோதலோ இன்றி சமபலநிலையில் தொழிற்படும். ஏனெனில் ஒன்று அவன் இறைவனுக்கு அடிபணிந்து வாழத் துணைபுரிய மற்றது இறை சிருஷ்டிகளின் தன்மை, குணவியல்புகள், பிரபஞ்சத்தில் அதன் செயற்பாடுகள் பற்றிய அறிவைப் பெற தூண்டுகின்றது. அறிவியல் அறிவினதும், ஆத்மீக அறிவினதும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் விளைவாக இறை நம்பிக்கையும் இறையச்சமும் நிறையப்பெற்ற மனிதர்கள் உருவாவார்கள். இதனையே அல்குர்ஆனின் 35:28ஆம் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. (இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் பக். 10)

ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று முறைசாராக் கல்விக்குத் துணைபுரியும் பேச்சு, எழுத்து தொடர்பாக கலாநிதி சுக்ரி அவர்கள் தெளிவான கருத்தை முன்வைக்கிறார். எழுத்தாளன் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் இலட்சியங்கள், உணர்வுகள், ஆசாபாசங்கள் பிரச்சினைகள் அனைத்தும் அவனைப் பாதிக்கின்றன. ஆதலால் அவனது எழுத்தில் சமூகம் பிரதிபலிக்கும் சூனியத்திலிருந்து இலக்கியம் படைக்க முடியாது. (முஸ்லிம் எழுத்தாளர் முன்புள்ள பொறுப்பு பக். 9-10) என்று கூறும் அவர், ஒருவனுக்கு பேசக்கூடிய, எழுதக்கூடிய ஆற்றல் இருக்கின்றதென்றால் அவன் எதனையும் பேசவும், எழுதவும் முடியுமென்பது கருத்தல்ல. அது அல்லாஹ் அவனுக்களித்த அமானிதம். ஆதலால் அவனுடைய எழுத்தில், பேச்சில் இலட்சியம் இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கலை கலைக்காக என்ற கோட்பாடு நிலவி வருகிறது. அவன் சமூகத்திலிருந்து விடுபட்டு நன்றாக உலகை சிருஷ்டித்து அதில் சஞ்சரிக்கின்றான். இதனால் அவனுக்கும் சமூகத்துக்கும் எத்தகையை தொடர்பும் இருப்பதில்லை. இதனை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கொள்கையோடு இலக்கியம் படைக்க வேண்டும் என்பதைத்தான் ஸூரதுஷ் ஷூஅரா எடுத்துக்காட்டுகின்றது. கலை வாழ்க்கைக்காக என்ற கருத்தை முன்வைக்கின்றது. ஓர் ஒழுக்கங்கெட்ட இலக்கியவாதியினால் சமூகத்துக்கு ஏற்படுகின்ற பேரழிவு, ஜெங்கிஸ்கானின் இராணுவத்தால் ஏற்பட்ட பேரழிவை விடப் பயங்கரமானது. (மேற்படி நூல். பக். 20-21)

இவ்வாறே கல்வியோடும், கற்றல் கற்பித்தலோடும் நேரடியாக தொடர்புடையவர்கள் என்ற வகையில், ஆசிரியர்களின் பொறுப்புக்கள் பற்றி அவர் நிறைய எழுதியும், பேசியும் வருகிறார். கல்வியமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், அஹதிய்யா மத்திய சம்மேளனம் போன்ற பல்வேறு மையங்களால் நடாத்தப்படும் ஆசியர்களுக்கான செயலமர்வுகளில் காத்திரமான கருத்துக்களை வழங்கி வருகிறார். இஸ்லாமிய கல்விப் பாடத்திட்டங்களை வகுப்பதிலும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகள், மாணவர்களுக்கான பாடநூல்கள் போன்றவற்றை உருவாக்குவதில் ஆலோசனை வழங்குவதிலும் அவருக்கு நிறைய பங்குண்டு. அந்த வகையில் அவரது கல்விப்பணி ஆசிரிய சமூகத்தால் எப்போதும் எதிர்பார்க்கப் படுவதொன்றாகும்.

இஸ்லாம் பாடம் தொடர்பாக அவர்; தெரிவிப்பதாவது, ஷஷமதம் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த அம்சமாகும். அது ஒரு பாடமாக போதிக்கப்படுவதால் மட்டும் இஸ்லாம் உருவாக்க விரும்பும் ஒழுக்க, ஆன்மீகப் பண்புகள் பொதிந்த ஆளுமையுடைய மனிதர்களை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தவரை அது வகுப்பறைப் பாடமாக மட்டும் அமையாமல் முஸ்லிம் மாணவர்களின்; வாழ்க்கையோடு தொடர்புடைய நடைமுறை அம்சமாக போதிக்கப்படல் வேண்டும். இஸ்லாம் வெறும் பாடபோதனையாக, சிந்தனாரீதியாக அமையாமல் முஸ்லிம் மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய நடைமுறை அம்சமாகப் போதிக்கப்படல் வேண்டும். வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையதாக விளங்கும் வகையில் முஸ்லிம் ஆசிரியரின் குணநலங்கள், பண்புகள், ஆளுமை என்பனவும,; முஸ்லிம் பாடசாலைகளின் சூழலும் அமைதல் வேண்டும். (இஸ்லாமிய சிந்தனை ஜூலை – செப். 1983) என்பதாகும்.

இவ்வாறு சிந்தனை ரீதியான கருத்துக்களை முன்வைப்பதில் மட்டும் அவர் நின்றுவிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் வழங்கி வருகிறார். ஜாமிஆ நளீமீய்யாவின் அபிவிருத்தியில் அவரது பங்களிப்புக்கள் மறைக்க முடியாதவை. அதே நேரத்தில் அந்த வட்டத்துக்கு வெளியே கலாநிதி சுக்ரி அவர்களின் பங்களிப்பை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் 1980ல் உதயமானது.

நளிம் ஹாஜியாருடன் உம்றாச் செய்துவிட்டுத் திரும்பிவரும் வழியில் இருவரும் கராச்சி இன்டர்கொண்டினன்டல் ஹோட்டலில் தங்குகிறார்கள். நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் நளீம் ஹாஜியாரின் உள்ளத்தில் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி தொடர்பாக கவலை மேலெழுகின்றது. அடுத்த படுக்கையில் தூங்க முயன்று கொண்டிருக்கும் சுக்ரி அவர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதன் விளைவாக இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் கருக்கொள்கின்றது.

முஸ்லிம் மாணவர்களின் உயர் கல்விக்காக எவ்வாறு உதவலாம் என்பது பற்றி தொடராக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு 1981ல் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் உருவாகின்றது. அதன் நிருவாகத் தலைவராக கலாநிதி சுக்ரி அமர்த்தப்படுகிறார். முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை வளர்ப்பதற்காக வார இறுதி நாட்களில் வளவாளர்கள் மூலம் வகுப்புக்களை மாவட்டம் தோறும் நடத்துதல், உயர்கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கல், தொழினுட்பக் கல்லூரி ஒன்றை அமைத்தல் என்ற கருத்திட்டங்களுக்கூடாக கலாநிதி சுக்ரி அவர்களின் தலைமையிலான நிருவாகக்குழு செயற்பட்டது.

இதன் காரணமாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1942 முதல் முஸ்லிம்களின் பல்கலைக்கழகப் பிரவேசம் 1.5 முதல் 2.9 வரையிலிருந்த விழுக்காடு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் செயற்பாட்டுக்கூடாக  1984ல் 5.5 விழுக்காடாகவும் 1987-88ல் 8.17 விழுக்காடாகவும் உயர்ந்தது. பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கை பற்றிய அனுபவமுடைய கலாநிதி சுக்ரி அவர்களின் பங்களிப்பு, இயக்கத்தை உரிய இடத்துக்கும், உரிய நபர்களுக்கும் நகர்த்துவதில் பெரும் பணியாற்றியுள்ளது எனலாம். 1992ல் இக்ரா தொழினுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தில் மூன்றாவது மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நளீமிய்யா இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யப் போகின்றது என்பதை நளீம் ஹாஜியார் பிரகடனப்படுத்தினார். அதற்காகத் தூண்டியவரும், துணைநின்றவரும் கலாநிதி சுக்ரி தான் என்பதை எவரும் அறிவர். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையுடனும், பேராசிரியர்களுடனும் தொடர்புகொண்டு, ஆய்வாளர்களைத் தெரிவு செய்து, கட்டுரைகளைத் தொகுத்து, ஆய்வுரீதியான முன்னுரையொன்றை எழுதி ஷஷஇலங்கை முஸ்லிம்களின் பூர்வீக பாரம்பரியத்துக்காக பார்வை|| (1986) என்ற நூலை வெளியிடுவதில் கலாநிதி சுக்ரி அவர்கள் பெரும்பங்காற்றியிருப்பதை சமூகம் மறக்கமாட்டாது. (நளீம் ஹாஜியார்: வாழ்வும் மணியும் பக். 152-158) இது ஒரு சமூகப்பணி மட்டுமல்லளூ ஒரு கல்விப்பணியுமாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தன் பரந்த தன்மையை எடுத்துக்காட்டுவதில் கலாநிதி சுக்ரியின் பங்கு தட்டிக்கழிக்க முடியாதது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இஸ்லாம் ஆன்மீகப் பண்புகளை மட்டும் கொண்டதல்ல என்பதை எடுத்துக்காட்டும் அவர், அதற்காதாரமாக இஸ்லாத்துடன் தொடர்பற்றதாகக் கருதப்பட்டுவந்த பல கலைகளையும் அவற்றுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான தொடர்பையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இஸ்லாமிய அரசியற் கோட்பாடு (13:1) இஸ்லாத்தின் நோக்கில் தொல்பொருளியில் (14:1) முஸ்லிம்களும் பல்கலைக் கழகப் பாரம்பரியமும் (18:3) முஸ்லிம்களும் வரலாற்றுக்கலையும் (20:2) இஸ்லாமிய நோக்கில் ஆய்வு (20:3) ஆய்வுக்கான அவசியமும் ஆய்வுபற்றிய இஸ்லாமிய நோக்கும் (25:6) நாகரிகம் பற்றிய இரு கண்ணோட்டங்கள் (21:1) அல்குர்ஆன் ஆய்வு முறையும், மேற்கத்திய ஆய்வுமுறையும் (22:1) இஸ்லாமிய அழகியற் கோட்பாடும் மேற்கத்திய அழகியற் கோட்பாடும் (22:3) முஸ்லிம்களின் இசைப் பாரம்பரியமும் (23:3) கட்டடக்கலைப் பாரம்பரியமும் அதன் வளர்ச்சியும் (24:1-2) இஸ்லாமிய உளவியலும் மேற்கத்திய உளவியலும் (25:4) போன்ற இஸ்லாமிய சிந்தனையில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளே இதற்குதாரணமாக எடுத்துக்காட்டலாம். அதே நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகப் பண்புகளை விளக்குகின்ற ஆக்கங்களும் வெளியாகியுள்ளன. முஸ்லிம் அல்லாதோருக்குக் குறிப்பாக புத்திஜீவிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணியும் அவரால் நிகழ்ந்து வருகின்றது. தேசிய, சர்வதேசிய மாநாடுகளில் நிகழ்த்தப்படுகின்ற அவரது உரைகள் இத்துறையில் பெரும்பணியாற்றி வருகின்றன.

இவ்வாறே, நவீன முஸ்லிம் உலகுக்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்த சிந்தனையாளர்களையும் சீர்திருத்தவாதிகளையும் இவர் அறிமுகப்படுத்தி வருகிறார். இஸ்லாமிய சிந்தனைகளில் வெளியான ஷாஹ் வலியுல்லாஹ்வின் பங்களிப்பு (2:3) இமாம் கஸ்லாலியின் பங்களிப்பு (1:4, 2:3) இப்னு தைமிய்யாவின் தஸவ்வுப் கோட்பாடு (9:3) அல்பிரூனியின் மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வு (14:3) இப்னு பதூதா (17:1-2) முஹம்மத் அல்கஸ்ஸாலி (18:2) ஜமாலுத்தீன் ஆப்கானி (21:3) இப்னு கல்தூன் (25:3) மாலிக் பின் நபி (24:3-4) அபுல் ஹஸன் அலி நத்வி (22:2) என்ற தலைப்புகளில் இஸ்லாமிய சிந்தளையில் எழுதப்பட்ட ஆக்கங்கள் இதனை நிரூபிக்கின்றன.

எனவே, இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சிந்தனையை வளர்ப்பதில் கல்விப்பணியை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தி, முறைசார், முறைசாரா கல்விமுறைகளுக்கூடாக அதனைப் பரவலாக்கும் முயற்சியிலீடுபட்டு சமயக்கல்வியையும், உலகியற் கல்வியையும் சமநிலையில் வளர்ப்பதற்காக ஆக்கபூர்வமான உழைப்புக்களில் பங்குகொண்டு, இலங்கை முஸ்லிம்; கலாநிதிகளுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கின்ற கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களைப் பாராட்டுவது முஸ்லிம் சமூகத்தின் இன்றியமையாத கடமையாகும். அல்லாஹ் கலாநிதி அவர்களுக்கு நீடித்த ஆயுளையும், தொடர்ந்து கல்விப்பணியாற்றுவதற்கான வாய்ப்புக்களையும் வழங்கி அருள்வானாக.

 

 

 

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி எனது நினைவலைகள்…

எம்.ஐ.எம். அமீன் B.A (Hons.), M.A Cey.
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்
பேராதனைப் பல்கலைக்கழகம்

 

1967 இல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து வகுப்புக்குச் சென்றபோதுதான் நான் முதன்முறையாக கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களைச் சந்தித்தேன். ஆசிரியர் மாணவர் என்ற உறவின் அடிப்படையிலேயே அச்சந்திப்பு இடம்பெற்றது. கலாநிதி சுக்ரி அவர்கள் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு அப்போதுதான் விரிவுரையாளராக இணைந்திருந்தார். அவ்வாண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்களும் மர்ஹூம் மௌலவி முஃதார் ஏ. முஹம்மது அவர்களும் நானும் அறபு, இஸ்லாமிய நாகரிகப் பாடங்களை எமது பட்டப்படிப்புக்கான பாடங்களாகத் தெரிவு செய்திருந்தோம். நான் அறபு மொழியை மத்ரஸா ஒன்றில் படிக்காது சுயமாக க.பொ.த. (உயர்தரம்) வரை பயின்று இருந்தேன். ஆதலால் அறபு மொழியில் தேர்ச்சிபெற்ற மற்றிருவருடன் சேர்ந்து படிப்பது எனக்கும் பெரும் சிரமத்தைத் தரும் என்று கருதி கலாநிதி சுக்ரி அவர்களிடம் வகுப்பறைக்கு வெளியே நின்று கலந்துரையாடினேன்.  தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும் நேரசூசிக்கு அப்பால் சென்று தான் பாடபோதனையை நடாத்துவதாகவும் கூறி அப்பாடத்தைத் தொடர்ந்து படிக்குமாறு ஊக்குவித்தார்.

எமது வகுப்பிலிருந்த மற்றிருவரும் நானும் கூட கலாநிதி சுக்ரியை விட வயதில் மூத்தவர்கள். மூவரும் பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டே பல்கலைக்கழகப் பாடநெறியைத் தொடர்ந்தோம். அப்போது அவர் இளம் விரிவுரையாளராக இருந்தபோதும் எங்களது பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு நேரசூசியை அமைத்துக் கொடுத்தார்.

எங்களுடன் அவர் எப்போதும் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். பாடங்களை நன்கு திட்டமிட்டு ஆயத்தப்படுத்தி வந்து கற்பிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. பாடங்களைப் பயில்வதற்கு அவர் எங்களை வழிநடத்திய முறை நன்கு பயனுள்ளதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே நான் எழுத்துத் துறையில் ஓரளவு ஈடுபாடு கொண்டிருந்தேன். அக்காலை வெளிவந்த அல்ஹஸனாத் போன்ற வெளியீடுகளில் எழுதி வந்தேன். நான் எழுதிய சில கட்டுரைகளை வாசித்துவிட்டு என்னை மேலும் எழுதுமாறு ஊக்குவித்தார். எனது எழுத்துத்துறை வளர்ச்சியில் அவருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. கலைமானிப் பட்டத்துக்கான ஆய்வு நூலை எழுதும் போதும், அதன் பின் நான் இஸ்லாமிய நாகரிகத்துறை சார்ந்த நூல்களை எழுதும்போதும் பல ஆலோசனைகளை வழங்கினார். கேட்டபொழுதுகளில் எல்லாம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியும் நூல் வெளியீட்டில் எனது நூலை விமர்சித்துப் பாராட்டியும் ஊக்குவிப்பு வழங்கினார். கல்வி, சமூகவியல் சார்;ந்த எந்தப் பிரச்சினைகளின் போதும், தொலைபேசியூடாகக் கேட்டபோதும் அவர் ஆலோசனை கூறத் தயங்கியதில்லை.

