Dr. M. A. M. SHUKRI: A LEGACY TO CHERISH FOREVER – Assoc. Prof. Dr. A.M.M.Mihlar (Naleemi)

      Dr. A.M.M. Mihlar

Marhoom Dr. Shukri (1940-2020) was one of Sri Lanka’s greatest Muslim scholars who exemplified the term multifaceted personality. He possessed comprehensive knowledge of Arabic literature, Philosophy, Religions, History, Research Methodology, Sociology, Tasawwuf, Sciences of Qur’an and Hadith, Contemporary Muslim World and suchlike.

He was one of the few intellectuals in Sri Lanka who scientifically and philosophically explored every topic with its reality, scope, objectives, methods and findings. Therefore, Dr. Shukri’s talks and books on Islam and its teachings attained wide popularity among the scholars and public. Among his well-known books, ‘Muslims of Sri Lanka: Avenues to Antiquity’ takes a prominent place.

He served for 40 years as the Director of Jamiah Naleemiah demonstrating the vision of life to the students, directing them to their future goals, and accentuating the necessity of involving in academic activities such as conferences and seminars in order to meet international standards.

Ancestry of Sri Lankan Muslims, sources of Islamic legislation, comprehensiveness of Islamic traditional texts, balanced theoretical
ideas of classical and modern Muslim intellectuals, the decline of Western ideologies, interfaith dialogue, Research Methodology from
Western perspectives, and the humanistic values of Islamic civilization were the central themes of his research and publications.

Dr. Shukri sincerely and firmly believed that the real threat to the modern world, particularly to the Muslim world, is neither the lack of
material development nor the political upheavals, but rather the decline of knowledge and morality. And he strongly believed that the Islamic
scientific renaissance alone could solve all the problems and eradicate the crises of Muslim and non-Muslim world, and therefore he said that
Muslims should wake up to make a great effort in this regard.

He was a strong critic of radicalism, fanaticism and the meaningless disputes and extremist approach of D’awah movements. And he was
deeply aware that the Muslim minority should adapt to the balanced ways of thinking in the country in which it lives, and advocated the need
of Islamic sciences of Fiqh al-aqalliyyat (The jurisprudence of Muslim minorities), al-Awlawiyyat (Priority) and al-Muwazanat (Justice). He also put great emphasis on peaceful coexistence and religious harmony between Muslims and non-Muslims as early as in the 1980s throughout Sri Lanka.

Although it is hard to fill the void left by him, his academic advices would yield us the much needed guidance to take along in our journeys
towards true reformation of the society. The lessons from his life may enable us, as a society, to devise a balanced and practical approach to
the various issues we face today. The priceless legacy left by him should be cherished forever.

May Allah (SWT) grant him maghfirah, illuminate his grave, and grant him Jannat al-Firdaus. Aameen.

Assoc. Prof. Dr. A.M.M.Mihlar (Naleemi)
Department of ‘Aqidah and Religions,
Faculty of Leadership & Management,
Islamic Science University of Malaysia (USIM)
Malaysia.

—————————————————————————————-

கலாநிதி எம். ஏ. எம் சுக்ரி எனும் அறிவியற் காவியம்

ஆரவாரமில்லா அமைதிப் பணிகள் புரிவதையே நான் விரும்புகிறேன் எனக் கூறி அதற்கு செயல்வடிவம் கொடுத்த அறிவார்த்த ஆத்மா அமைதியாகவே பயணித்து விட்டது. மர்ஹும் கலாநிதி சுக்ரி (1940-2020) பன்முக ஆளுமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்.புத்திஜீவித்துவம் என்பது பல்கலைப்புலமையும் பன்மொழித்தேர்ச்சியும் இணைந்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

அரபு இலக்கியம், தஸவ்வுப், மெய்யியல், மதங்கள், வரலாறு, சமூகவியல், அல் குர்ஆனிய- ஹதீஸ் கலைகள், ஆய்வு முறைமை, தற்கால முஸ்லிம் உலகு போனற இன்னோரன்ன துறைகளில் பாண்டித்தியத்தை வெளிக்காட்டியவர்.

ஆய்வு என்பது நுனிப்புல் மேய்வதல்ல, மாறாக தலைப்புக்களின் ஆழ அகலங்களை முதற்தர மூலாதாரங்களின் (Primary Sources) துணை கொண்டு அறிவியல் பூர்வமாக முன்வைக்கும் ஓர் காத்திர முயற்சி என்பதை மிகத்தெளிவாக விளக்கியதுடன் அதற்கான முன்மாதிரிகளையும் காட்டிச் சென்றவர்.

நடு நிலைச் சிந்தனைப் போக்கை வலியுறுத்திய கலாநிதி சுக்ரி அவர்கள், முஸ்லிம்கள் ஐக்கியமின்றி வாழ்வதையும், த∴வா நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரத் தன்மையுடன் இயக்க வெறி பிடித்தவர்களாக செயற்படுவதையும் விமர்சன நோக்கில் அணுகி, முஸ்லிம் சிறுபாண்மைச் சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆழமாக உணர்த்தினார், பிக்ஹுல் அகல்லியாத், அவ்லவிய்யாத், முவாஸனாத் போனற முஸ்லிம் சிறுபாண்மை சடடக்கலைகளின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியதோடு, இன இணக்கப்பாடு, மத நல்லிணக்கம் குறித்தும் 1980 களிலிருந்தே கருத்துக்களை முன்வைத்த வண்ணமிருந்தார்.

சுமார் 40 வருட காலம் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய கலாநிதி சுக்ரி, தூர நோக்கு, எதிர்கால இலட்சியங்களை மாணவர்களுக்கு எடுத்துக் காட்டி, சர்வதேச தரத்திலான மாநாடுகள், கருத்தரங்குகளில் அவர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம், இஸ்லாமிய சட்ட மரபுகள், இஸ்லாமிய பாரம்பரிய நூல்களின் ஆய்வு விசாலாத்தன்மை அன்றைய, இன்றைய முஸ்லிம் புத்தி ஜீவிகளின் சமச்சீர் தத்துவார்த்த சிந்தனைகள், ஐரோப்பிய சித்தாந்தங்களின் வீழ்ச்சி, கல்வி மறுமலர்ச்சி, மதங்களுக்கிடையிலான கலந்துரையாடல், மேற்குலக அறிஞர்களின் ஆய்வு முறைமைகள், இஸ்லாமிய நாகரிகத்தின் மனித நேயப் பெறுமானங்கள் போன்றவை கலாநிதி அவர்களின் ஆய்வுக் கருவூலங்களாக அமைந்திருந்தன.

மர்ஹும் கலாநிதி சுக்ரி அவர்களின் காத்திரமானஅறிவியல் பங்களிப்புக்களும் சமூக மறுமலர்ச்சி சிந்தனைகளும் காலத்தால் அழியாத காவியமாக நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வல்லோன் அல்லாஹ் அன்னாரின் நற்செயல்களையும் சமூகப்பணிகளையும் பொருந்திக்கொண்டு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸில் அவரை நுழைவிப்பானாக!
ஆமீன்.

———————————————————————-

இணைப்பேராசிரியர். கலாநிதி. ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி),
அகீதா மற்றும் மத ஆய்வுத்துறை,
தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பீடம்,
இஸ்லாமியக் கலைகளுக்கான மலேஷியப் பல்கலைக்கழகம் (USIM)
மலேஷியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *