இனிய நண்பர் கலாநிதி சுக்கிரி மறைந்தார்-பேராசிரியர். சி.மௌனகுரு

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1961 தொடக்கம் 1965 வரை என் ஒரு சாலைமாணாக்கராகவும் நெருக்கமான நண்பராகவும் இருந்த கெழுதகை நண்பர் கலாநிதி சுக்ரி காலமான செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன்சுக்ரி அன்று தமிழிலே ஒரு மிகசிறந்த பேச்சாளன்அவரது தமிழ் எழுத்துகள் அனைவரையும் ஆகர்சித்தனதமிழ் மாணவர் மத்தியில் பிரசித்தமானவர்முதலாம் வருடம் முடிந்ததும் விசேட கற்கை நெறியாக எதனத் தெரிவு செய்வது என்பது முதலாம் வருட மாணாக்கருக்கு ஒரு பெரிய பிரச்சனைநான் தமிழை சிறப்பு பாடமாக எடுத்தேன்.
சுக்ரியையும் வாருங்கள் தமிழ் பயில்வோம் என இழுத்தேன்பேராசிரியர் வித்தியானந்தன் சுக்ரியின் திறமைகளால் ஈர்க்கப்பட்டவர்பேராசிரியர் உவைஸுக்குப் பின்னர் இன்னொருவரை உருவாக்க அவர் எண்ணியிருந்திருக்கக்கூடும்அவர் சுக்க்ரியை தமிழ் சிறப்பு பாடம் பயில வா என இழுத்தார்மறுபுறம் கலாநிதி இமாம் அரபுமொழி பயில வா என இழுத்தார்தமிழ் மொழியா அரபு மொழியாபேராசிரியர் இமாம் வென்றுவிட்டார்.
சுக்ரி விரும்பியிருந்தால் பல்கலைக்ழக விரிவுரையாளராகிசுலபமாக பேராசிரியரும் ஆகி இருக்கலாம்கலாநிதி இமாம் அவரை வென்றது போல நளீம் ஹாஜியாரும் அவரை வென்று விட்டார்பேருவளை நளீமியாவின் பணிப்பாளரானார் சுக்ரிசுக்க்ரியை காணும் போதெல்லாம் நீங்கள் தமிழ் சிறப்பு செய்ய வந்திருந்தால் இருவரும் இன்னும் மூன்று வருடங்கள் அருகருகே இருந்திருப்போம் என நான் கூறுவேன்அவர் பலத்து சிரிப்பார்.
மத பேதம்
இனபேதம்மொழி பேதம்பிரதேசபேதம் கடந்து மனிதனாக வாழ்ந்த அந்த நண்பனின் மறைவு மனதை வருத்துகிறதுஅவரோடு பல்கலைக்கழக கன்ரீனில்பிளேன் ரீ குடித்துக் குடித்துகொண்டேமணிக்கணக்காக தர்க்கித்தஅந்த இனிய நாட்கள் மனதில் நிழலாடுகின்றன.
சென்று வா என் இனிய நண்பனே