பட்டப்படிப்பை முடித்த பின் நான் மாவனல்ல பதுரியா மஹா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது என்னுடன் தொடர்பு கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளர் வெற்றிடம் ஒன்றை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்குமாறும் தூண்டினார். பதுரியா மஹா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தியில் நான் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்ததால் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைவதற்கான ஆர்வம் என்னிடத்தில் எழவில்லை. இதனை அறிந்து அவர் என்னை மீண்டும் தூண்டினார். எனது வி;ண்ணப்பப்படிவம் இன்னும் வந்து சேரவில்லை என்றும் இன்னும் இரு தடவைகள் மட்டுமே கால அவகாசம் உண்டு என்றும் ஞாபகமூட்டி நேரடியாக விண்ணப்பப் படிவத்தைக் கையளிக்குமாறும் கேட்டார். அவரது தொடர்ந்த இத்தூண்டுதல் காரணமாகவே நான் அப்பதவிக்கு விண்ணப்பித்தேன். அவரது தூண்டுதல் இல்லாதிருந்தால் பல்கலைக்கழக சேவையில் இணைந்திருக்க மாட்டேன்.

அப்பல்கலைக் கழகத்தில் மாணவனாகப் பயின்ற போதும், விரிவுரையாளராகக் கடமையாற்றிய போதும் சுக்ரி அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு அம்சங்கள் பற்றிக் கலந்துரையாடியுள்ளேன். சமய சிந்தனையும் சமயப் பற்றும் அவரிடம் இழையோடிருந்ததையும் படித்த வர்க்கம் சமய சிந்தனையுடன் சமூக சேவைகளில் ஈடுபடுதல் அவசியம் என்ற கருத்து அவரிடம் ஆழமாக வேரூன்றி இருந்ததையும் அக்கலந்துரையாடல்களின்போது அறிய முடிந்தது. ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக சமய சார்பற்ற சிந்தனைப்பாங்கு வலுவடைந்திருந்த ஒரு காலப் பகுதியில் சுக்ரி எனும் இளம் விரிவுரையாளர் இவ்வாறு சமய சிந்தனை சார்புடையவராக இருந்தமை எமக்கிடையே உறவு வலுவடைவதற்கான பிறிதொரு காரணியாகும். அவர் சோஷலிச, கொம்யூனிசக் கோட்பாடுகளின் போலித்தன்மை பற்றி கலந்துரையாடல்களின்போது இடைக்கிடை சுட்டிக் காட்டுபவராக இருந்தார்.

சமய சிந்தனை மேலோங்கிய முஸ்லிம் சமூகம் ஒன்றின் தேவையை அவர் தன் இளமைக் காலத்தில் உணர்ந்திருந்தமைதான் அவரைப் பல்கலைக்கழகத்தின் புகழ்மிக்க பதவியையும் உதறித் தள்ளிவிட்டு நளிமீய்யாவின் பணிப்பாளர் பதவியை ஏற்கத் தூண்டியிருக்க முடியும். கொழும்பு ஸாஹிராவில் க.பொ.த. உயர்தர வகுப்பில் படிக்கும் போது அக்கல்லூரியின் அதிபராக இருந்த மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் அக்காலை புகழும் செல்வாக்கும்மிக்க இலங்கையின்; நிருவாகச் சேவைப் (C.C.S)  பதவியைத் துறந்துவிட்டு முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக ஸாஹிராவின் அதிபராகப் பதவியை ஏற்றிருந்தார். அவரது அம்முன்மாதிரியும் சுக்ரியை பல்கலைக் கழகத்தைத் துறந்து நளிமீய்யாவை அடையத் தூண்டுகோலாக இருந்திருக்க முடியும்.

அறிஞர் எம்.சி. சித்திலெப்பை 1884 மார்ச் 31 ஆந் திகதி வெளியிட்ட ‘முஸ்லிம் நேசனில்’ உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் மாணவர்களுக்கு வழங்கி அவ்விரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்க வேண்டுமென்று எழுதினார். இந்தியாவில் ஹைதராபாத் நகரில் அமைக்கப்படப் போகின்ற கல்லூரி எத்தகைய கல்வியை வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் போதே மேற்குறித்த கருத்தை எடுத்தாண்டார். கண்டி மாநகரில் அவர் 1884இல் கண்ட இக்கனவு பேருவலையில் 1973ம் ஆண்டு நளீம் ஹாஜியாரின் தியாகத்தால் நனவாகியது. இவ்விரு துறைகளிலும் தகைமை பெற்ற ஒருவர் அதனை வழிநடத்துவதற்குத் தேவைப்பட்டார். அறிஞர் சித்திலெப்பை 1892 இல் தோற்றுவித்த மருதானை ஸாஹிராக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையில் சிறப்புப் பட்டத்தையும,; எடின்பரோ பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருந்த கலாநிதி சுக்ரி இப்பதவிக்குத் தகுதியானவர் என்று இனங் காணப்பட்டார். உலகியற் கல்வியிலும் சமயத்துறைக் கல்வியிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தமையும் இளமைத் துடிதுடிப்பு அவரிடம் இருந்தமையும் நளீமீய்யா பணிப்பாளர் பதவிக்கு அவர் இனங்காணப்படுவதற்குக் காரணமாயின. அதனால் நளீமிய்யாவில் காலியாகியிருந்த பணிப்பாளர் பதவியை ஏற்குமாறு அவர் கேட்கப்பட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறையின் தலைமைப்பீடம் பேராசிரியர் செய்யது அஃதல் இமாம் ஓய்வு பெற்றதால் காலியாக இருந்தது. அவ்விடத்தை நிரப்பி அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையை விருத்தி செய்வதற்கு சுக்ரியின் உதவி அவசியமாகியது. பட்டப்பின்படிப்பைப் பூர்த்தி செய்த மற்றெவரும் அப்போது பேராதனையின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையில் இருக்கவில்லை. பொதுநலவாய புலமைப்பரிசிலைப் பெற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து சுக்ரி அவர்கள் எடின்பரோ சென்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்று வந்திருந்ததால் தொடர்ந்து பேராதனையில் கடமையாற்றி அப்பல்கலைக் கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறையினதும் வளர்ச்சிக்கு உதவுவார் என்றே பல்கலைக்கழக விரிவுரையாளர் சமூகம் கருதியது.

பாரம்பரியப் பாணியில் சமய கல்வியை வழங்கும் மத்ரஸாக்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்தன. இந்த மரபுக்கு மாற்றமாக நளிமீய்யா உலகியற் கல்வியையும் சமயக் கல்வியையும் சமகாலத்தில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நளீமிய்யா உதவ முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் இருந்தது. இவ்விழிப்புணர்ச்சியை நளிமீய்யாவினூடாக சமூகத்துக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பை நன்கு பயன்படுத்த கலாநிதி சுக்ரி போன்ற ஒருவர் தேவைப்பட்டார். இதனால் சுக்ரி ஒரு மனப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி தன் நண்பர்கள், அறிஞர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் கதைத்தது போல பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள் என்ற தோரணையில் எங்களுடனும் பல சந்தர்ப்பங்களில் கதைத்ததுண்டு. சமூக நலன் கருதி நளீமிய்யாவின் பணிப்பாளர் பதவியை ஏற்கப் போவதாக ஒரு தினம் என்னிடம் கூறினார். இது பற்றி உறுதியான ஒரு தீர்மானம் எடுத்துவிட்டார் என்று கருதினேன். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத்துறையில் பட்டப்பின்படிப்பு நெறிகளில் தேர்ச்சி பெற்ற ஒருவரும் இருக்கவில்லை. ஆதலால் சுக்ரியை இழப்பது பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையில் பயில்வோருக்கு மட்டுமன்றி அதன்பால் ஆர்வம் காட்டுவோருக்கு பெரும் நஷ;டம் என்று கருதி அவரது முடிவை மாற்ற முடியாது போனாலும் கால தாமதப்படுத்தும் நோக்கோடு கதைத்தேன். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பணியாற்றுமாறும் நளிமீய்யாவில் ஒரு கௌரவப் பணிப்பாளர் என்ற அந்தஸ்தில் செயற்பட்டு வழிகாட்டுமாறும் அறபுத்துறையில் அவரது மாணவர்களாகிய ஏ.எல்.எம். இப்றாஹிம் அவர்களும் நானும் பணிபுரிவதால் அவருக்கு நாம் முழுமையாக ஒத்தாசையாக இருந்து அவரது வேலைப்பழுவைக் குறைக்க முடியும் என்றும் ஆலோசனை கூறினேன். அப்போது அவர் ‘நான் நளிமீய்யாவில் பணிப்பாளர் பதவியை ஏற்க முடிவு எடுத்துவிட்டேன்’ என்று உறுதியாகக் கூறினார்.

அவரது இம்முடிவு பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அறபுத் துறைக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் பதவியேற்று ஒரு வருடமளவே கழிந்திருந்தது. எனது பட்டப்பின் படிப்பு நெறியை அறபுத்துறையில் அவரது வழிகாட்டலில் மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரும் நஷ;டமாகியது. அதுமாத்திரமன்றி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அறபுத்துறையில் அப்போது பட்டப்பின்படிப்புத் தகைமை பெற்ற ஒருவரும் இல்லை என்பதைக் காண்பித்து அறபு, இஸ்லாமிய நாகரிகப் பாடங்களின் உள்வாரி சிறப்புத் துறைப் பயிற்சி நெறிப்பாட போதனைக்குப் பல்கலைக்கழக நிருவாகம் அதன்பின் அனுமதி கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்து அமுல்படுத்தியது. கலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவில் பணியாற்றி சிறப்புமிக்க பணிகளை மேற்கொண்டு சமூகத்துக்கான சேவைகளைச் செய்தபோதும் பல்கலைக்கழகத்தை விட்டு அவர் நீங்கியமை எதிர்காலத்தில் அவர் அடைய முடிந்திருந்த பல பதவி உயர்வுகளைப் பெறும் வாய்ப்பை இழக்கச் செய்தது. பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து அவர் இருந்திருந்தால் ஒரு பேராசிரியராக மட்டுமன்றி பல்கலைக் கழகம் ஒன்றின் உபவேந்தராக பதவி உயர்வு பெறவும் அதன்வழி பொதுநலவாய நாடுகளின் கல்விமான்களிடையே அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவும் முடியும். அத்தகைய அருமையான வாய்ப்புக்களை இழப்பதை ஒரு பொருட்டாகக் கருதாது, நளிமீய்யாவில் பணியாற்றுவதனூடாக சமூம மறுமலர்ச்சி ஒன்றுக்கு வித்திடலாம் என்ற எதிர்பார்ப்புடன்தான் பல்கலைக்கழகத்தில் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமாச் செய்திருப்பார் என்றே கருதுகின்றேன்.

பல்கலைக்கழகத்தில் போதனாசிரியர் பதவியில் இருந்து விலகிய போதும் அதன் வெளிவாரி வளவாளராகத் தொடர்ந்து ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக் கழகத்தின் பட்டதாரிப் பாடநெறி, பட்டப்பின்படிப்புப் பாடநெறி போன்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதி;ல் பல சந்தர்ப்பங்களில் உதவியுள்ளார். பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு பரீட்சைகளில் பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சகராகத் தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றார். புதிதாத தோற்றுவிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கௌன்சில் உறுப்பினராகவும,; பாடநெறிகளை வடிவமைக்கும் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்கலைக்கழகப் பாடபோதனையில் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும் தொடர்ந்தும் இத்துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகப் பாடங்களின் பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்கு கொண்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

சிறந்ததொரு ஆய்வாளராகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் நடுநிலை நின்று பிரச்சினைகளை அணுகுபவராகவும் இருப்பதால் முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி இலங்கையர் சமூகத்தில் அவர் பிரபல்யம் பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அறபுமொழிக் கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருவதும் இலங்கையின் புதைபொருள் ஆய்வாளர் சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராக இருந்து செயற்படுவதும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாக நிறுவப் பெரும் துணையாகலாம்.

