கலாநிதி சுக்ரி புலமை பன்முகப்பாடு ஓர் ஆய்வு – முஹம்மத் அஸ்மின்

பகுதி I

 01.கல்விப்பின்புலம் :
தென்மாகாணத்தைச் சேர்ந்த மாத்தறை மாவட்டத்தில் 1940 ஜூன் 24ல் பிறந்தார் தந்தையார் முஹம்மது அலி, தாயின் பெயர் ஆயிஷh, குடும்பம் வணிக பின்னனியைக் கொண்டது. ஆரம்பக்கல்வியை சென் தோமஸில் கற்றார். அது கிறிஸ்துவ பாடசாலை   எல்லோரையும் இணைக்கும் மொழியாக ஆங்கிலம் காணப்பட்டது. பிறகு மொழிமாற்றக் கொள்கை காரணமாக சிங்கள மொழியாக்கப்ட்ட பின்னர் ஆங்கிலம் மூலம் கற்பதற்காக தர்கா நகர் அல்ஹம்றா பாடசாலைக்குச் சென்றார். (1956), 1956ல் (Senior School Certificate Exam)    எழுதினார். பின்னர் HSC ( Higher  School Certificate)   கற்பதற்காக கொழும்பு ஸாஹிறாவுக்கு வந்தார், ஸாஹிறா மூலம் 1960 களில் இலங்கை பல்கலைக்கழக பிரவேசம் பெற்றார்.
 
கலாநிதி சுக்ரி அவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்தினார்கள். அவர்கள் இலங்கையின் புகழ் புஸ்ரீத்த ஆசிரியர்கள், அறிஞர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்களாகும். (கந்தையா மாஸ்டர், ஹரீஸ், பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், முஹம்மது சமீம், எம்.எம்.மஹ்ரூப், பேராசிரியர் இமாம் (பாகிஸ்தான்) பேராசிரியர் மொன்ட் ஹோமரி வோட் (ஐக்கிய இராஜ்ஜியம்) ஆகியோர் சற்று அழுத்திக் கூறவேண்டியவர்கள்.
 
கலாநிதி சுக்ரி அவர்களுக்கு கொழும்பு ஸாஹிறாவிலுள்ள காலம் பொற்காலமாக அமைந்தது. ஒரு களமாக காணப்பட்டது. அங்கு அறிஞர் அஸீஸ் அதிபராக இருந்தார், ஆசிரியர்களாக பேராசிரியர் கா.சிவத்தம்பி, வரலாற்று ஆய்வாளர் எம்.எம்.எம்.சமீம், அறிஞர் எம்.எம்.மஹ்ரூப் போன்றோர்கள் காணப்பட்டார்கள். அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமில், பேராசிரியர் அமீர் அலி (அவுஸ்தி;ரேலியா பல்கலைக்கழகம்) போன்றோர்கள் எல்லாம் ஒன்றாக கற்றவர்கள்.
 

பாடசாலைக்காலத்தில் சுக்ரியின் வாசிப்பு பின்புலத்தில் கந்தையா மாஸ்டர், பேராசிரியர் கா.சிவத்தம்பி பொன்றவர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. ஸாஹிறாவில் சிறப்பான நூல் நிலையம் இருந்தது அங்கு அவரை கூட்டிச்சென்று நூல்களை வாசிக்குமாறு பேராசிரியர் ஆலோசனை வழங்கினார், வழிகாட்டினார். வாசிப்புக்கான தூண்டலை, அவாவை, விருப்பை ஊட்டினார் என கணிப்பீடு செய்யலாம். பேராசிரியர் சிவத்தம்பி இலங்கையில் வாழ்ந்த தலை சிறந்த ஆய்வாளர்களுள் ஒருவராக மதிப்பீடு செய்யப்படுகிறார். கலாநிதி சுக்ரி அவர்களுக்கு தமிழ்,வரலாறு போன்ற பாடங்களைக்கற்பித்தார்;. 1962ல் (GAQ EXAM)   பரீட்சையில் உயர்தரச்சித்தியடைந்தார். (A)  இதற்கு காரணம் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் முறைமையும், கலாநிதி சுக்ரியின் கற்றல் முறைமையுமாகும். தமிழில் உயர்தர சித்தி  (A)    எடுத்த ஒரே ஒரு மாணவராக காணப்பட்டார். ஏறத்தாழ 1960 களில் தமிழில் உயர்தர சித்தி  (A)    எடுத்தவர்கள் இருவர் ஒருவர் பேராசிரியர் அமீர் அலி, அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமில் என்பது குறிப்பிடத்தக்கது. கலாநிதி சுக்ரியின் நன்பர்களாக இவர்கள் காணப்பட்டார்கள் இவர்களுடைய ஊடாட்டங்கள் (Interactions) , இடை உறவுகள் (Inter – actions)  இன்றும் பேனப்படுகின்றது.02.பல்கலைக்கழக கல்வி :

ஒருவரின் ஆழுமை வளர்ச்சியில் பாடசாலைக்கல்வியும் பல்கலைக்கழக கல்வியும் மிகமிக முக்கியமானது என்பது கல்வியலாளர்களின் கருத்தாகும். கலாநிதி சுக்ரி ஏறத்தாழ 1960 களில் பேராதனைப் பல்கலைக்கழக அனுமதி பெற்றார். பல்கலைக்கழக வாழ்வு மிகவும் சிறப்பாக அமைந்தது. இதற்கு காரணம் அறிஞர் அஸீஸூம். பேராசிரியர் அக்தர் இமாம் அவர்கள் என குறிப்பிடலாம். பல்கலைக்கழக வாழ்வு பற்றி கலாநிதி சுக்ரி அவர்களிடம் பல்கலைக்கழக வாழ்வு பதிவுகள். நினைவகள், சிந்தனைகள் பற்றி சொல்லுங்கள் என்றதற்கு கலாநிதி சுக்ரி இவ்வாறு விளக்குகிறார்கள், ‘அறிஞர் அஸீஸ் அவர்கள்தான் என்னை அறபு மொழியை விசேட துறையாக தேர்ந்தெடுக்குமாறு வழிகாட்டினார், அறபு மொழித்துறை இலங்கையின் 1943ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பல்கலைக்கழக கல்லூரியாக இருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்ட்டது. நான் பேராதனை  பல்கலைக்கழகம் செல்கின்ற காலத்தில் பேராசிரியர் அக்தர் இமாம் (பாகிஸ்தான்) அவர்கள் தான் அங்கு இருந்தார்கள். இதற்கு முன்னர் பேராசிரியர் எஸ்.எம்.யுஸ்ரீசுப் போன்றோர் அங்கு பணியாற்றியிருக்கிறார்கள். அங்கு பேராசிரியர் இமாம் அவர்களிடம் மூன்று வருடங்கள் முழு நேரம் பயிலும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவர் என்னிலே மிகவும் அன்பு வைத்திருந்தார். அறபு மொழியில் சிறப்பாக புலமை பெற வேண்டும் என்பதற்காக அவர் சில நேரங்களில் காலை முதல் இரவு வரை வகுப்புக்களை நடாத்தினார். எங்களுடைய பாடத்திட்டம் ஒன்றாக இருந்தது கற்றல் முறைமை வேறொன்றாக இருந்தது. அதனைப்பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. பாடத்திட்டத்தை நாம் (Tutorial)  மூலமாக முடிப்போம். அதனை விட்டுவிட்டு நாம் நிறைய அறியவேண்டுமென்று சொல்வார்.
 
அவசரமாக என்னை அழைப்பார் உங்களுக்கு ஷாஹ் வலியுல்லாஹ் பற்றித்தெரியுமா? பின்னர் அவரைப்பற்றியும், ஆளுமை பற்றியும், பங்களிப்பு பற்றியும்,  அவரது நூல்கள் பற்றியும் நிறைய விளக்குவார். ஷாஹ்வலியுல்லாஹ் விற்கும் பாடத்திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. பிறகு முஸ்லீம்கள் வரலாற்றுக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றியும், இப்னு கல்தூனின் வரலாற்று முறைமை பற்றியும் பேசுவார். பிறகு இமாம் கஸ்ஸாலி பற்றியும், அவருடைய நூல்கள் பற்றியும் பேசுவார். இப்படி அவரிடம் படித்து நான் எடுத்த குறிப்புக்கள் பக்கம் பக்கமாக இருக்கின்றது. அதே போன்று எனது அறிவு விசாலமானது, ஆழமானது. பொதுவாக அறபு மொழியில் உள்ள மூலாதார நூல்கள் பற்றிய ஒரு பரீச்சயம் எனக்கு ஏற்பட்டது.
 
பாரசீக இலக்கியம் பற்றி அறிமுகப்படுத்தினார், அந்த மொழியைக்கற்பித்தார். கீழைத்தேய அறிஞர்கள் பற்றிப் பேசுவார் அவர்கள் இஸ்லாத்திற்காற்றிய பங்களிப்புக்கள் பற்றி சொல்லுவார். அறபு, அறபு அல்லாத அறிஞர்கள் இஸ்லாத்திற்காற்றிய பணிகள் பற்றியெல்லாம் பேசுவார். உண்மையில் எனது பட்டப்படிப்பு வாழ்வு ஒரு பட்டப்படிப்பாக மட்டுமன்றி ஒரு ஆய்வு முறைமையாகவும் அமைந்தது. இக்காலப்பகுதி  பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஒரு பொற்காலமாக இருந்தது.பல்கலைக்கழகத்தில் இருந்த துறைகளான (அரசியல் துறை, வரலாற்று துறை, தமிழ்த்துறை, இஸ்லாமிய அறபு நாகரீக துறை) இத்துறைகளில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியர்கள் இருந்தனர். பேராசிரியர் சு.வித்தியானந்தன். பேராசிரியர் கைலாசபதி, தமிழ்த்துறையிலிருந்தனர்;. பேராசிரியர் சரத் சந்திர அங்கு ‘மனமே’ நாடகத்தை அறங்கேற்றினார். அங்கு முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் என இலக்கியத்தில் இரு முகாம்கள் காணப்பட்டன.
பேராசிரியர் மௌனகுரு, செங்கை ஆழியான். செம்பியன் செல்வன், நான் எல்லோரும் ஒன்றாகக் கற்றோம். மௌனகுரு பொன்றவர்கள் முற்போக்கு முகாம் நாம் அதற்கு மாற்றமாக நற்போக்கு முகாம் பேராசிரியர் கைலாசபதி எம்மை விவாதத்திற்கு தூண்டி விடுவார். இன்னொருவரின் கருத்து வித்தியாசம் என்பதற்காக நாம் அவரை வெறுக்கக் கூடாது என்று வழிகாட்டினார்.நான் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய காலத்தில் எனது முதலாவது சிறு கதை ‘கலைப்புஸ்ரீங்கா’ என்ற சஞ்சிகையில் வெளியானது. பின்னர் சுபைர் இலங்கீரன் கவனத்திற்குரியவர் என்ற ஒரு பகுதியில் என்னைப்பற்றி எழுதினார். அதில் கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்தால் பெரும் இலக்கிய வாதியாக இருந்திருப்பார் என்று எதிர்வு கூறினார்.

அடுத்து எனது வாழ்வில் முக்கிய தீர்மானம் எடுப்பதாயின் அறிஞர் அஸீஸிடம் கலந்தாலோசிப்பேன். நான் அறபு மொழியை சிறப்புத்தேர்ச்சிக்காக தேர்ந்தெடுத்தமையும் அவரின் ஆலோசனைப்படியாகும். பேராசிரியர் அக்தர் இமாமிற்கு பிறகு அறபு மொழிக்கு ஒருவர் தேவை எனவே என்னைப்பல்கலைக்கழக கல்வி முடித்த பின்னர் அங்கே சேருமாறு சொன்னார். நான் CAS (Cylon Administrative Service Exam)    இற்கு விண்ணப்பித்தேன் அங்கு பல்கலைக்கழக பெறுபேறு (Resuld)    பத்திரிகையில் வரும் அதனைப்பார்த்து விட்டு அறிஞர் அஸீஸ் எனக்கு தந்தி (Telegrame)  அடித்தார். நீங்கள் நிருவாக சேவைக்குப்போக வேண்டாம். நீங்கள் கல்வித்துறையில் கவனம் செலுத்த வேண்டுமென்றார்.இதனை எனது சிந்தனைப்பேழையில் நன்றியுணர்வுடன் பாதுகாத்து வருகின்றேன்.’ என கலாநிதி சுக்ரி கூறினார் இப்படியாக பல்கலைக்கழக வாழ்வு நினைவுகளைப்பதிவு செய்யலாம்.

03.பல்கலைக்கழக விரிவுரையாளர் :

ஏறத்தாழ 1965ல்  பட்டப்பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த கலாநிதி சுக்ரி தொடர்ந்து இலங்கை நிருவாக சேவையில் இணைய வேண்டும் என விரும்பினார். ஆயினும் பின்னர் அறிஞர் அஸீஸின் ஆலோசனைப்படி பேராசிரியர் இமாமின் வாரிசாக கல்வி துறையிலேயே தனது பணியைத் தொடர தீர்மானித்தார், பட்டப்படிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்த 1965ம் ஆண்டு இவர் இலங்கைப்பல்கலைக்கழகத்தின் அறபு, இஸ்லாமிய நாகரீகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். 1973 வரை சிறிது காலம் கொழும்பு பல்கலைக்கழகத்திலும், பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றினார்.இக்கால இவருடைய மாணவர்களுள் ஏ.எல்.எம்.இப்றாஹிம்., எம்.ஜே.எம்.றியால், முக்தார் ஏ. முஹம்மது. எம்.ஐ.எம்.அமீன், காலாநிதி கே.எம்.எச்.காலிதீன் ஆகியோர் குறிப்பிடத்தக்க மாணவர் பரம்பரையாக மேலெலுந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மெய்யியல், உளவியல், துறைத்தலைவர் அறிஞர் கலாநிதி எம்.எஸ்எம்.அனஸ் அவர்கள் கலாநிதி சுக்ரி அவர்களை இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்,
‘இலங்கை முஸ்லீம்களின் வரலாறு, சமூக பண்பாட்டு பெறுமானங்கள் பற்றி ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், வரலாற்று ஆய்வாளர் எம்.எம்.மஃறூப், வரிசையில் பெரிய பங்களிப்பை செலுத்திய வரலாற்று அறிஞராகவும் கலாநிதி சுக்ரி விளங்குகிறார். இஸ்லாமிய நாகரீகம் என்ற பாரிய கல்வி துறையை அதற்கே உரித்தான விரிவான, ஆழமான எல்லைகளுக்கு இட்டுச்சென்றதில் பேராசிரியர் இமாம் அவர்களும், கலாநிதி சுக்ரி அவர்களும் மேற்கொண்ட கல்வி பணிகள் இலங்கை முஸ்லீம்களின் இஸ்லாமிய அறிவு விருத்தியிலும், பொதுவில் முஸ்லீம்களின் அறிவுப்பண்பாட்டிலும், ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆழமானதும், வராலாற்றுபஸ்ரீர்வமானதுமாகும். பேராசிரியர் இமாமுக்கு அடுத்து மலர்ந்த இஸ்லாமிய பொற்காலத்தின் பிரதான சிற்பியாகவும் நாடுதழுவிய இஸ்லாமிய அறிஞராகவும் விரைவில் அவர் மக்களின் மனங்களைக்கவர்ந்தார்’ இவ்வாறு அறிஞர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அழகான மதிப்பீட்டைச் செய்தார்கள்.

ஜாமிஆவில் அவரிடம் கற்ற மாணவர் பரம்பரை ஒன்று மேற்கிளம்பியுள்ளது. அவர்கள் இலங்கையிலும் சிலர் வெளிநாடுகளிளும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர், எம்.எஸ்.அப்துல் பாரி, ஏ.சி.அகார் முஹம்மட், எம்.ஏ.எம்.மன்சுஸ்ரீர், ஏ.பீ.எம்.இத்ரீஸ், உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர், ஹைருல் பஸர், எஸ்.எச்.எம்.பழீல், நபவி, ஐயுஸ்ரீப் அலி, எம்.ஐ.எம்.சுபைர், எஸ்.எல்.அப்துல் ரஸ்ஸாக், அப்துல் றாஸிக், சனீர், நசீர், மிப்லி, அமீர், ஏ.எம்.எம்.மிஹ்லார், ஹமருஸ்ஸமான், நவாஸ் ஸனூர்தீன், றவுஸ்ரீப்ஸெய்ன், இர்பான், இவர்கள் கலாநிதி சுக்ரி அவர்கள் ஜாமியாவில் உருவாக்கிய புலமை பாரம்பரியம் ஒன்று முகிழ்த்துள்ளது.இவர்கள் இலங்கையின் புகழ் பஸ்ரீத்த அறிஞர்கள், கல்வி மான்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களாக புலமை பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.

கலாநிதி சுக்ரி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் நினைவு கூறத்தக்கதாகும், அறிஞர் அஸீஸ் அவர்களுக்கும். கலாநிதி சுக்ரி அவர்களுக்கும் இடையில் நடந்த சம்பவத்தை கலாநதி சுக்ரி ‘இஸ்லாமிய சிந்தனை’ எனும் சஞ்சிகையில் ‘சிந்தனை பேழை’ எனும் தலைப்பில் அதனை இவ்வாறு பதிவு செய்கிறார். ‘ பேராதனைப்பல்கழைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரியும் காலப்பிரிவு அது விஜயவர்த்தன மண்டபத்தில் விரிவுரையாளர்களுக்கான அறையில் நான் தங்கியிருந்தேன் காலை 6 மணியளவில் தொலைபேசி மணியடித்தது. அறிஞர் அஸீஸின் கம்பீரமான குரல் ஒலித்தது. நான் எனது ‘கிழக்காபிரிக்க பயணம்’ பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு சொல் சம்பந்தமாக சந்தேகம் தோன்றியுள்ளது. விளக்கைக் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் சொல்  ‘குத்து விளக்கா’ அல்லது ‘கொத்து விளக்கா’ ? உங்களுக்கும் இச்சொல் பற்றி தெளிவு இல்லாவிட்டால் பேராசிரியர் கனபதிப்பிள்ளை அல்லது பேராசிரியர் வித்தியானந்தன் போன்றோரை விசாரித்து எனக்கு இதை அறிவியுங்கள்’ என்றார்.  தமிழில் ஒரு சொல்லை பிரயோகிக்கும் முன்னர் அதன் சரியான கருத்து பிரயோகம் பற்றிய தெளிவில்லாமல் அதனைக்கையாளத் தயங்கி அந்த அதிகாலைப் பொழுதில் அது பற்றி அலட்டிக் கொண்ட அஸீஸிடம் நான் கற்ற முக்கிய பாடங்களில் ஒன்றுதான் ஒரு சொல்லைப்பிரயோகிக்கும் முன்னர் அதன் சரியான கருத்து பற்றிய தெளிவு அவசியம் என்பதாகும்.

சொற்களை நயத்தல், அதன் ஆழமான கருத்துக்களை விளங்கள், ஒரு சிறந்த ஓவியம் பொருத்தமான நிறங்களைக் கையான்டு அழகிய படைப்பொன்றை உருவாக்குதல் போன்று, ஒரு கருத்தைப் புலப்படுத்த பொருத்தமான வார்த்தைகளைக் கையான்டு எழுத்தையும், பேச்சையும் அழகுபடுத்தல் வேண்டும் என்ற உயர்ந்த பாடத்தை அறிஞர் அஸீஸிடம் நான் கற்றுக்கொண்டேன். அன்று முதல் சொற்கள், அவற்றில் பொதிந்துள்ள அழகு, அர்த்தபுஷ்டி, வளம், ஆகியன எனது கவனத்தை ஈர்த்தன.

அறிஞர் அஸீஸை சந்திக்கும் போதெல்லாம் அவற்றின் பிரயோகம் பற்றி அடிக்கடி பேசுவோம். சிலபோது சொல்லாராய்ச்;சியில் எமது உரையாடல் ஆரம்பித்து முடிவடைவதுண்டு. அறிஞர் அஸீஸ் அவர்கள் தனது கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்நூலுக்கு எத்தகைய பெயரிடுவது ?  என்பது பற்றிய ஆராய்ச்சியில் பல மாதங்களை கழித்தார். அவருடன் தொடர்புடைய பலரைக் கலந்தாலோசித்தார். தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படை என ஒருவகை இலக்கிய உருவம் உள்ளது. ஒரு தலைவனைப்பற்றிய புகழைப்பாடி அவனிடம் பரிசு பெறுவதற்காக வழிகாட்டுவது என்பது இதன் கருத்தாகும். ‘ஆற்றுப்படுத்தல்’ என்றால் ‘வழிப்படுத்தல்’ என்பது பொருளாகும். அறிஞர் அஸீஸ், அல்லாமா இக்பாலின் கருத்துக்கள் தத்துவங்களில் ஆகர்ஷிக்கப்பட்டவர்.

இக்பாலின் செல்வாக்கிற்கு என்னைப்போன்ற பலர் ஆளாக காரணமாக அமைந்தவர்களில் ஒருவர் அவரது கட்டுரைத்தொகுதிக்கு தனது சிந்தனைகள், கருத்துக்கள் பெரும்பாலும் இக்பாலின் தத்துவத்தால் நெறிப்படுத்தப் பட்டவை என்ற கருத்தை விளக்கும் வகையில் அவரது கட்டுரைத் தொகுதிக்கு ‘இக்பால் ஆற்றுப்படை’ எனப்பெயரிடலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருநாள் அவரை சந்தித்தேன், ‘ஆற்றுப்படுத்தல்’, ‘ஆற்றுப்படை’ என்ற சொல் பற்றிய விளக்கத்தை கேட்பதற்கு பேராசிரியர் வித்தியானந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்த போதே நான் அவரது அறைக்குள் நுழைந்தேன். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல் ‘ஆற்றுப்படை’ என்ற சொல் பற்றிய ஆராய்ச்சியாகவே அமைந்தது.

சொல் அதில் பொதிந்துள்ள கருத்து, அதன் பிரயோகம் பற்றி சரியாகவும், தெளிவாகவும் உணர்ந்த பிறகே அதனைப் பயன்படுத்தல் வேண்டும். என்ற  பயனுள்ள பாடத்தை அறிஞர் அஸீஸிடம் நான் கற்றேன். இந்தப்பாடத்;தை எனது சிந்தனைப் பேழையில் இன்னும் பாதுகாத்து வைத்துள்ளேன். ஓர் எழுத்தாளன், ஆய்வாளன், கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாட்டு நெறி எனலாம்.

இப்படியாக கலாநிதி சுக்ரி அவர்களின் பல்கலைக்கழக வாழ்வு நினைவுகளைப்பதிவு செய்யலாம்.

04.கலாநிதிப்பட்ட ஆய்வு :

1965ல் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் அறபு மொழித்துறையில் முதலாம் தரத்தில் (First Class)  சித்தியடைந்தார். 1973 இல் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் பெற்று பட்டப்பின்படிப்பை (PHD)  மேற்கொள்வதற்காக ஐக்கிய இரஜ்ஜியத்தின் எடின்பரோ பல்கலைக்கழகம் சென்றார். அங்கு பேராசிரியர் கீழைத்தேய ஆய்வாளர்களில் ஒருவாரான மொன்ட் ஹோமரி வொட் மேற்பார்வையின் கிழ் ஆய்வு செய்தமை கலாநிதி சுக்ரியின் வரப்பிரசாதம் எனலாம்.
கலாநிதி சுக்ரி அவர்களை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றோம். அவருடன் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டது, அதற்கான விளக்கத்தை அறிவுபுஸ்ரீர்வமாகவும், தர்க்கரீதியாகவும் பதிலளித்தார்கள்.
கலாநிதி சுக்ரி அவர்களே உங்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு பற்றியும், பேராசிரியர் அக்தர் இமாம் பற்றியும், பேராசிரியர் மொன்ட் ஹோமரி வொட் பற்றியும், உங்களுடைய பதிவுகளை, நினைவுகளைக் கூறுங்கள்? என்றேன், கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு அழகாக விளக்கினார்கள். ‘நான் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய போது, பேராசிரியர் அக்தர் இமாம் அவர்கள் என்னை ஒரு மேற்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்கள். நான் அது தொடர்பில் அப்போது எஹிப்திய தூதுவராலயத்திலிருந்த ஹலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபாவை அடிக்கடி சந்திக்க செல்வோம்
அவர்  எமக்கு அறபு நாட்டு பல்கலைக்கழகமொன்றுக்கு செல்லுமாறு உபதேசித்தார், கடைசியில் எஹிப்து அல் அஸ்கர்  பல்கலைக்கழகத்திற்கு போவதாக முடிவானது. போவதற்கு  தயாராக இருந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. பின்னர் பதுயுதீன் மஃமூதை சந்தித்து அவரின் உதவியுடன் நாம் எடின் பரோ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தோம். அல்லாஹ்வின் அருளால் அனுமதி கிடைத்தது, பேராசிரியர் மொன்ட ஹோமரி வொட் அவர்களிடம்  நான் ஆரம்பத்தில் தெரிவு செய்து கொண்ட தலைப்பு ‘நவீன கால இஸ்லாமிய சிந்தனைக்கு ஷாஹ் வலியுல்லாவின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்யப்போவதாக கூறினேன்.
 
அதற்கு பாரசீக அறிவு தேவை, அவ்வறிவு எனக்கு குறைவு எனவும், அது தொடர்பான நூல்கள் அப்பல்கலைக்கழக வாசிக சாலையில் குறைவு எனவும்;, இந்தியா தொடர்பாக வாசிப்பதாயின் அடிக்கடி லன்டன் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும். அது சிரமமாக இருக்கும் என்பதால் வேறு ஒரு தலைப்பை தெரிவு செய்யுமாறு வழிகாட்டினார்.
நான் எடின் பரோ சென்ற பின்னர் எனக்கு தலைப்பு தெரிவு செய்வதற்கான காலம் தரப்பட்டது. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் பட்டியலை புரட்டிப் புரட்டித் தேடினேன், ஒரு தலைப்பும் படவேயில்லை. ஒரு நாள் நான் வாசிக சாலையின் (Library)  புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அபுதாலிப் அல் மக்;கீ ‘கூத்துல் குழூப்’ என்ற நூல் எனக்கு கிடைத்தது. அப்போது எனக்கு பேராசிரியர் அக்தர் இமாம் இதுபற்றி கற்பித்தமை நினைவுக்கு வந்ததது. எவ்வாறென்றால் அபுதாலிப் அல் மக்கீ  என்றால் யார்? கூத்துல் குழூப் என்பது பற்றியும் கேட்டார்கள். அதற்கான பதிலையும் பேராசிரியர்  அக்தர் இமாம் அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதனால் எனக்கு இலகுவாக இருந்தது.
 
நான் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டு தஸவ்வுபின் (சுஸ்ரீபித்துவம்) பொற்காலம் அதில் வெளிவந்த முக்கியமான நூல்கள்  கிதாபுர் ரிஆயா (கலாநிதி அப்துல் ஹலீம் மஃமூத்), கிதாபுத் தஅர்ரூப் (பேராசிரியர் ஆபரி), கிதாபுல் லும்ஆ (பேராசிரியர் நிகல்ஸன்) என்பன முக்கியமானவை. கிதாபுர் ரிஆயா, கிதாபுத் தஅர்ரூப், கிதாபுல் லும்ஆ இதனை முறையே கலாநிதி அப்துல் ஹலீம் மஃமூத், பேராசிரியர் ஆபரி, பேராசிரியர் நிகல்ஸன் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் அபுதாலிப் அல் மக்கீ எழுதிய , கூத்துல் குழூப் மாத்திரமே ஆய்வு செய்யப்படவில்லை. பேராசிரியர் இமாம் அவர்கள் அபுதாலிப் அல் மக்கீ அவர்களைப்பற்றியும், கூத்துல் குழூப் பற்றியும் விரிவுரைகளை நடாத்திய பரீச்சயம் இருந்ததனால் இந்த நூலை ஆய்வுக்காக தெரிவு செய்தேன்.
 
பிறகு எனக்கு அதற்குரிய மூல நூல்களைத் தருவதற்காக 6 மாத காலம் தரப்பட்டது. எனினும் எனக்கு மூல நூல்களுடன் பரீச்சயம் காணப்பட்டதால் ஒரு மாதத்தாலே முடித்து விட்டேன். அதைப்பார்த்த பேராசிரியர் மொன்ட் ஹோமரி வொட் ஆச்சரியமடைந்தார், வியப்படைந்தார். பின்னர் மூல நூல்களைப்பற்றி கேட்டு அவற்றைத் தெரிவு செய்தமைக்கான காரணங்களையும் கேட்டார். நான் தெளிவாக, உறுதியாக பதில் சொன்னேன். அவர் எனக்கு இதில் தெளிவு ஏற்பட்டது எப்படி என கேட்டார் அப்போது நான் பேராசிரியர் அக்தர் இமாம் அவர்களுடைய கற்பித்தல் முறைமையினால் தெரிந்து கொண்டேன் என்றேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். அவர் சொன்னார் 90 வீதம் உங்களுடைய வேலை முடிந்து விட்டது. இனி நீங்கள் 10 வீதம் ஆய்வை செய்வதுதான் மிகுதியாகவுள்ளது. உண்மையில் நான் பேராசிரியர் அக்தர் இமாம் அவர்களின் கற்பித்தல் முறைமையினால் எற்பட்ட சாதகமான விளைவே இதற்கு காரணமாகும்.
 
அடுத்து பேராசிரியர் அக்தர் இமாம் அவர்கள் என்னிடம் வளர்த்த ஓர் உணர்வுதான் ஸலபுஸ் ஸாலிஹீன்கள், அறிஞர்களை மதிக்க வேண்டும். என்ற உயரிய பன்பாட்டு முறைமையாகும். இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு பங்களிப்புச் செய்தவர்களை மதிக்கவேண்டும். என்ற உயர்ந்த பன்பாடு, இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு பங்களிப்புச் செய்தவர்களை மதிக்கவேண்டும். அவர்களின் குறைகளை பெரிதுபடுத்தக்கூடாது, அலட்டக்கூடாது, அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். என அவர் அறிவுரை வழங்கினார்.  இதனை எனது சிந்தனைப் பேழையில் இன்றும் பாதுகாத்து வருகின்றேன்.
 
இதனை உண்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை பேராசிரியர் அக்தர் இமாம் அவர்கள் திடீரென வந்தார்கள். வாசிகசாலையின் மூன்றாவது மாடிக்கு அழைத்துச்சென்றார்கள். தூசுபடர்ந்த நூலை எடுக்கச்சொன்னார். அதனை எனது கைக்குட்டையால் துடைக்கச்சொன்னார். கண்ணியமாக எடுக்கச்சொன்னார்,  நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் என்றார்.
 
இது என்ன? என்று கேட்டார். பின்னர் அவர் சொன்னார். இது பேராதனைப்பல்கலைக் கழகத்தின் மூன்றாவது மாடி இங்கு மின்விசிறி சுழன்று கொண்டிருக்கிறது. நீங்கள் வெளியே பாருங்கள். நல்ல அழகான சுஸ்ரீழல், அழகிய காட்சிகள் உங்ளிடம் அழகான பேனை உள்ளது, அழகான தாள் உள்ளது. இதுவெல்லாம் அல்பிரூனி இந்த நூலை எழுதுகின்ற வேலை அவரிடம் இருந்ததா? நான் இல்லை என்றேன்.
 
நீங்கள் ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டுக்கு செல்லுங்கள். மத்திய ஆசியாவைப்பாருங்கள் மாறிகாலத்தில் கடுமையான குளிர், கோடைகாலத்தில் கடுமையான வெப்பம் எழுதுவதற்கு பேப்பர் இருக்கவில்லை. தொட்டு தொட்டு எழுதும் ‘களம்’ எனும் உபகரணம்தான் இருந்தது. இந்நிலையில் அவர்கள் தமது பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள். அதனைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம். எனவே நீங்கள் எல்லா கண்ணியமிக்க இமாம்களையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும் என்றார். நான் மெய் சிலிர்த்துப் போனேன்.
நான் அன்றிலிருந்து இமாம்களைமதிக்க கற்றுக்கொண்டேன். இமாம் ஷாபி, இமாம் அஹமத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு மாலிக், இமாம் அபஸ்ரீ ஹனீபா போன்றவர்கள் இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள். அடுத்துவந்த காலப்பகுதிகளில் இன்னும் பல்வேறு துறைகளுக்கு பங்களிப்புச்செய்தவர்களும் உள்ளனர். இவர்களை நாம் மதிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு பங்களிப்புச் செய்தோரை மதிப்பது, கற்றுத்தந்த ஆசிரியர்களை நன்றியுணர்வுடன் நோக்குவது இவற்றை பேராசிரியர் இமாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
 
அடுத்து அல்லாஹ் குர்ஆனிலே சொல்கிறான் ‘யார் எனது பாதையில் முயற்சிக்கிறாறோ நாம் எமது வழியைக் காட்டுவோம்’ என்றும் ‘அறிவைத் தேடுபவர்கள் அவனது பாதையில் உள்ளனர்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள்’ என்றார்கள். நான் ஏன் இதனைக் கூறுகிறேன். என்றால் எனது வாழ்வில் அப்படியான உதவிகளைப் பெற்றிருக்கிறேன் என்பதற்காக. அல்ஹம்துலில்லாஹ்
எனது ஆய்வில் பேராசிரியர் மொன்ட ஹோமரி வொட், அபுதாலிப் அல் மக்கீ அவர்கள் எழுதிய இன்னுமொரு ஆய்வு நூலை அறிமுகப்படுத்துமாறு கேட்டார். நான் ஒரு முறை, பல முறை முயற்சித்தேன் ஆனால் கிடைக்கவில்லை. ஒரு முறை நான் பாகிஸ்தான் ஹலால் இறைச்சிக்கடைக்குச்சென்ற போது கடுமையான பணி பெய்தது, நான் அவசரமாக விதியோரத்திலிருந்த வாசிகசாலைககுச் சென்றேன். எழுமாறாக நூல்களின் எழுத்துப்படிவங்களின் ஏடுகளைப்புரட்டினேன். அதில் ஸ்பைனிலுள்ள எஸ்கேரியா நூலகத்தில் 322 ல் அபுதாலிப் அல் மக்கீ எழுதிய நூல் (பயானுஸ்ஸிபா) இருப்பதாக தகவல் இருந்தது பின்னர் பேராசிரியர் மொன்ட் ஹோமரியிடம் கூறினேன். அவர் அதனை எடுப்பதற்கான வசதிகளை செய்தார். கலாநிதி சுக்ரி அவர்கள் மேற்கண்டவாறு கலாநிதிப்பட்ட ஆய்வு பற்றியும், பேராசிரியர் அக்தர் இமாம் பற்றியும், பேராசிரியர் மொன்ட் ஹோமரி பற்றியும் மிகமிக ஆழமான, அகலமான விளக்கத்தைச் சொன்னார்.
 
இந்த இடத்தில் மிக முக்கியமான சிந்தனைப் பேழையைப் பதிவு செய்தல் முக்கியமாகப் படுகின்றது. கலாநிதி சுக்ரி அவர்கள் பேராசிரியர் மொண்ட் ஹோமரியின் (குரு, சிசியனுக்கான கடைசி உபதேசம்;) அதனை இஸ்லாமிய சிந்தனையின் சிந்தனைப்பேழை எனும் தலைப்பில்  (2000 ஏப்ரல், ஜூன் ) பதிவு செய்தார்.
 
ஐக்கிய இராஜ்ஜியத்தில் எடின் பரோ பல்கலைக்கழக வாழ்வில் ஒரு நினைவு எனது உள்ளத்தில் பசுமையாவுள்ளது. இஸ்லாமிய தத்துவஞானம் பற்றிய எனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினை வழிநடாத்தியவர் (Supevisier)  அண்மையில் காலஞ்சென்ற புகழ்பெற்ற கீழைத்தேய ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் மொண்ட் ஹோமரி வொட் ஆவார் (அபுதாலிப் அல் மக்கீ ஆத்மீக தத்துவம்) என்பது எனது ஆய்வுத்தலைப்பாக அமைந்தது. மூன்று ஆண்டுகள் இந்த ஆய்வில் ஈடுபட்டு எடின் பரோ பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு கலாநிதிப்பட்டம் (PHD)  வழங்கப்பட்ட நிலையில், நானும் எனது குடும்பத்தினரும் நாடு திரும்ப ஆயத்தமான நிலையிலிருந்தோம்.
கலாநிதிப்பட்டத்திற்கான  ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவரும் தங்களது ஆய்வை முடித்து நாடு திரும்பும் வேலையில் மொண்ட் ஹோமரி வொட் அவர்கள் தனது இல்லத்திற்கு அழைத்து ஒரு தேனீர் விருந்தளிப்பது வழக்கமாகும். இந்தப்பாரம்பரியத்திற்கேற்ப பேராசிரியர் என்னையும் ஒரு நாள் தேனீர் விருந்துக்கு அழைத்தார், அனைத்தும் முடிந்து நான் விடைபெறும் வேலையில் அவர் என்னைப்பார்த்துக் கூறினார். அவரது குரல் இன்னும் எனது காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது ‘உங்களுக்கு ஓர் அறிவுரை கூறப்போகிறேன் அதனை நீங்கள் பின்பற்றினால் உங்களுடைய எதிர்கால கல்வி வாழ்க்கை (Academic Life )  மிகச்சிறந்து விளங்கும். நீங்கள் இப்போது   Pர்னு பட்டம் பெற்று ஒரு கலாநிதியாக திரும்புகின்றீர். ஆனால் ஒன்றை மறக்காதீர்கள். உங்களது கலாநிதிப்பட்டம் உங்களுக்கு ஒரே ஒரு பாடத்தைதான் கற்றுத்தந்திருக்கின்றது. அதாவது இஸ்லாமிய கற்கைத்துறை என்பது மிக விரிந்த ஆழமான பரந்த ஒரு துறை என்பதையும் அதில் நீங்கள் பெற்றுள்ள அறிவு மிக அற்பமானது அத்துறையில் நீங்கள் கற்க வேண்டிய இன்னும் எவ்வளவோ உள்ளன என்பதையும், அது உங்களுக்கு உணர்த்தியுள்ளது.
 
இதனை உங்களுக்கு நான் இப்போது நிரூபிக்கப்போகிறேன். என்னிடம் பேராசிரியர் தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார்,
‘நன்கு கவனியுங்கள் நீங்கள் இஸ்லாமிய கற்கைத் துறையில் ஓர் அங்கமான (தஸவ்வுப்) ஸூபித்துவம் துறையில் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அறிஞரின் ஓர் தனிப்பட்ட நூலை ஆய்வு செய்து மூன்று ஆண்டுகள் முயற்சித்து பல மூலாதாரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு நூலை எழுதியுள்ளீர்கள் இது இத்தறையில் ஓர் அறிஞரின் ஒரு நூல் பற்றிய ஆழமான ஆய்வுக்கு எடுத்த காலமென்றால், தஸவ்வுப் பற்றிய நூல்கள் , அறிஞர்கள் அதன் வரலாறு தததுவம் பற்றிய ஆய்வு முழுவதையும், ஒருவன் மேற்கொள்வதாயின் எத்தனை ஆண்டுகள் எடுக்கும்?  இஸ்லாமிய கற்கைத் துறையில் தஸவ்வுப்யின் நிலை இதவென்றால் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹூ, உஸூலுல் பிக்ஹூ, இஸ்லாமிய வரலாறு, கலைகள். பன்பாடு, நாகரீகம் என அனைத்தையும் பற்றி ஆய்வு செய்வதை விடுத்து மேலோட்டமாக வாசிப்பதாயின் உங்களது வாழ்நாள் போதுமானதாகுமா ? எனவே உங்களது கலாநிதி ஆய்வின் மூலம் ஒரேஒரு பாடத்தைதான் நீங்கள் கற்றுள்ளீர்கள். அதாவது இஸ்லாமிய கற்கை நெறி என்ற பரந்த ஆழமான சமூத்திரத்தில் ஒரு துளியே உங்கள் ஆய்வாகும்.   {{A minor drop in the Wide and deep ocean of Islamic Studies)    எனவே அனைத்தையும் கற்ற ஓர் ஆய்வாளன், பேராhசிரியர், புத்திஜீவி என உங்களை என்ன வேண்டாம் நீங்கள் இஸ்லாமிய கற்கைத்துறையினைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்ற உணர்வோடு வாழ்க்கையின் இறுதிவரை வாழுங்கள்’ ஆய்வுலகம் போற்றிப்புகழ்கின்ற பேராசிரியரின் இந்த வார்த்தைகளை வெரும்வார்த்தைகளாக நான் கணிக்கவில்லை. எனது எதிர்கால அறிவுப்பாதைக்கு வழியமைத்து தந்து ஒரு பெருங்கோட்பாட்டை வகுத்து தந்த வார்த்தைகளாக அவற்றை ஏற்றுக்கொண்டு கண்களில் நீர்மல்க மூன்று வருடகால அறிவுத்தொடரின் அந்த இறுதி வேலையில் இந்தப்பாடத்தை அவர்களிடம் கற்றுக்கொண்டு விடை பெற்றேன். ‘நீர் அறிஞரன்று என்றுமே ஓர் மாணவன்’ என்ற பேராசிரியரின் குரல் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டு எனது அறிவுப்பயணத்தின் ஒளிக்காக வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது. நான் அந்த வார்த்தைகளை எனது சிந்தனைப் பேழையில் இன்றும் பாதுகாத்து மாணவன் என்ற உணர்வுடன் வாழ்ந்து வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

பேராசிரியர் மொண்ட ஹோமரியின் வார்ததைகளே கலாநிதி சுக்ரியின் அறிவு விசாலத்திற்கு, ஆழத்திற்கு காரணமாக அமைந்த கோட்பாட்டு நெறி எனலாம். இதனை நானும் மீண்டும் மீண்டும் வார்த்தையை எண்ணி எண்ணி வாசித்தேன். நானும் எனது சிந்தனைப்;பேழையில் பாதுகாத்து வருகின்றேன்.

05.ஜாமிஆ பணிப்பாளர் :

ஜாமிஆ நிருவாகத்தை பொருப்பேற்குமாறு நளீம் ஹாஜியார் அழைப்பு விடுத்தார். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. இவர் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்த போது ஏறத்தாழ 1974ம் ஆண்டு நளீம் ஹாஜியார் ஹொங் கொங்கிலிருந்து இவருக்கு எழுதிய கடிதத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பியதும், ஜாமிஆ விவகாரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டும் என எழுதினார். நீண்ட மனப்போராட்டத்தின் பின்னர் தனது பல்கலைக்கழக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஜாமிஆவின் பொறுப்பை 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாநிதி சுக்ரி ஜாமிஆவின் பணிப்பாளராக பதவியேற்றார். 1972ம் ஆண்டு ஐவர் கொண்ட குழு ஜாமிஆ வின் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு பாகிஸ்தான் சென்றனர். அறிஞர் அஸீஸ் தலைமையில், கலாநிதி சுக்ரியும் சென்றார்கள்.

இக்குழு இலங்கை திரும்பியதும் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் உலகிலுள்ள பல கலா நிலையங்களின் பாடத்திட்டங்களிலுள்ள தரமான அம்சங்கள் இணைக்கப்பட்டு ஜாமிஆவின் பாடத்திட்டம் உருவாக்கப்;பட்டது. ஜாமிஆவின் பணிகளிலெல்லாம் காத்திரமான புலமைப் பங்களிப்பை கலாநிதி சுக்ரி வழங்கினார். இவ்வாறு ஆரம்பம் முதல் ஜாமிஆவின் விடயங்களில் பங்கேற்றார். பணிப்பாளராக வருவதற்கு முன்னர் ஜாமிஆவிற்கு வருகை தந்து மாணவர்களுக்கு தொடர் வகுப்புக்களையும், விரிவுரைகளையும் நடாத்தினார். இதனை சற்று ஊன்றிக் குறிப்பிடல் வேண்டும்.

ஜாமிஆவில் இணைந்ததன் பின்னர் கலாநிதி சுக்ரியின் பணிகள் புதிய பல பரிமாணங்களை பெற்றிற்று. ஜாமிஆவினதும், முஸ்லீம் சமூகத்தினதும் நலனும், விருத்தியும், மேம்பாடும், முன்னேற்றமும் நளீம் ஹாஜியாரின் இலக்காக இருந்தது. அவரது கணவுகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு வரலாற்று புருஷனாக கலாநிதி சுக்ரியை மதிப்பீடு செய்யலாம். கலாநிதி சுக்ரி நளீம் ஹாஜியாரோடு புஸ்ரீரணமாக ஒத்துழைத்தார், ஜாமிஆவின் தேவைகளுக்கான வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். உலகின் பல பாகங்களுக்கும் சென்று ஜாமிஆவை அறிமுகப்படுத்தி அதற்கு ஓர் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு பின்புலமாக செயற்பட்டார். கலாநிதி சுக்;ரி என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். மத்திய கிழக்கு, வலைகுடா நாடுகளிலுள்ள பல கல்வி நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புக்கள் ஜாமிஆவிற்கு தொடர்புகளை ஏற்படுத்துவதில் இவருடைய பங்கு மிக மிக அழுத்தி கூறப்படல் வேண்டும்.

றாபிதா நிருவனம், ஜித்தா அபிவிருத்தி இஸ்லாமிய வங்கி, ஜித்தா இக்ரஹ் நலன்புரி அமைப்பு உட்பட மற்றும் பல சர்வதேச அமைப்புக்களுடன் ஜாமிஆவுக்கு நெருக்கமான தொடர்புகள் உருவாக மூலகர்த்தாவாக இருந்தார், ஜாமிஆவின் வெளிநாட்டு உறவுகளை பேனுவதில் இன்றுவரை ஓயாமல் செயற்பட்டு வருகின்றார்.

ஜாமிஆவின் பட்டச்சான்றிதழை சர்வதேச பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாற்றுவதற்கு கலாநிதி சுக்ரி கடுமையாக உழைத்தார். ‘பாகிஸ்தான் இஸ்லாமாபாத் இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகம்’; ஜாமிஆவின் சான்றிதழை அதன் பட்ட சான்றிதழுக்கு சமமானதாக ஏற்று அங்கீகரிப்பதற்கு ஜாமிஆவின் கல்வித்தரம் காரணமாக அமைந்தது. கலாநிதி சுக்ரியின் ஆளுமையும் மிகமிக முக்கிய காரணியாக தொழிற்பட்டது எனலாம்.

கலாநிதி சுக்ரியின் முயற்சியின் விளைவாக இஸ்லாமிய உலக பல்கலைக்கழக ஒன்றியத்தில் ஜாமிஆவுக்கு கிடைத்த அங்கத்துவமானது பல சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஜாமிஆவிற்கு விஜயம் செய்ய காரணமாக அமைந்தது. அவர்களில் சிலர் இங்கு தங்கி நின்று விரிவுரைகள் நடாத்தினார்கள்.  இதற்கான அழைப்பை கலாநிதி சுக்ரி அவர்களே மேற்கொண்டார்கள் மௌலான அபுல்ஹஸன் அலி நத்வி, அல்லாமா முஹம்மது அல் ஹஸ்ஸாலி, பேரறிஞர் யுஸ்ரீசுப் அல் ஹாழாவி, பேராசிரியர் ஹூர்ஸீத் அஹ்மத், கலாநிதி ஹூஸைன் ஹாமித் ஹஸ்ஸான், கலாநிதி அஹமத் அல் அஸ்ஸால் போன்ற பல சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஜாமிஆவிற்கு இவரின் அழைப்பின் பேரிலேயே வந்தனர். இப்படியாக ஜாமிஆவின் பனிப்பாளர் என்ற முறையில் புலமை பங்களிப்பை இவ்வாறு மதிப்பீடு செய்யலாம்.

06.ஆய்வுக்கருவூலங்கள் :

கலாநிதி சுக்ரி அவர்களின் துறைகளாக இஸ்லாமிய கலைகள், இஸ்லாமிய நாகரீக வரலாறு, முஸ்லீம் வரலாறு, இஸ்லாமிய கலாசாரம், அறபு, தசவ்வுப், இன்னும் பல துறைகளாகும்.இலங்கை முஸ்லீம்களுக்கு இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு வராலாற்று பாரம்பரியம் உள்ளது. இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றில் பல கல்வி மான்கள், புத்திஜீவிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், தோன்றினர் இஸ்லாமிய அறிஞர்களுள் கலாநிதி சுக்ரிக்கு தனித்துவமான முதலிடம் உண்டு என்பதையும் யாவரும் ஏற்றுக்கொள்வர். அறபு இஸ்லாமிய உலகில் மிகவும் அறியப்பட்ட இலங்கை அறிஞர் என்று உறுதியாக கூறலாம். தெளிவான சிந்தனை, ஆற்றொழுக்கான மொழிநடை, எல்லோரையும் கவரும் நாவன்மை, பலமொழிகளில் தேர்ச்சி பெற்றவர் (அறபு,ஆங்கிலம்,சிங்களம், உருது, பாரசீகம்), வரலாற்று ஆய்வாளர், பன்னூலாசிரியர் தற்போது ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளராக மூன்று தசாப்தங்களாக உள்ளார்.
1973ல் ஜமிஆ நளீமியா உருவாக்கப்பட்டது. 1978ல் இஸலாமிய சிந்தனை ஆய்வுச்சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. 1978ல் இஸ்லாமிய சிந்தனையும் ஆசிரியர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,1991ல் இஸ்லாமிய சிந்தனையின’ பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார் அன்றிலிருந்து இன்றுவரை அதன் பிரதம ஆசிரியராக கடமை புரிகின்றார். உண்மையில் இலங்கை முஸ்லீம்களுக்கு மூன்று வகையான அதிஷ்டம் கிட்டியது.
1. ஜாமிஆ நளீமியா உருவாக்கம்
2. கலாநிதி சுக்ரியின் புலமைப் பங்களிப்புக்கள்
3. இஸ்லாமிய சிந்தனையின் அறிமுகம்
 
இவை மூன்றும் முஸ்லீம் சமூகத்தின் சிந்தனைப்பாங்கை மிகமிக கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திற்று. இலங்கை முஸ்லீம்களின் புலமைப்பாரம்பரியத்தில் ஜமிஆ நளீமியாவின் பங்கு மிகமிக முக்கியமானது. அதன் உருவாக்கத்தில் முன்னேற்றத்தில் கலாநிதி சுக்ரியின் புலமைப்பங்களிப்புக்கள் மிகமிக கணிசமானது என வராலாறு பதிவு செய்யும். கலாநிதி சுக்ரி அவர்கள் வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை வெளிநாட்டுப்பல்கலைக்கழக பேராசிரியராக, ஆய்வாளராக சென்றிருக்கலாம். அதே போன்று இலங்கைப்பல்கலைக்கழக உப வேந்தராக, துறைத்தலைவராக, பேராசிரியராக பணியை செய்திருக்கலாம். ஆனால் அவர் செல்லவில்லை. இதனை ஏன் கூறுகிறேன் என்றால் முஸ்லீம் சமூகத்தின் மீது முஸ்லீம் சமூகத்தில் ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற தீராத வேட்கையாகும். நாம் அறிந்த வரையில் தமிழ்பேசும் இஸ்லாமிய அறிஞர்களுள் கலாநிதி சுக்ரி போன்ற பல்துறை ஆளுமை அமையப்பெற்ற வரலாற்று அறிஞர் புலமையாளர் இல்லை எனலாம்.
 
அவரின் எழுத்தப்பணி பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் போது முலைக்க ஆரம்பித்தது. அவரது முதலாவது சிறுகதை ‘கலைப்புஸ்ரீங்கா’ என்ற பேராதனைபல்கலைக்கழக சஞ்சிகையில் வெளியானது. இவர் 1991 ல் இஸ்லாமிய சிந்தனையின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் கணிசமான அளவு ஆசிரியர் கருத்துக்களை எழுதினார். அவை அனைத்தும் ஆழமான சமூக சிந்தனைகளைத் தூவிற்று. சமூகத்தின் சிந்தனையையும். அவதானத்தையும் தூண்டுகின்ற வகையில் சமகாலப்பிரச்சினைகளோடு தொடர்புடைய ஆசிரியர் தலைப்புக்கள் உள்ளடக்கப்படுகின்றன.
 
இஸ்லாமிய சிந்தனையில் அவர் எழுதிய கட்டுரைகள் மிக மிக ஆழமான தூரநோக்கான, புலமையான ஆய்வுக்கருவுஸ்ரீலங்களாகும். அதுமாத்திரம் இல்லாமல் அறபு, ஆங்கிலம் மொழிகளில் வந்த மொழிபெயர்ப்பு ஆக்கங்களையும் எழுதினார்.
 
இலங்கை முஸ்லீம் சமூகத்திற்கு பல இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சீர்திருத்தவாதிகளை பற்றி கலாநிதி சுக்ரி எழுதினார்.
 
1. இமாம் அபுஸ்ரீஹனீபா
2. இமாம் இப்னு மாலிக்
3. இமாம் இப்னு ஹன்பல்
4. இமாம் ஷாபி
5. இப்னு கல்தூன்
6. இமாம் கஸ்ஸாலி
7. இப்னு துபைல்
8. அல்லாமா இக்பால்
9. அபுல்ஹஸன் அலி அந்நத்வி
10. பதியுஸ்ஸமான் சையின் நூர்ஸி
11. ஒறாபி பாஸா
12. இப்னுபதூதா
13. டொசிகோ இஸூட்ஸூ
14. இப்னு தைனியா
15. டேகாட்
16. அலிகா இஸ்ஸத் பிகோவிச்
17. ஷஹ் வலியுல்லாஹ்
18. அறிஞர் கஸ்ஸாலி
19. மாலிக் பின் நபி
20. யூசுப் அல் கர்லாவி
 
போன்ற இஸ்லாமிய அறிஞர்களை, கீழைத்தேய ஆய்வாளர்கள் பற்றியும் எழுதினார், அது தவிர இஸ்லாத்தின் பொதுவான தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி எழுதினார். இக்கட்டுரைகள் அனைத்தும் மிக மிக முக்கியமாகப்படுகின்றன. கலாநிதி சுக்ரி அவர்கள் இது தவிர வேறுதலைப்புக்களிளும் ஆய்வுகளை செய்திருக்கிறார்கள். அவை பின்னிணைப்பாக இணைக்கப்படும்.
கலாநிதி சுக்ரியின் எழுத்துக்கள் அவரின் அறிவாழத்தையும், புலமைப் பன்முகப்பாட்டையும் ஆழமாக, விசாலமாக எடுத்துக்காட்டிற்று.
 
ஓர் அறிஞனை, சிந்தனையாளனை, கல்விமானை, புத்திஜீவியை, பேராசிரியரை, எழுத்தாளரை மத்திப்பீடு செய்வது, அவருடைய நூல்களின் ஆய்வுத்தரத்தைக் கொண்டே மதிப்பீடு செய்யலாம். உலகில் நிறைய அறிஞர்கள் பிறக்கின்றார்கள். அதில் சிலர் எதுவும் எழுதவில்லை, சிலர் நிறைய எழுதுகிறார்கள். அந்த சிலருள் கலாநிதி சுக்ரி அவர்களும் ஒருவர். உண்மையில் இலங்கையில் தோன்றிய மிகப்பெரிய இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களை வரிசைப்படுத்தினால் கலாநிதி சுக்ரி அவர்களுக்கு தனித்துவமான, முதன்மையான இடம் உண்டு. இஸ்லாமிய வராலாற்றில் ஆவணப்பதிவாக எழுதப்படும்.
 
அவருடைய எழுத்துக்களை ஆழமாகப்படிக்கும் ஒருவர் இதனை நன்றாக விளங்க முடியும், நாம் அறிந்த வரையில் இலங்கை அறபு இஸ்லாமிய துறைக்கு எவரும் ஆற்ற முடியாத பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
இவர் முதன்முதலாக ஆங்கிலத்தில் Islam and Education  (1971) எழுதினார். தமிழில் எழுந்த முதலாவது நூலாக ‘அல்குர்ஆனும் அதன் வரலாறும், வாழ்வு நெறியும்’ எழுதினார். அவருடைய முதலாவது மொழிபெயர்ப்பு நூல் ‘அபுல்ஹஸன் அலி அந்நத்வி’ அவர்களின் நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இதனைத்தொடர்ந்து பல இஸ்லாமிய நூல்களை வெளியிட்டார். அதனைப்பின்வருமாறு கூறலாம்.
 
நூல்கள்                                                                                             ஆண்டு
 
1. அல்குர்ஆனும் அதன் வரலாறும் வாழ்வு நெறியும் 1981
2. தஃவாவும் நவ யுகத்தின் சவாலும்  (மொழிபெயர்ப்பு) 1982
3. இறைத்தூதர் இன்றேல்    (மொழிபெயர்ப்பு) 1982
4. ஆத்ம ஞானிகளும் அறப்போராட்டங்களும் 1984
5. சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய பேரறிஞர்
 இமாம் கஸ்ஸாலி 1993
6. மதமும் அறிவியலும் 1994
7. நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் 1994
8. இஸ்லாமும் மனித உரிமைகளும் 1995
9. இஸ்லாமிய பன்பாட்டு மத்திய நிலையம் 1997
10. இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் 1999
11. அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும் 2007
12. இலங்கை முஸ்லீம்களின் தொன்மைக்கான வரலாற்று பாதை 2010
13. அல்லாமா இக்பால் (அச்சிலுள்ளது)
14. இஸ்லாமும் மேற்கும் (அச்சிலுள்ளது)போன்ற நூல்களை தமிழில் எழுதினார். இதில் இவரது முதலாவது எழுதிய நூலான அல்குர்ஆனும் அதன் வரலாறும் வாழ்வு நெறியும் என்ற நூலினை 2007ம் ஆண்டு அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும் என்ற புதிய தலைப்பில் அச்சிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய ஆங்கில நூல்களை பின்வருமாறு கூறலாம்,Books                                    Year
1. Islam and Education 1979
2. Mankint in Peril 1982
3. Muslims of Sri Lanka   Avenues to Antiquity   1984போன்ற ஆங்கில நூல்களை எழுதினார். மேலே கூறிய நூல்களை தனக்கே உரிய அழகான மொழிநடையில், ஆழமான வரலாற்று புலமையில், அகலமான இலக்கிய உணர்வும், ஒருங்கே சேரப்பட்ட சுக்ரியின் எழுத்துக்கள் சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்தரிப்புக்களாக, ஆய்வாளனின் வராலாற்றுப் பொக்கிஷங்களாக இஸ்லாமிய இலக்கியத்திற்கு வளம் சேர்க்கின்றன. இதுவே எனது  மதிப்பீடாகும்.07.வரலாற்று எழுதுகைக்கான பின்புலம் :

கலாநிதி சுக்ரியின் பங்களிப்பில் இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றைத் தொகுப்பதில் மிக மிக பெரிய பங்கு உண்டு, 1984 ம் ஆண்டு நளீமிய்யா இஸ்லாமிய ஆய்வு நிலையத்தில் நடாத்தப்பட்ட  முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான கருத்தரங்கும், செயலமர்வும் இத்துறையில் திட்டமிடப்பட்ட முதல் அய்வு முயற்சியாகும். நளீமிய்யா இஸ்லாமிய ஆய்வு நிலையமும், இனங்கள் பற்றிய கற்கைக்கான சர்வதேச மத்திய நிலையமும் இணைந்த நடாத்திய ஐந்து நாள் செயலமர்வில் இலங்கை தென்கிழக்காசிய முஸ்லீம்களின் வராலாறு, பண்பாடு தொடர்பான இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் பதினெட்டு ஆய்வுக்கட்டுரைகள் இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றோடு தொடர்பானவை. ஏழு கட்டுரைகள் தென்கிழக்காசிய முஸ்லீம்களின் வரலாற்றோடு  தொடர்புடயவை. நளீமிய்யா இஸ்லாமிய ஆய்வு நிலையத்தினால் 1986ம் ஆண்டு “MSLIMS OF SRILANKA AVENUES TO ANTIQUITY”  என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டது. இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றைப்பற்றிய கருத்தரங்கை ஒழுங்கு படுத்துவதில் பல்வேறு வகையில் ஒத்துழைத்து கலாநிதி சுக்ரி முன்னின்று செயற்பட்டார்.
MUSLIMS OF SRILANKA வின் வெளியீடு தொடர்ந்து இலங்கை முஸ்லீம்களின் வரலாற்று ஆய்வு தொடர்பான ஆர்வமும்,ஈடுபாடும் மிக மிக கணிசமான அளவு அதிகரித்தன. பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இலங்கை முஸ்லீம்களின் வரலாறு தொடர்பாக அவரது ஆர்வத்தை தூண்டியவர் பேராசிரியர் எஸ்.அக்தர் இமாம் அவர்களாவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி மாணவனான (கலாநிதி சுக்ரி) அவரின் கீழ்க்கல்வியை மேற்கொண்டிருந்த காலப்பிரிவில் அவர் இலங்கை முஸ்லீம்களின் வரலாறு பற்றிய ஆய்வில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். அவர் அடிக்கடி தனது ஆய்வுகள் பற்றி அவரிடம் குறிப்பிடுவார். இலங்கை பற்றி அல்பலாஸூரி, அல் இத்ரீஸ், அல் மசுஸ்ரீதி, இப்னு பதூதா போன்ற அறபுப் பயணிகள், வரலாற்றாசிரியர்களின் மூல நூல்களை வகுப்பில் வாசித்துக்காட்டுவார் இப்பொருள் பற்றி கலாநிதி சுக்ரி அவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளல் வேண்டும் என அவரைத் தூண்டினார்.
 
1969ம் ஆண்டு அவர் கொழும்பு சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையத்தில் இலங்கை அறாபிய தொடர்புகள் என்ற தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்த சென்றபோது, சுக்ரி அவர்களை பேராதனையிலிருந்து அவரடன் கொழும்புக்கு அழைத்துச்சென்றார். இலங்கை முஸ்லீம்களின் வரலாறு தொடர்பாக இலங்கை வானொலியில் ஒர் தொடர் பேச்சை நிகழ்த்தி இலங்கை முஸ்லீம்களுக்கு அவர்களது வரலாறு பற்றிய பரீச்சயத்தை ஏற்படுத்தல் வேண்டுமென அவருக்கு ஆர்வமூட்டினார். ஆக்காலப்பிரிவில் இலங்கை வானொலி முஸ்லீம் சேவைப்பணிப்பாளராக பணிபுரிந்த மர்ஹூம் கபஸ்ரீர் அவர்கள் வானொலி முஸ்லீம் சேவையில் ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் ஓர் தொடர் பேச்சுக்கு ஏற்பாடு செய்தார். பேராசிரியர் அக்தர் இமாம் அவர்கள் இப்பேச்சுக்கான தகவல்களை, செய்திகளை சுக்ரிக்கு வழங்கினார் இதுவே இலங்கை முஸ்லீம்களின் வரலாறு பற்றிய சுக்ரியின் முதல் பிரவேசமாகும்.
 
1973ம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள எடின் பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பு (PHD)  மாணவனாக இருந்த காலப்பிரிவில் எடின்பரோ பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற தலைப்பில் உரை ஒன்றை ஏற்பாடு செய்தது.  சுக்ரி அவர்களின் கலாநிதிப்பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பிய பின்னர் கொழும்பிலுள்ள சேர் றாஷிக் பரீட் நிறுவனம் (SIR RASIK FAREED FOUNDATION)  ‘இலங்கை முஸ்லீம்களின் வரலாறு பற்றிய சிந்தனைகள்’ (SOME REFLECTION ON THE HISTORY OF MUSLIMS OF SRI LANKA)    என்ற தலைப்பில் சுக்ரியின் ஆய்வுரை ஒன்றுக்கு ஒழுங்கு செய்தது. 1984ம் ஆண்டு ஜாமிஆ இஸ்லாமிய ஆய்வு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கை முஸ்லீம்களின் வரலாறு பற்றிய ஆய்வுக்கருத்தரங்கிற்கு ‘இலங்கை முஸ்லீம்கள் ஒரு பண்பாட்டுக்கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார்.
 
இந்த ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைக்கான ஒரு விமர்சன ரீதியான நீண்ட முன்னுரையுடன் தொகுத்து பதிப்பித்து (MUSLIMS OF SRI LANKA AVENUES TO ANTIQUITY)      என்ற நூல் வெளியிடப்பட்டது.
 
1986ம் ஆண்டு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகமிக சிறப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நாட்டின் மிகப்புலமை பெற்ற வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா இந்நூல் பற்றி மிக சிறப்பான ஆய்வுரை நிகழ்த்தினார். இந்நூல் வெளியிடப்பட்டமை இலங்கை மஸ்லீம்களின் வரலாற்று ஆய்வின் வளர்ச்சியில் ஒர முக்கிய மைல் கல்லாக விளங்கியது. இதனைத்தொடர்ந்து இலங்கை முஸ்லீம்களின் ஆய்வு பற்றி வெளிவந்த நூல்கள் கட்டுரைகளுக்கு முக்கிய மூலாதாரமாக இது விளங்கியது.  இதனைத்தொடர்ந்து முஸ்லீம்களின் வரலாறு, பண்பாடு பற்றியும் பல்வேறு மட்டங்களில் தேசிய சர்வதேச மட்டத்தில் ஆய்வுரைகள் நிகழ்த்தும் வாய்ப்பும், ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் வாய்ப்பும் கலாநிதி சுக்ரிக்கு கிடைத்தது.
 
1990ம் ஆண்டு இலங்கை தொல்பொருள் தினைக்களமும், கலாசார முக்கோண அமைப்பும் இணைந்து ஒழுங்க செய்த ‘பட்டுப்பாதை’ பற்றிய சர்வதேச மாநாட்டில் “CONTACT WITH SRI LANKA”  என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். இம்மாகாநாட்டின் நினைவாக வெளியிடப்பட்ட (SINBAT AND IBNUBATUTA) (SILK ROAD OF THE SEA)  என்ற ஆய்வுச்சஞ்சிகையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ‘அறபு சிலாசனங்கள்’ பற்றியும் (ARABIC  INCRIPTIONS IN SRI LANKA)  என்ற தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை பிரசுரமானது.
 
1999ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர பொன்விழாவின் நிமித்தம் அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் ‘இலங்கை வரலாறு பற்றிய’ ஒரு விரிவுரை தொடரை சுதந்திர ‘பொன்விழா விரிவுரைகள’; (GOLDEN JUBILEE LECTURE) என்ற தலைப்பில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விரிவுரைகள் இலங்கை வரலாற்று ஆரம்பகாலம் முதல் நவீனகாலம் வரை உள்ளடக்கியிருந்தது. இத்தொடரில் (ARABIA AND PERSIA IN SRI LANKAN HISTORY)    என்ற தலைப்பில் கலாநிதி சுக்ரியின் உரை இடம்பெற்றது.
 
இக்காலப்பிரிவில் இலங்கை மஸ்லீம்களின் வரலாறு பற்றிய சர்வதேச ரிதியாக பல்வேறு அமைப்புக்களில் உரை நிகழ்த்தும் வாய்ப்புக்கிடைத்தது. 2001ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் மலேசியாவிலுள்ள இஸ்லாமிய கலைகளுக்கான அரும் பொருட்காட்சிசாலை (ISLAMIC ART MUSEUM)   ‘தென்கிழக்காசியாவில் இஸ்லாம்’ என்ற கருப்பொருளில் துறை சார்ந்த அறிஞர்களை  அழைத்து ஒரு விரிவுரைத்தொடரையும், கண்காட்சியையும் ஏற்பாடு செய்தது. இத்தொடரில் ‘இலங்கையின் இஸ்லாமிய பாரம்பரியம் தென்கிழக்காசியாவுடனான அதன் தொடர்புகள்’; என்ற தலைப்பில் உரை நிகழ்;த்த கலாநிதி சுக்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கண்காட்சியில் அறபுத்தமிழ் நூல்களை உள்ளடக்கிய ஒரு பகுதியும்   ஏற்பாடு செய்யப்பட்டதுடன்   ‘அறபுத்தமிழின் தோற்றமும், வளர்ச்சியும்’ பற்றிய கலாநிதி சுக்ரியின் உரையும் இடம்பெற்றது.
 
2002ம் ஆண்டு பஹ்ரேனில் தாருல் ஈமான் அமைப்பின் அழைப்பின் பேரில் ஒரு விரிவுரை நிகழ்த்த கலாநிதி சுக்ரி சென்றார். அச்சந்தர்ப்பத்தில் பஹ்ரேனிலுள்ள இலங்கையர் சங்கம் (SRILANKAN ASSOCIATION)   இலங்கையின் முஸ்லீம்களின் வரலாறு பற்றிய கலாநிதி சுக்ரியில் உரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. கத்தார் நாட்டிலுள்ள இலங்கை முஸ்லீம்களது அமைப்hனது அவர்களது ஆண்டு விழாவில் இலங்கை முஸ்லீம்களின் வரலாறு பற்றிய ஒரு சிறப்புரை நிகழ்த்த கலாநிதி சுக்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன். என்றால் இலங்கை முஸ்லீம்களின் வரலாறு என்ற கரு எவ்வாறு பல்கலைக்கழக மாணவனாக இருக்கின்ற காலப்பிரிவில் அவருள் மேற்கிளம்பி கருக்கொண்டு கால வளர்ச்சியில் பல பரிமாணங்களைப்பெற்று வியாபித்தது. என்ற ஆவணபதிவாக இங்கு குறிப்பிடுகின்றேன். இப்படியாக இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றை எழுதுகைக்கான பின்புலத்தை சற்று ஊன்டி அழுத்திககூறலாம்;.    கலாநிதி சுக்ரி அவர்களுக்கு அவருடைய வரலாற்றுப்பங்களிப்புக்களுக்காக ‘தேச நேத்ரு’ (1999) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

08.புலமைப் பங்களிப்புக்கள் :

இலங்கை முஸ்லீம்களின் கல்வி மேம்பாட்டுக்காக நளீம் ஹஜியாருடன் இணைந்து இவர் மேற்கொண்ட மற்றொரு பனி இஸ்லாமிய மறு மலர்ச்சி இயக்கத்தை உருவாக்கியமையாகும். அதன் நிருவாக தலைவராக இருந்து இவர் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மறு மலர்ச்சி இயக்கத்தின் விளைவாகத்தோன்றிய இக்ரஃ தொழிநுட்பக்கல்லூரியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார். இன்றும் இக்கல்லூரியின் பொது நிலைப்பொறுப்பாளராக இருந்து வருகின்றார். ஜித்தா இக்ரஃ நலன்புரி நிருவனத்திற்கும், இக்ரஃ தொழிநுட்பக்கல்லூரிக்குமிடையே பாலமாக இருந்து செயற்பட்டவர். கலாநிதி சுக்ரி  எழுதிய ஆங்கில மொழிக்கட்டுரைகள் “The Muslim World League Journal, Islamic Studies,  Journal of the Archaeological Survey Department, An nahdah, Hamdard Islamicus” முதலான சர்வதேச தரமிக்க ஆய்வுச்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.    கலாநிதி சுக்ரி அவர்கள் பல அறிவுப்பயணங்களை மேற்கொண்டார்கள், இலங்கையில் அவர் முஸ்லீம்கள் வாழ்கின்ற அனைத்துப்பிரதேசங்களுக்கும் சென்றார். (இந்தியா, பங்காளதேசம், பாகிஸ்தான், சவஸ்ரீதி அறேபியா, குவைட், கட்டார், ஈரான், எஹிப்து,மலேசியா) அதே போன்று பல முஸ்லீம் நாடுகளுக்கும் சென்றார்,
அவர் சென்ற இடமெல்லாம் பகிரங்க சொற்பொழிவுகள், வானொலி உரைகள், மாநாட்டுப் பேருரைகள், தொடக்க உரைகள், ஆய்வுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல் போன்ற பணிகளை செய்தார்கள். கலாநிதி சுக்ரியின் பயணங்கள் புலமைப் பன்முகப்பாடாக வரலாற்றில் பதிவுசெய்யலாம்.
 
பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிய போதிலும் இலங்கையின் தேசிய கல்வித்துறையின் மேம்பாட்டுக்கான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குகிறார். இந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தினதும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரீகத்தறைகள் இவரது வழிகாட்டல்களையும் பெற்று வருகின்றன. மேலும் நாட்டின் பாடசாலைக்கல்வி வளர்ச்சிக்கும் இவரது பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. பாடசாலைகளில் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகப்பாடத்திட்டங்களை வகுப்பதிலும், பாடநூல்களை எழுதுவதிலும், ஆசிரியர் கைநூல்களைத்தயாரிப்பதிலும் இவர் தனது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்.
 
தேசிய மட்டத்திலான பல அரச, அரசசார்பற்ற நிருவனங்களிலும், அமைப்புக்களிளும், அங்கத்துவம் வகிக்கும் இவர் அவற்றிற்கூடாக தனது நாட்டுக்கான பங்களிப்பையும் செய்து வருகின்றார்.  யுனஸ்கோ நிருவனத்தின் இலங்கைக்கான தேசிய கௌன்ஸில், களனிப்பல்கலைக்கழக கௌன்ஸில், அரச மொழிகளுக்கான கமிஸன், மனித உரிமைக்கமிஸனின் தென் மாகாண கமிட்டி, குற்றத்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் கௌனஸில் போன்ற பல்வேறு அமைப்புக்களில் கடந்த காலங்களில் அங்கத்தவராக இருந்து பணி புரிந்துள்ளார். மேலும் தொல்பொருள் ஆய்வுக்கான பட்டப்பின் படிப்பு நிருவனத்தின் நிருவாக சபை, தேசிய அரும்பொருட்காட்சியகத்தின் ஆலோசனை சபை, நூலக சேவைகள் சபை, இஸ்லாமிய உலகில் பல்கலைக்கழகங்களுக்கான சம்மேளனத்தின் செயற்குழு (Fuiw),  இல்மா சர்வதேச பாடசாலையின் கல்வி ஆலோசனை சபை, இலங்கை தேசிய நூதனசாலை ஆலோசனை சபை போன்ற தேசிய அமைப்புக்களில் தற்போதும் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.
 
கலாநிதி சுக்ரி அவர்கள் பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு கொண்டவர். பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆளுமையினால் இவர் ஆகர்ஷிக்கப்பட்டவர். குறிப்பாக 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னோடிகளாக அமைந்த இமாம் ஹஸனுல் பன்னாவையும், மௌலானா மௌதூதியையும், சஹீத் ஷய்யித் குதுப் போன்றோரையும்,  கலாநிதி சுக்ரி பெரிதும் மதிக்கின்றார். அல்லாமா யுஸ்ரீஸீப் அல்ஹர்ளாவியின் பரந்த அறிவினாலும், பேரறிஞர் அபுல்ஹஸன்அலி நத்வியின் பன்பட்ட ஆன்மீகத்தினாலும், பேராசிரியர் ஹூர்ஸீத் அஹ்மதின் உயர்ந்த ஆளுமையினாலும் ஆகர்ஷிக்கப்பட்டவர் கலாநிதி சுக்ரி அவர்கள்.

சுருங்கக் கூறின் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் பெரும் முதுசம், பெரும் புலமைச்சொத்து கலாநிதி சுக்ரி அவர்கள். நளீம் ஹாஜியார் கலாநிதி சுக்ரியின் பெறுமானத்தை புரிந்து வைத்திருந்தவர். நளீம் ஹாஜியார் கூறினார். ‘கலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும், அவருடைய பாரத்திற்கு தங்கத்தை மறு தட்டிலும், வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் கேட்கப்பட்டால் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன்.’ இதனை அவர் ஏன் கூறினாரென்றால் ஜாமிஆ நளீயாவிலிருந்து கலாநிதி சுக்ரியை விடுவித்து, கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு  பதிலாக கூறினார். ஒர் இஸ்லாமிய வரலாற்றுப்புலமையுள்ள  அறிஞனின் உண்மையான பெறுமானம் இதுவேயாகும்.  இது முஸ்லீம் சமூகத்தின் சிந்தனைக்காக விடப்படுகின்றன.  

 09.பின்னிணைப்புக்கள் :

ஆய்வின் பொருள்                              ஆண்டு
 
1. இக்பால் பற்றிய கண்ணோட்டம் 1978
2. இஸ்லாமிய வரலாற்று தத்துவம் 1979
3. சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய இமாம் ஹஸ்ஸாலி 1979
4. சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய இமாம் ஹஸ்ஸாலி 1979
5. சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய இமாம் ஹஸ்ஸாலி 1980
6. இஸ்லாமிய சிந்தனைக்கு ஷஹ்வலியுல்லா அவர்களின் பங்களிப்பு 1980
7. இஸ்லாமிய சிந்தனைக்கு ஷஹ்வலியுல்லா அவர்களின் பங்களிப்பு 1980
8. இஸ்லாமிய பண்பாடும் நாகரீகமும் 1980
9. இஸ்லாமிய சட்டத்தின் சிறப்பியல்புகள் 1981
10. மருத்துவ துறையின் வளர்ச்சிக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு 1981
11. வரலாறும் மதிப்பீடுகளும் ஷஹ்வலியுல்லா வின் நோக்கு 1981
12. இலக்கியம் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு 1982
13. நூல் அரங்கு 1982
14. அஸ் அரி இயக்கம் 1982
15. ஷியா இயக்கத்தின் கோட்பாடும் வரலாறும் 1983
16. இஸ்லாமிய ஒழுக்கவியல் கோட்பாடு 1983
17. இஸ்லாமிய கல்வித்தத்துவம் 1985
18. அல் குர்ஆனின் மொழி 1986
19. அல் இஸ்ராவும் மிஹ்ராஜூம் ஒரு கண்ணோட்டம் 1987
20. இப்னு தைமியாவின் தசவ்வுப் பற்றிய கோட்பாடு 1987
21. ஹதீஸூம் கீழைத்தேய வாதிகளும் 1989
22. ஹதீஸூம் கீழைத்தேய வாதிகளும் 1989
23. அறிஞர் அஸீஸூம் அவரது ஆய்வு முயற்சிகளும் 1990
24. அறிஞர் அஸீஸூம் அவரது ஆய்வு முயற்சிகளும் 1990
25. இஸ்லாமிய அரசியல் கோட்பாடு 1990
26. இஸ்லாமிய அரசியல் கோட்பாடு 1991
27. இஸ்லாமிய நோக்கில் தொல் பொருளியல் 1991
28. இஸ்லாமிய நோக்கில் தொல் பொருளியல் 1992
29. அபுரைஹான் அல் புரூனி மதங்கள் பற்றிய ஒப்பீட்டாய்வின் முன்னோடி 1992
30. இறையருள் இலக்கியம் அல் குர்ஆன் 1993
31. இக்பாலும், பாரதியும் ஓர் ஒப்பு நோக்கு 1993
32. இஸ்லாமிய நாகரீகம் தேக்கமடைந்து நலிவுற்றதற்கான காரணங்கள் 1994
33. ஆறபிபாஸாவும் இலங்கை முஸ்லீம்களில் அவரது செல்வாக்கும் 1994
34. மத்தியகால அறபு பயணி இப்னு பதூதா 1994
35. மத்தியகால அறபு பயணி இப்னு பதூதா 1995
36. இஸ்லாமும் சுஸ்ரீழலியலும் 1995
37. இஸ்லாமிய பன்பாட்டு வளர்ச்சியில் நூல்களும், நூலகங்களும் 1996
38. இமாம் ஹஸ்ஸாலியின் அறபு நூலின் முன்னுரையின் தமிழாக்கம் 1996
39. முஸ்லிம் பல்கலைக்கழக பாரம்பரியமும் ஐரோப்பியபல்கலைக்கழ
 கங்களின் முன்னோடியாக விளங்கிய இஸ்லாமிய பல்கலை கழகம் 1996
40. அல்ஆமா இக்பால் 1996
41. அல்ஆமா இக்பால் சிந்தனைகள் 1997
42. இறைதூதின் அவசியம் 1997
43. இந்தியாவில் இஸ்லாமிய பன்பாடு 1997
44. இமாம் அபஸ்ரீஹனீபா 1997
45. சட்ட மரபுகளை தோற்றுவித்தோர் 1998
46. முஸ்லிம்களும் வரலாற்று கலையும் 1998
47. முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியமும், இஸ்லாமிய நோக்கும் 1998
48. இஸ்லாமிய நோக்கில் ஆய்வு 1998
49. நாகரீகம் பற்றிய இரு கண்ணோட்டம் 1998
50. பெருமானாரின் பிhhர்த்தனைகள் 1999
51. சூபி தரிகாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் 1999
52. ஜமாலிதீன் ஆப்கானி 1999
53. குர்ஆனிய ஆய்வு முறைமையும், மேற்கத்திய ஆய்வு முறைமையும் 1999
54. அபுல்ஹஸன் அலி நத்வி பன்முக ஆழுமையும் பங்களிப்பும் 2000
55. இஸ்லாமிய அழகியல் கோட்பாடும், மேற்கத்திய அழகியல்
கோட்பாடும் ஒப்பு நோக்கு 2000
56. இலங்கை வரலாற்றில் அறேபியாவும் பாரசீகமும் 2000
57. இலங்கை வரலாற்றில் அறேபியாவும் பாரசீகமும் 2001
58. முஸ்லீம்களின் இpசை கலை பாரம்பரியமும் 2001
59. இஸ்லாம் தோற்றுவித்த அறிவயக்கம் 2001
60. இஸ்லாமிய கட்டட கலை பாரம்பரியமும்  அதன் வரலாற்று வளர்ச்சியும் 2001
61. இஸ்லாமிய கட்டட கலை பாரம்பரியமும்  அதன் வரலாற்று வளர்ச்சியும் 2002
62. மாலிக் பின்நபியின் சிந்தனைகளும், கருத்துக்களும் 2002
63. மாலிக் பின்நபியின் சிந்தனைகளும், கருத்துக்களும் 2002
64. இஸ்லாமிய இந்திய கலாசார பன்பாட்டுத்தொடர்புகள் 2002
65. இஸ்லாமிய கிறேக்க கலாசார பன்பாட்டுத்தொடர்புகள் 2003
66. இப்னு கல்தூனின் வரலாற்று ஆய்வு முறைமை 2003
67. மேற்கத்திய உளவியலும் இஸ்லாமிய ஆத்மீக உளவியலும் 2003
68. இமாம் ஹஸ்ஸாலியின் கல்விச் சிந்தனைகள் 2004
69. மேற்கத்திய தத்து ஞானி டேகாரிடில் இமாம் கஸ்ஸாலியின் செல்வாக்கு 
ஓர் ஒப்பு நோக்கு ஆய்வு 2004
70. இஸ்லாமிய வரலாறு பற்றிய மறு விளக்கத்திற்கான அவசியம் 2004
71. இஸ்லாமிய வரலாறு பற்றிய மறு விளக்கத்திற்கான அவசியம் 2005
72. சமூக மாற்றமும் தனி மனித புனர் நிர்மானமும் மாலிக் பின் நபியின் சில அவதானங்கள் 2005
73. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அறிவுக்கோட்பாடும் தத்துவமும் 2005
74. இக்பாலின் வரலாற்று தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல்  2005
75. உலகமயமாக்களும் அது தொடர்பாக முஸ்லீம் உலகு   எதிர்நோக்கும் அறைகூவலும் 2006
76. இப்னு கல்தூனின் இல்முல் உம்ரான் 2006
77. அல்லாமா இக்பாலின் (1887-1938) மாலிக்பின் நபியின் (1905-1973)  சில சிந்தனை ஒருமைப்பாடுகள் 2007
78. இங்கையில் யுஸ்ரீனானி மருத்துவம்  2007
79. துருக்கிய இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடி பதிஉஸ்ஸமான்   ஸஈத் நூர்ஸி 2008
80. துருக்கிய இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடி பதிஉஸ்ஸமான்   ஸஈத் நூர்ஸி 2008
81. பதிஉஸ்ஸமான்  ஸஈத் நூர்ஸி சிந்தனைகள் 2008
82. பதிஉஸ்ஸமான்  ஸஈத் நூர்ஸி சிந்தனைகள்
83. இஸ்லாமிய மதச்சிந்தனையின் புனர்நிர்மானம் பற்றிய இக்பாலின்    2009  கருத்துக்கள் குறித்து சில அவதானங்கள்
84. இஸ்லாமிய மதச்சிந்தனையின் புனர்நிர்மானம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் குறித்து சில அவதானங்கள்  2009
85. ஜப்பானிய ஆய்வாளர் டொசிகோ இஸூட்ஸூவின் குர்ஆனிய ஆய்வு   முறைமை 2009
86. முஸ்லிம் பௌத்த உரையாடல் பற்றிய ஒரு நோக்கு 2010
87. அல்குர்ஆனின் அறிவியல் பரிமாணம் 2010
88. அல்குர்ஆனின் அறிவியல் பரிமாணம்
89. இப்னு துபைலின் ஹய் இப்னு யக்லான் தத்துவ நாவல் 2011
90. இப்னு துபைலின் ஹய் இப்னு யக்லான் தத்துவ நாவல் 2011
 
10.முடிப்புரை :
 
கலாநிதி சுக்ரி அவர்களை மேற்கூறியவாறு கலாநிதி சுக்ரிஅவர்களின் புலமைப்பன்முகப்பாட்டின் மையங்களாகவே இனங்காணலாம். கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பொன்னையும், பொருளையும், செல்வத்தையும் தரவில்லை. அவர் முஸ்லிம் சமூகத்திற்கு தன்னால் இயன்றவரை புலமைப்பன்முமகப்பாட்டை வழங்கினார். எனலாம். உண்மையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பெரும் புலமைச்சொத்தாக வரலாற்று ஆவணத்தின் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யப்படும். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுத்தாலா தந்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இரண்டு அருட்கொடைகளாக நளீம் ஹாஜியாரும், கலாநிதி சுக்ரியையும் இனங்காணலாம். அல்லாஹ்வுத்தாலா இவர்களுடைய பாவங்களை மண்னிப்பானாக, இவர்களுக்கு இந்த உலகத்தில் வழங்கியதைப்போல மறுமையிலும் வழங்குவானாக. இறiவா கலாநிதி சுக்ரி அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும் வழங்குவாயாக. ஆமீன். அவருடைய அறிவை இன்னும்,இன்னும் விசாலப்படுத்தி, விரிவுபடுத்தி வைப்பாயாக, என்ற பிரார்த்தனையுடன் மனமில்லாமல் பேனையை வைத்தவிட்டு திரும்பிச்செல்கின்றேன். மீண்டும் வருவேன், இன்ஷாஹ் அல்லாஹ் கலாநிதி சுக்ரி அவர்களைப்பற்றி எழுத.  
 
பகுதி ii
 
கலாநிதி சுக்ரியுடனான நேர்கானல்
 
01.வாசிப்பு :
 
கலாநிதி சுக்ரி அவர்களே! முஸ்லிம் சமூகத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துள்ளது எனவே வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுங்கள் என்று கேட்டதற்கு கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு பதிலளிக்கிறார்.
இஸ்லாத்தின் வரலாறு அரபுத் தீபகற்பத்தில் மக்காவிலுள்ள ‘ஹிரா ‘ என்னும் குகையில் எதிரொலித்த ‘இக்ரஃ’ (வாசிப்பீராக) என்ற வார்த்தையோடு ஆரம்பித்தது. நபிகளாருக்கு  அருளப்பட்ட அந்த ஆரம்பத்திருவசனங்கள் ‘கலம்’ என்னும் எழுதுகோல் பற்றிப்பேசியது. மனித இனத்திற்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட  அல் குர்ஆன் ‘கிதாப்’ (நூல்) என அழைக்கப்பட்டது. ‘வாசிப்பு’ ‘எழுதுகோல்’ ‘நூல்’ ஆகிய மூன்று பதங்களும் அறிவோடு தொடர்புடையவை. குர்ஆனின் இந்தத் தூண்டுதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் ஒரு மாபெரும் அறிவியக்கத்தை ஆரம்பித்து வைத்தது. அந்த அறிவியக்கத்தின் ‘எழுதுகோல்’ மிகப்பெரும் சக்தியாக விளங்கியது.
 
எழுதுகோலைப்பயன்படுத்தி அறிவுபெற்ற –அறிவைப்பரப்பிய ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தோன்றினர். இலட்சக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டன, அந்த நூல்களுக்கான புத்தகக் கடைகள் பக்தாத், கொர்டோவே, இஸ்பஹான், ஸமர்க்கந்த் போன்ற இஸ்லாமிய நகரங்களில் தோன்றின. நூல்களை வாங்கி வாசிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் காணப்பட்டார்கள். ஆட்சியாளர்களும் தனி மனிதர்களும் நூல்நிலையங்களை அமைத்தார்கள். ‘எழுதுகோலையும்’ ‘நூல்களையும்’ ‘அறிவையும்’ மையாமாகக் கொண்டு உலகம் வியக்குமளவிற்கான உன்னதமான நாகரீகம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டது.
 
இந்த நாகரீகத்தின் பெருமை பற்றிப்பேசுவது இங்கு நோக்கமன்று. இந்த நாகரீகத்தின் வாரிசுகளான இன்றைய முஸ்லீம்களின் நிலை பற்றிச்சிந்திக்க தூண்டுவதற்காகவே இந்த வரலாறு இங்கு மீட்டப்படுகின்றது.
இன்று பரவலாக நோக்குமிடத்து முஸ்லீம்கள் – படித்தவர்கள், பட்டதாரிகள், மாணவர்களுக்கு அறிவை வழங்கும் ஆசிரியர்கள் உட்பட – வாசிப்பில் அக்கறை அற்றவர்களாக உள்ளார்கள், புத்தகங்களைச் சுமந்த மாணவர்களை வாசிப்பதற்கு தூண்டுகின்ற ஆசிரியர்களைக் காண்பது அரிதாகவுள்ளது. முஸ்லீம் பாடசாலைகளில் நூல்நிலையங்களைக்கொண்ட பாடசாலைகள் மிகக்குறைவாகவே உள்ளன. பாடசாலைகளில் காணப்படும் நூல் நிலையங்களில் உள்ள நூல்கள்கூட வாசிப்பாரற்று தூசியும், புழுதியும் படர்ந்துள்ளன.பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிப்பதில் காட்டப்படும் ஆர்வம், பயனுள்ள – அறிவுபுஸ்ரீர்வமான நூல்களை வாசிப்பதில் காட்டப்படுவதில்லை.
 
இதன் ஒட்டமொத்தமான விளைவு என்ன? சமூகத்தில் சான்றிதழ் பெற்ற பட்டதாரிகள் பெருகிவருகின்றார்கள், ஆனால் சமூகத்தின் சிந்தனைத்தரம் மிகக் கீழான நிலையில் உள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மொழித்தரம் மிகக் குறைவாகவே உள்ளது. அவர்களது அறிவும் பார்வையும் நோக்கும் மிக மேலோட்டமாக உள்ளது. முஸ்லீம்களால் எழுதப்படும் கட்டுரைகளில் பகுப்பாய்வு, விமர்சண நோக்கு என்பன குறைவாகவே உள்ளது. இவை அனைத்துக்கும் மூல காரணம் வாசிப்பின்மையாகும். வாசிப்பு ஒருவனை புஸ்ரீரண மனிதனாக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
 
சமூக மேம்பாட்டிற்கு விரிந்த, ஆழமான.பன்முகப்பட்ட  அறிவு அவசியமாகும். எனவே, முஸ்லிம் சிறுவர்கள் ஆரம்பகாலம் முதலே வாசிப்பதற்குத் தூண்டப்படல் வேண்டும்: நூல்களை நேசிக்கும் பழக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும், வீடுகள் தோறும் சில முக்கிய நூல்கள் உள்ளடக்கிய சிறு நூல் நிலையங்கள் இருத்தல் வேண்டும். என்று கலாநிதி சுக்ரி மிகுந்த ஆழ்ந்த கவலையோடு இந்தக்கருத்துக்களை தெரிவித்தார் வாசிப்பு என்பது ஓர் தொடர்ச்சியான செயற்பாட்டு முறைமையாகும் வாசிக்கும் ஒருவரே கருத்துக்களை உண்டாக்குகிறார் புதிய சொற்தொடர்களைக்கண்ட பிடிக்கிறார்.

ஒரு குருவிடம் சிஷ்;யன் மரணப்படுக்கையில் இருக்கும்போது குருவிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான், அதற்கு வாசிப்பாயாக என்றார் மீண்டும் என்ன செய்ய என்று கேட்டான் அதற்கும் மீண்டும் வாசிப்பாயாக என்றார் மீண்டும் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டான் அதற்கும் வாசிப்பாயாக என்றார் இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் வாசிப்பின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக. இதனை சிந்தனைப்பேழையில் இன்றும் பாதுகாத்து வருகின்றேன்.

02.ஆய்வு :

கலாநிதி சுக்ரி அவர்களே ஆய்வு என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்கள்.  அதற்கு கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்.
 
இலங்கை முஸ்லீம் சமூகம் ஆய்வுப்பணிகளைப் பொறுத்தவரையில் மிகப்பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. முஸ்லிம் சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை , சிறுபான்மைச்சமூகத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் செயற்பாட்டு ரீதியான சன்மார்க்கப்பிரச்சினைகள் பல விடயங்கள் ஆய்வை வேண்டி நிற்கின்றன. ஆனால் இத்துறைகளில் ஆர்வம் செலுத்தி ஆய்வு முயற்சியில் ஈடுபடுவோர் மிகக்குறைவாகவே உள்ளனர். இதற்கு மூல காரணம் முஸ்லிம் சமூகம் ஆய்வின் முக்கியத்துவத்தை இன்னும் உரிய முறையில் உணராமையாகும்.
எனவே இளம் ஆய்வாளர்களுக்கு ஆய்வின் முக்கியத்துவம் வழியுருத்தப்பட்டு அவர்கள் ஆய்வுப்பணிகளில் நெறிப்படுத்தப்படல் வேண்டும் பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஏனைய உயர் கல்வி நிலையங்களிலிருந்தும் பட்டப்படிப்பை முடித்து வெளியேரும் பட்டதாரிகளின் பணி வெருமனே ஒரு தொழிலைப் புரிவதில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது. குறிப்பாக சமூக வியல், வரலாறு, தத்துவம்,உளவியல் போன்ற பாடங்களை சிறப்பு பாடங்களாக கற்றோர் தமது அறிவை சமூக விவகாரங்களில் பயன்னடுத்தி சமூகம் சார்ந்த பல்வேரு விடயங்களில் ஆய்வு முயற்சிகளில் ஈ:படல் வேண்டும்.

எமது நாடு பல்வேறு இனங்கள், சமூகங்கள், மதங்களை உள்ளடக்கிய ஒரு பல்லின நாடாகும். எனவே சமூகங்கள், மதங்களுக்கிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பிற மதங்கள் பற்றிய அறிவு அவசியமானது. மதங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுத்துறை முஸ்லீம்களின் அவதானத்தைப்பெறல் அவசியமாகும், சமகால உலகில் விரிவாகப் பேசப்படும் விடயங்களான அபிவிருத்தி, மனிதவளம், மனிதஉரிமைகள், சுஸ்ரீழல் மாசடைதல். உலகமயமாதல், பெண்ணிலைவாதம், கலாசாரப்பண்மைவாதம் போன்றவை தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். ஆனால் அத்தகைய ஆய்வின் முக்கியத்துவம் உணரப்படாததன் காரணமாக இத்தறையில் ஆர்வம் கொளவோரும் மிகக் குறைவாகவே உள்ளனர். ஆர்வமுடையவர்களுக்கு அத்துறையில் வழிகாட்டலைப்பெரும் வாய்ப்பு மிக குறைவாகவுள்ளது. என்று கலாநிதி சுக்ரி கூறினார். இது ஆய்வாளர்களுக்கான சில சிந்தனைத்துளிகளைத் தூவுகின்றன.

03.கல்வி:

கலாநிதி சுக்ரி அவர்களே! இலங்கை முஸ்லீம் சமூகத்தில் ஆண்களினதும், பெண்களினதும் கல்வி நிலை யாது? என்பதற்கு கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு பதிலளிக்கிறார்.
 
இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் அன்மைக்காலமாக ஒரு விழிப்புணர்வு காணப்படுவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும். பல்கலைக்கழக பிரவேசம், உயர் கல்வித்துறை அனுமதிகளில் பல்வேறு காரணங்களால் முஸ்லீம்கள் கணிசமான அளவு இடம்பெறவில்லை என்ற குறை ஒரு புரம் இருக்க, கல்வித்துறையில் ஆர்வம் ஒரளவு அதிகரித்துள்ளது. என்பது ஒரு  உண்மையாகும். ஆனால் கல்வியில் பெண்கள் காட்டுகின்ற கரிசனையும், அக்கறையும், ஈடுபாடும், ஆண்கள்பால் காணப்படவில்லை உயர்கல்விப்பீடங்களில்  முஸ்லீம் மாணவிகளின் எண்ணிக்கையே மாணவர்களைவிட கூடுதலாகவுள்ளது. பிரத்தியேக வகுப்புக்களிளும் அவர்களே கூடுதலாக ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இதற்கான அடிப்படைக்காரணங்களை நாம் இனங்கானுதல் மிக அவசியமாகும். ஆனால் இது பற்றி அவதானத்துடன் சிந்திக்கும் போது விடயத்தை மிக தெளிவவாக அவதானிக்க முடியும். அதாவது, முஸ்லீம் வாலிபர்கள், இளைஞர்கள் தொலைக்காட்சி, விளையாட்டு, அரட்டையடித்தல், போன்ற விடயங்களில் தங்களின் பெறுமதியாக காலத்தில் பெரும் பகுதியைக்கழிக்கின்றனர். இதனால் அவர்களது கவனம் சிதறடிக்கப்பட்டு காலம் விரயமாகின்றன.
 
கல்வியைக்கற்பதற்கான உற்சாகம், துடிப்பு, ஆர்வத்தை இப்பொழுது போக்குகள் மங்கச்செய்கின்றன. முஸ்லீம் கிராமங்கள், நகரங்களை அவதானிக்கும் போது இளைஞர்கள் கும்பல்,கும்பலாக கூடி கதையளந்து காலத்தை விரயம் செய்வதை நாம் பரவலாகக் காணமுடியும். இந்த நிலையை முஸ்லீம் இளைஞர்கள் பெண்களைவிட கல்வியில் பிண்ணடையச் செய்தது. பொதுவாக ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே கல்வியில் கூடுதலான கவனம் செலுத்துகின்றனர். என பொதுவாக பெற்றோர்கள் கவலைப்பட்டுக்கொள்வதையும் நாம் பரவலாக காண முடியும்.
ஆண்களும், பெண்களும் சமூகத்தின் முக்கிய அங்கத்தவர்களாவர் இந்த இரு சாராரும் சம பலமான வளர்ச்சியே ஆரோக்கியமான குடும்பங்களையும் அதன் அடியாக சமூகக் கட்டுக்கோப்பையும் தோற்றுவிக்கின்றது. ஒரு காலப்பிரிவில் முஸ்லீம் பெண்கள் கல்வியில் பின்தங்கியுள்ளமைபற்றி பேசப்பட்டது. இன்று அந்த நிலைமாறி  ஆண்கள் கல்வியில் பெண்களை விட பின்தங்கிய நிலைபற்றிப் பேசப்படுகின்றது. எனவே இப்பிரச்சினை கல்வித்துறை சார்ந்தோர், சமூக நலன்விரும்பிகள், ஆகியோரின் கவனத்தைப் பெறுதல் வேண்டும். இப்பிரச்சினை பற்றி ஒழுங்கான ஒரு கற்கை மேற்கொள்ளப்பட்டு காரணங்கள் இனங்கானப்பட்டு அதற்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சம பலமற்ற, ஆரோக்கியமற்ற ஒரு சமூக வளர்ச்சியும், பாரதூரமான சமூக விளைவுகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டிய ஒரு துர்;ப்பாக்கிய நிலை ஏற்படும்.
 
04.அரும்பொருட் காட்சிச்சாலை  :
 
கலாநிதி சுக்ரி அவர்களே அரும்பொருட்காட்சிச்சாலையின் முக்கியத்துவத்தை கூறுங்கள்? அதற்கு கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.
 
இலங்கையிலுள்ள தேசிய அரும்பொருட்காட்சிசாலை தேசிய வரலாற்றோடும், பன்பாடு, கலாசாரம், பாரம்பரியங்களோடு தொடர்புடைய கலைப்பொருட்கள் வரலாற்று சின்னங்களை பேனிப்பாதுகாக்கும் ஒரு மத்திய நிலையமாகும். ஆனால் இந்த அரும்பொருட்காட்சிசாலை இந்நாட்டின் பண்மைத்துவ சமூகத்தினை உரிய முறையில் பிரதிபலிக்காமை ஒரு முக்கிய குறையாகவுள்ளது. குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாறு,கலாசாரம், பன்பாட்டைப்பிரதிபலிக்கும் காட்சிப்பொருட்கள் மிகக்குறைவாக இருந்தது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டின் ஒரு முக்கிய சமூகத்தின் இருப்பு பற்றி எந்நவொரு பரீச்சயத்தையும் பெற முடியாத நிலையிலுள்ளது.
 
ஒரு சமூகத்தின் வரலாற்றை ஆவணங்கள், தொல்பொருள்கள் போன்று கலைப்பொருட்களும் பிரதிபலிக்கின்றன. இலங்கை முஸ்லிம்கள் சிறு பான்மைச்சமூகமாக இந்த நாட்டில் பரந்து வாழந்தாலும் அவர்களுக்குரிய பாரம்பரிய உடைகள், பொருட்கள், ஒவ்வொரு பிரதேசத்திலுமு; காணப்பட்டன. ஆனால் இன்று அந்த நிலைமாறி எல்லா சமூகங்களைப்பொருத்தவரையிலும் ஒரு பொதுமைத்துவ பன்பு இவற்றைப்பொறுத்த வரையில் காணப்படுகின்றது.
இலங்கை முஸ்லீம்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள், சன்னஸ் பாத்திரங்கள் போன்ற ஆவணங்கள் அரபுத்தமிழ் நூல்கள் என்பன படிப்படியாக புறக்கணிக்கப்பட்டும், இழக்கப்பட்டும் வருவது மிகவும் கவலை தருவதாகும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பன்பாட்டு ஆய்வு ஆர்வமுள்ள புத்திஜீவிகள், அமைப்புக்கள் இந்த விடயத்தில் ஆர்வம் வெலுத்துதல் வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பன்பாட பாரம்பரியம், வழக்காறுகளுடன் தொடர்புடைய கலைப்பொருட்கள் ஒழுங்கு முறையாக சேகரிக்கப்பட்டு ஆய்வு நடாத்தி வகைப்பாடு செய்யப்படுதல் வேண்டும். தேசிய அரும்பொருட்காட்சிச்சாலையில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அவை காட்சிக்கு வைக்கப்டல் வேண்டும். அது சாத்தியப்படாத நிலையில் இத்துறையில் ஆர்வம் கொண்டோர் முஸ்லிம் சமூகத்திற்கே உரிய ஒரு கலாசார அரும்பொருட்காட்சிசாலையை நிறுவும் முயற்களை மேற்கொள்ளுதல் வேண்டும். இத்துறையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் காலஞ்சென்ற அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் முயற்சியால் ஒரு கலாசார காட்சிக்கூடம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகும்.என்று கலாநிதி சுக்ரி மிகவும் ஆழமாக கூறினார்.

05.யூனானி முறைமை :

கலாநிதி சுக்ரி அவர்களே யுனானி வைத்திய முறைமை பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமாகச் சொல்லுங்கள். கலாநிதி சுக்ரி இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்.
 
இலங்கையின் மருத்துவ பாரம்பரியத்தில் யுஸ்ரீனானி மருத்துவ பாரம்பரியம் ஒரு முக்கியஇடத்தைப் பெருகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு முக்கிய துறையாக உள்ள தேசிய மருத்துவ நிறுவனத்தில் ஒரு முக்கிய அங்கமாக யுஸ்ரீனானி மருத்துவ துறையில் விளங்குகின்றது.
 
இந்நாட்டில் ஆயர்வேத சித்த வைத்திய பாரம்பரியம் போன்ற ஒரு பாரம்பரியத்தைக் கொண்டு யுஸ்ரீனானி மருத்துவ மரபானது அவ்வப்போது சிலரால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. யுஸ்ரீனானி மருத்துவ முறையின் தனித்துவத்தைப்பற்றி சந்தேக வினாக்களை எழுப்புவோரும் இந்நாட்டிலுள்ளனர். இந்த மருத்துவ பாரம்பரியம் முஸ்லீம்களின் வரலாற்றோடு இனைத்துப்பேசப்படுவதை மறுப்போரும் காணப்படுகின்றனர்.
 
யுஸ்ரீனானி வைத்திய முறைமை அதன் வரலாறு, அதன் அறிமுகம், அத்துறையில் முஸ்லிம் மருத்துவர்கள் ஆற்றிய பங்களிப்புப்பற்றி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. யுஸ்ரீனானி மரத்துவம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார முதிசங்களில் ஒன்று என்ற உண்மையும் சரியாக உணரப்படவில்லை. இந்நாட்டில் சிங்கள மன்னன் மருத்துவர்களாக முஸ்லிம்கள் பணி புரிந்துள்ளனர் என்ற சரித்திரமும் சரியாகப்பதியப்படவில்லை.
 
இலங்கையில் யுஸ்ரீனானி  வைத்திய முறைமை கொண்ட பல முஸ்லிம் குடும்பங்கள் குறிப்பாக கேகாலை மாவட்டம், கண்டி மாவட்டம், தெற்கு தென்மேற்குப் பகுதிகளில் உள்ளனர். இக்குடும்பங்களின் பாரம்பரிய வைத்திய முறை பற்றிய கையெழுத்துப்பிரதிகளும் அந்த சிகிச்சை முறையில் பயன்படுத்திய உபகரணங்களும்கூட உள்ளன. சிங்கள அரசர்களுக்கு மருத்துவர்களாகப்பணி புரிந்த முஸ்லிம் மருத்துவர்களின் பணிகளைக் கௌரவித்து சிங்கள மன்னர்களால் வழங்கப்பட்ட ‘ஸன்னஸ்ஸ’ பத்திரங்களும் பல குடும்பங்களில் பாதுகாக்கப்பட்ட நிலையிலுள்ளன. இவற்றில் பல இதுவரை அழிந்துள்ளன.

ஏனைய சமூகங்கள் தங்களது பாரம்பரியங்களை ஒவ்வொரு அம்சத்தையும் பேனிப்பாதுகாக்கிறார்கள் முஸ்லிம் சமூகம் கண்னுறங்கி இப்பாரம்பரியங்களை இழந்தால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக  ஒரு சமூகக்கடமையை நிறைவேற்றாத குற்றத்திற்காக வரலாறு இன்றைய சந்ததியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும். துங்களின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் புரக்கனித்த சமூகங்களுக்கு எதிரான வரலாற்றின் தீர்ப்பு மிகப்பார தூரமானது.  என்று கலாநிதி சுக்ரி விளக்கினார்.

06.கருத்து முரன்பாடு :

கலாநிதி சுக்ரி அவர்களே இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கருத்து முரன்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள்? கலாநிதி சுக்ரி அவர்கள் இவ்வாறு பதிலளிக்கிறார்.
 
இலங்கையில் நடைபெறுகின்ற கருத்து முரன்பாடுகள் அபிப்பிராய பேதங்கள் சில காலமாக மிகப்பரந்த ரீதியில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை மஸ்ஜிதுகள் முதல் பாடசாலைகள் வரை நடைபெற்று வருவது அனைவரும் அறிவர். இக்கருத்து முரண்பாடுகள் சிலபோது பிரிவினை மோதல்களாக மாறி மஸ்ஜிதுகளில் இரத்தம் சிந்தும் நிலைக்கு சென்றுள்ளன. இது ஓர் ஆரோக்கியமற்ற நிலையாகும். சமூக ஒருமைப்பாட்டிற்கு பாதகமாக அமைகின்றன.
 
விவாதம்,தர்க்கம், என்ற நிலையிலிருந்து சமகால உலகம் கருத்துப்பரிமாற்றம் எனும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. எமது சமூகம் இன்னும் அந்த பக்குவமான பன்பாட்டு நிலையை அடைய வில்லை என்பதைக்காட்டுகின்றது.
 
கருத்து முரன்பாடுகள்,அபிப்பிராய பேதங்கள், இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக்கால கட்டங்களிலும் இருந்து வந்துள்ளன. ஒரு விடயம் தொடர்பாக வித்தியாசமான கருத்துக்கள், முரன்பாடுகள் எவ்வாறு முன்வைக்கப்படல் வேண்டும். என்பதையும் அந்த முரன்பாடுகள் மத்தியில் கூட சமூகத்தின் ஒருமைப்பாட்டை பேனிவர முடியும் என்பதை  சலபுஸ்ஸாலிஹீன் எனும் நன்நெறி சார்ந்த சான்றோர்கள் மிக சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளனர். இஸ்லாமிய வரலாற்றில் சில விடயங்கள் அத்துறை சார்ந்த அறிஞர்கள்  மத்தியில் விவாதிக்கப்பட்டுள்ளதே தவிர பொதுமக்கள் மத்தியில் அவை என்றுமே முன்வைக்கப்படவில்லை. அன்று வாழ்ந்த பொதுமக்கள் கூட இது பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இஸ்லாமிய கலாஞானங்கள் பற்றிய எத்தகைய அறிவுப்பின்னனியும் அற்ற சாதாரன பாமரனும் கதீஸ்களையும், இமாம்களையும் விமர்சிக்கும் அளவுக்கு சிலபோது மார்க்கத்தீர்ப்புகள் கூட வழங்கும் அளவுக்கு துணிந்துவிட்டான். அந்த அளவுக்கு சன்மார்க்கத்தின் மகத்துவம் அதன்பாரதூரமான தன்மை முற்றிலும் புறக்கணிக்கப்ட்டு  ஒருவகையில் சொன்னால் இஸ்லாம் என்பது எவரும் எதையும் பேசலாம் என்னும் அளவுக்கு ஒரு சந்தைப்பொருளாகிவிட்டது. இது மிகவும் பயங்கரமான நிலையாகும்.

தர்க்கமும் விவாதமும் மிகைக்கும்போது அதன் முக்கிய விளைவாக தோன்றுவது அதனுடன் தொடர்புடைய ஆண்மீக நோய்களாகும். பெருமை, மமதை. அகங்காரம், தன்னுடன் மரண்படும் சகோதர முஸ்லிம்கள், இழிவாகப்பார்க்கும் தன்மை, தனது கருத்தைச்சார்ந்தோர்களோடு மட்டும் அன்பு பாராட்டி அக்கருத்துக்கு முரண்படும் பிரிவினரே புரக்கணித்தல் விமர்சித்தல் போன்ற இழிவான பன்புகள் அனைத்தும் தோன்ற அடிப்படையாக தர்க்கமும், விவாதமும். அமைகின்றன.

07.சதிகள்

கலாநிதி சுக்ரி அவர்களே! ‘யஹூதி நஸாராக்களின் சதி’ பற்றிய சொல்லாடல் அடிக்கடி பேசப்படுகின்றன. இதன உண்மைத்தன்மையை சற்று விளக்கமாக கூறுங்கள்?  கலாநிதி சுக்ரி இவ்வாறு விளக்குகின்றார்
இன்று குதுபா உரைகளிளும், சொற்பொழிவுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான ‘யஹூதி நஸாராக்களின்’ சதி பற்றி பரவலாக பேசப்படுகின்றது. எமது பலவீனங்கள், பின்னடைவுகள், தேக்கநிலை ஆகிய அனைத்திற்கும் ‘யஹூதி நஸாராக்களின்’ சதியே காரணம் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது. இது உண்மையில் எமது பலவீனங்கள் இயலாமைக்கான காரணங்கள், என்பனவற்றை சுய விசாரனை செய்து அவற்றுக்கான தீர்வுகளைக்கானும் முயற்சியிலிருந்து விடுபட்டு மண்ணுக்குள் தலையைப்புதைத்துக்கொள்ளும் தீக்கோழி மனப்பான்மையாகும். இது எமது அறிவுச்சோம்பலின் ஒரு பாரதூரமான விளைவும் கூட.
 
முஸ்லீம் உலகில் தோன்றியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும், முஸ்லீம் உலகின் பின்னடைவிற்கும், தேக்க நிலைக்கும் காலனித்துவ வாதிகளே காரணமாக அமைந்தன என்ற சிந்தனைப்பாங்கும், கருத்தோற்றமும், அரபு இஸ்லாமிய உலகில் தோன்றிய காலப்பிரிவில் அல்ஜீரிய சிந்தனையாளர் ‘ மாலிக் பின் நபீ ‘ மிகப்புரட்சிகரமான சமூக விமர்சனக்கோட்பாட்டை முஸ்லீம் உலகிற்கு சமர்ப்பித்தார். இதனை அவர் ‘காபிலிய்யா லில் இஸ்திஃமார்’ ‘காலனித்துவத்திற்கு அடிமையாகி பலியாகும் பலவீன நிலையை அடைந்திருத்தல்’ எனக்குறிப்பிடுகிறார். அதாவது, முஸ்லீம் உலகத்தின் பலவீனங்களுக்கும், பின்னடைவிற்கும் காலனித்துவ வாதிகளைக்குறை கூறாது காலனித்துவ வாதிகள் தன்னை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அது எவ்வாறு பலவீனம் அடைந்தது? ஏன் பலவீனமடைந்தது? என முஸ்லீம்கள் தங்களுக்குள் சுய விசாரனை செய்வது மிகப்பயனளிப்பது என முஸ்லீம் சமூகத்தின் அவதானத்தை தமக்குள் செலுத்துவதன் அவசியத்தை அவர் மிகப்பலமாக வலியுறுத்தினார். முஸ்லீம் உலகில் குறிப்பாக புத்தி ஜீவிகள் மத்தியில் மாலிக்பின் நபியின் சமூக விர்சணப்பார்வை மிக ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. இலங்கையில் அன்மைக்காலமாக குதுபா உரைகளிளும், பொதுச்சொற்பொழிவுகளிளும் யஹூதி நஸாராக்களின் சதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது மாலிக்பின் நபியின் இந்த கோட்பாட்டைப்பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு.

இஸ்லாத்திற்கு எதிரான சதிகளும், சுஸ்ரீழ்ச்சிகளும் இன்று, நேற்று ஆரம்பித்தவை அன்று. நபி (ஸல்) அவர்களின் தூதின் ஆரம்பத்திலிருந்தே இதனை இஸ்லாம் எதிர்கொண்டுள்ளது. போலி நபிமார்களின் தோற்றம், இஸ்ராயில்லியத் புரானக்கதைகள், தப்ஸீரில் ஊடுருவல், புனைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள், பாதினீக்களின் சதிகள் ஆகியன முதல் இன்று வரை சங்கிலித்தொடர்போல பல சுஸ்ரீழ்ச்சிகள் இஸ்லாத்தின் தூய்மையை மாசு படுத்தும் வகையில் தோன்றின. இஸ்லாம் அவை அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டது. சமகால உலகிலும் இஸ்லாத்திற்கு எதிரான சதிகள் சுஸ்ரீழ்ச்சிகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை ஆனால் இந்த சுஸ்ரீழ்ச்சிகள், சதிகள்தான் எமது பலவீனத்திற்கும், பின்னடைவிற்கும் காரணம் என கற்பிக்கும் தோல்வி மனப்பான்மையை விடுத்து எமது பலவீனங்கள், பின்னடைவுகள், தோல்விகளுக்கான காரணங்களை சுய விசாரனை செய்து அறிவு ரீதியான, இரானுவ ரீதியான, கலாசாரப்பண்பாட்டு ரீதியான சவால்களை, அரைகூவல்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும், தைரியத்தையும், உளச்சக்தியையும், அறிவுப்பலத்தையும் சமூகத்தின் எல்லா மட்டங்களிளும். குறிப்பாக சமூகத்தின் எதிர்காலத்தை சுமக்கப்போகும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்குதே இன்றைய காலத்தின் தேவையாகும் என கலாநிதி சுக்ரி ஆழமாக, விசாலமாக விளக்கினார்கள்.உசாத்துனைகள்

01. சமூக ஊடாட்டங்கள், இடை உறவுகள் :
1. கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியுடனான நேரடி கள ஆய்வு (முஹம்மட் அஸ்மின்)
2. கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியுடனான தொலைபேசி உரையாடல்கள் (முஹம்மட் அஸ்மின்)
3. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நேரடி ஆலோசனை வழிகாட்டல்கள்
4. பேராசிரியர் சபா ஜெயராசா நேரடி ஆலோசனை வழிகாட்டல்கள்
5. முஹம்மட் சமீம் Pழடவiஉயட ளுநைnஉந (டீயு ர்ழளெ)  (ஆயு)
6. முஹம்மட் றாஸிக்;  Pழடவiஉயட ளுநைnஉந (டீயு ர்ழளெ) (டுடுடீ) யுவவநசநெசல யுவ டுயற
7. சிவ சிதம்பரம் நீலவானன் (ஆ – உழஅ)
8. எச்.எம்.ஹஸ்ஸாலி (புளுழு)
9. எஸ்.எல்.எம்.ஹனீபா
10. ஜிப்ரி ஹஷன்  ளுழஉயைட ளுநைnஉந (டீயு ர்ழளெ)
02.உசாவிய சஞ்சிகை:
1. இஸ்லாமிய சிந்தனை (1யிலிருந்து 126 வரை ஆய்வுக்கு பயன்பட்டது)
03.உசாவிய நூல்கள் :
1. அல்குர்ஆனும் அதன் வரலாறும் வாழ்வு நெறியும் 1981
2. தஃவாவும் நவ யுகத்தின் சவாலும்  (மொழிபெயர்ப்பு) 1982
3. இறைத்தூதர் இன்றேல்  (மொழிபெயர்ப்பு) 1982
4. ஆத்ம ஞானிகளும் அறப்போராட்டங்களும் 1984
5. சிந்தனைப்போக்கில் திருப்பம் ஏற்படுத்திய பேரறிஞர்
 இமாம் கஸ்ஸாலி 1993
6. மதமும் அறிவியலும் 1994
7. நளீம் ஹாஜியார் வாழ்வும் பணியும் 1994
8. இஸ்லாமும் மனித உரிமைகளும் 1995
9. இஸ்லாமிய பன்பாட்டு மத்திய நிலையம் 1997
10. இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள் 1999
11. அல்குர்ஆனும் அதன் வாழ்வியலும் 2007
12. இலங்கை முஸ்லீம்களின் தொன்மைக்கான வரலாற்று பாதை 2010
13. அல்லாமா இக்பால் (அச்சிலுள்ளது)
14. இஸ்லாமும் மேற்கும் (அச்சிலுள்ளது)
15. பேராசிரியர் கார்த்திகேஸூ சிவத்தம்பி நேர்கானல்கள்  2009
16. இலங்கையில் இஸ்லாம் (அறிஞர் அஸீஸ்) 1967
இலக்கம் 1யிலிருந்து 14 வரையான நூல்கள் கலாநிதி சுக்ரி அவர்களினால் எழுதப்பட்டது.
 
* கலாநிதி சுக்ரி புலமை பன்முகப்பாடு ஓர் ஆய்வு – ஸனான் அஸ்மின் அவர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அவரது அனுமதியுடன் இங்கு பிரசுரம் செய்யப்படுகிறது.
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *