அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்

இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்க ஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் குர்ஆனின் மொழியாகப் பரிணமித்து இஸ்லாமிய பண்பாட்டின் வளர்ச்சியோடு இஸ்லாமியக் கலாஞானங்களின் மொழியாக மாறியது. இந்தவகையில் இஸ்லாத்தின் பரவலோடு அதன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலெல்லாம் பரவிய அரபு மொழியானது அப்பகுதிகளில் ஏற்கனவே…

Read More

இஸ்லாத்தில் சமூகநீதி

  ‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில் செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’ சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும் அடிப்படையாக…

Read More

அரபு மொழியும் இஸ்லாமியப் பண்பாடும்

இஸ்லாமிய விசுவாசக் கோட்பாடே இஸ்லாமியப் பண்பாட்டின் மூலாதார அடிப்படையாகக் காணப்படுகின்றது. இப்பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் அனைத்தும் இந்த விசுவாக் கோட்பாட்டோடு தொடர்புற்றே அமைந்துள்ளன. எனவே, இஸ்லாமியப் பண்பாட்டின் அடித்தளமான ‘தௌஹீத்’ என்னும் ஏகத்துவக் கோட்பாட்டினைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இஸ்லாமியப் பண்பாட்டினைப் பொதிந்துள்ள அனைத்து அம்சங்களும் செயல்படுகின்றன. இந்த விசுவாசக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே, முஸ்லிம்கள் அரபுமொழியை இப்பண்பாட்டின்…

Read More

தஸவ்வுப் – அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்தது, ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போன்ற ஏனைய இஸ்லாமிய கலைகள் போன்று இஸ்லாத்தின் நிழலில் உருவாகிய தஸவ்வுப் பலராலும் தவறாகப் புரியப்பட்ட ஒரு கலையாக விளங்குகின்றது. சிலர் தஸவ்வுப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதை ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க…

Read More

இந்து – இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியை நோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதி முட்டிக் கலக்கும் நிலையிற்றான் ஒவ்வொரு பண்பாடும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் பண்பிற்கு வரலாற்றுண்மைக்கு எந்த நாகரிகமும், பண்பாடும் விதிவிலக்காக முடியாது. இந்த வரலாற்று நியதியின்…

Read More

முஸ்லிம் சமூகத்தில் ஆய்வுக்கான அவசியமும் ஆய்வு பற்றிய இஸ்லாமிய நோக்கும்

இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘அபிவிருத்தி’, ‘மனிதவள அபிவிருத்தியே’ ஏனைய எல்லா அபிவிருத்திகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது என்ற கருத்து எல்லா மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. மனிதவள அபிவிருத்தியின் அடிப்படையாக விளங்குவது கல்வியாகும். கல்வியின் மூலமாகவே மனிதவள அபிவிருத்தி சாத்தியமாகின்றது. சமூகத்தில் கல்வியறிவைப் பெற்றசாரார் பலவகையாக உள்ளனர். அவர்கள் பொதுவாக அறிவாளிகள், புத்திஜீவிகள் என அழைக்கப்படுகின்றனர். அறிவாளிகள்,…

Read More

ஷரீஆவைச் செயல்படுத்துவதில் இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

ஷரீஆ என்பது ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டி நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவான அல்லாஹ்வினால் அருளப்பட்ட சட்டமாகும். முஸ்லிம்கள் தங்களது வாழ்வின் அனைத்து செயற்பாடுகளையும் முற்றிலும் அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவர்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், வரையறைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்பதை அல்குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிக…

Read More

இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும்

ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளங்கள், ஏனைய செல்வங்களை விட அதன் மனித வளமே ஒரு சமூகத்தின் நிலைபேறு, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஒரு சமூகத்தின் பௌதீக வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட நிலையில்கூட, எஞ்சியுள்ள அதன் சிறிய மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, அந்த  இழப்பை ஈடுசெய்து ஒரு…

Read More