கால் நூற்றாண்டு காலமாக நளிமீய்யாவில் அவர் ஆற்றிவரும் பணியை மதிப்பிடுவதற்கு நளிமீய்யாவின் உள்ளிருந்து எழும் ஆய்வாளர்களே மிகப் பொருத்தமானவர்கள் ஆவர். எனினும் நளிமீய்யாவை மையமாக வைத்து இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத அவர் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. வரலாற்றுத்துறை சார்ந்த முஸ்லிம்களல்லாத கல்விமான்களின் துணை கொண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக Muslims of Sri Lanka – Avenue to Antiquity எனும் நூல் மூலம் முன்வைத்துள்ளார். முஸ்லிம் சமூகத்துக்கு வரலாறு இல்லை என்ற குறையை இதன் மூலம் நீக்கியுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து எழுத வேண்டும் என்ற தேவையை 1880 களில் அறிஞர் சித்திலெப்பை வலியுறுத்தினார். இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனி இனத்தவர் அல்லர், அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழ் இனத்தவர்கள் என்று சேர் பொன்னம்பலம் ராமநாதன் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக 1907இல் ஐ.எல்.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் எழுதிய ‘திரு. இராமநாதனது இலங்கைச் சோனகர் இன வரலாறு எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு திறனாய்வு’ எனும் நூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தான் எழுதவில்லை என்றும் அதனை எதிர்கால சந்ததிக்காக விட்டுச் சென்றுள்ளேன் என்றும் குறித்துள்ளார். அறிஞர் சித்திலெப்பையும் முஸ்லிம் சமூக மேம்பாட்டுக்காக உழைத்த ஐ.எல்.எம்.ஏ. அஸீஸூம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று கண்ட கனவு கலாநிதி சுக்ரி அவர்கள் நளிமீய்யாவை மையமாக வைத்து மேற்கொண்ட முயற்சியால் நனவாகியுள்ளது.

பல நூல்களின் ஆசிரியரான கலாநிதி சுக்ரி உள்நாட்டு வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளதுடன் நளிமீய்யாவின் இஸ்லாமிய சிந்தனை எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக நின்று அரும்பணியாற்றுகின்றார். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் ‘இஸ்லாமிய சிந்தனை’க்கு ஒரு சிறப்பிடம் உண்டு. குறிப்பாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள், சமூக சீர்திருத்தத்தை  விளையும் புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இச்சஞ்சிகை பெரிதும் பயன்படுகிறது. தரமுள்ள இளம் எழுத்தாளர்கள் பலருக்கு அது களம் அமைத்துக் கொடுத்து அவர்களை எழுத்துலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் இஸ்லாமிய நாகரீகம் எனும் துறை சார்ந்த மாணவர்களுக்கு இச்சஞ்சிகை ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.

கலாநிதி சுக்ரி வெளியுலக பல்கலைக் கழகங்களுடன் நளிமீய்யாவைத் தொடர்புபடுத்தி நளிமீய்யா மாணவர்க்கான கல்வி வாய்ப்பை புகழ்மிக்க பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக பெற்றுக் கொடுத்துள்ளமை கருத்திற் கொள்ளத்தக்கதாகும். அறிஞர் அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை நூல்வடிவில் கலாநிதி சுக்ரி வழங்கியதோடு நில்லாது அவரை நளிமீய்யாவுக்கு அழைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் வெளியுலக முஸ்லிம் அறிஞர்களுக்கும் இடையே அறிவுப் பாலம் ஒன்றை அமைத்துள்ளார். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்கால இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அந்த முயற்சியிலும் அவர் ஈடுபட்டுழைக்கின்றார். அவரது பன்மொழிப் புலமையும் அவரிடம் உள்ள பேச்சாற்றலும் கல்வி ஞானமும் பரந்த மனப்பாங்கும் இப்பணிக்கும் பெருந்துணையாக உள்ளன.

சிறந்த குணப்பண்புகள் பலவற்றை கலாநிதி சுக்ரி கொண்டுள்ளார். விருந்தோம்பும் பண்பு, அறிஞர்களை மட்டுமன்றி கல்வி தேடும் மாணவர்களையும் மதிக்கின்ற பண்பு போன்றன அவரிடம் உண்டு. அவர் எந்த ‘தஃவா’ இயக்கத்தையும் சார்ந்திராத போதும் தனது எழுத்துக்கள் மூலமும் பேச்சுக்கள், வானொலி உரையாடல்கள் மூலம் தஃவாப் பணியைச் செய்து வருவதும் சுட்டிக் காட்டத்தக்கது. இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டு மேலும் பல பணிகளை சமூகத்துக்காற்ற அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக