சமூக மாற்றமும் தனிமனித புனர் நிர்மானமும்- மாலிக் பின் நபியின் சில அவதானங்கள்

மனித சிந்தனையிலும், நாகரிகதத்திலும் ஐரோப்பிய சிந்தனை ஏற்படுத்திய எதிர்‌மறையான விளைவுகள் வரலாற்றில்‌ ஏற்படுத்திய தாக்கங்கள் மிகப் பாரதூரமானவையாகும். இந்தப் பாதகமான விளைவுகள் குறித்து மாலிக் பின் நபி பகுப்பாய்வு செய்து அவரது “விஜ்ஹதுல் ஆலமுல் இஸ்லாமி பீ மஹப்பில் மஃரக்””அல் ஆபாகுல் ஜஸாயிரிய்யா” போன்ற நூல்களில் மிக விரிவாக விளக்கியுள்ளார். அவரது கண்ணோட்டத்தில், இத்தகைய பாதகமான…

Read More

இக்பாலின் வரலாற்றுத் தத்துவம் பற்றிய ஒரு கருத்தாடல்  

  அல்லாமா முஹம்மது இக்பால் பன்முக ஆளுமை படைத்தவர். அவர் ஒரு மகாகவி் தத்துவஞானி் சிந்தனையாளர்‌ ஆழமான நோக்குப் படைத்த – பகுப்பாய்வு உள்ளம் கொண்ட ஒரு சிந்தனையாளர். எனவே, சமூகம்- அதன் இயக்கம், மாற்றங்கள் என்பன அவரது ஆய்வின் களமாக விளங்கியமை வியப்புக்குரியதன்று. இந்த வகையிலேயே  வரலாற்று விளக்கம், வரலாற்றுத் தத்துவம் ஆகியன அவரது…

Read More

மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு

இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலி வகிக்கும் மிக முக்கிய இடத்தைப் போன்றே மேற்கத்திய சிந்தனையில் டேகார்ட் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றார். இருவரும் அவர்களது காலப்பிரிவில் சிந்தனைப் போக்கில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலியின் ஆளுமைச் செல்வாக்கைப் பேரறிஞர் ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி…

Read More

 இஸ்லாமிய மதச் சிந்தனையின் புனர்நிர்மாணம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் குறித்து சில அவதானங்கள்

மனித இனத்தின் வழிகாட்டுதலுக்கான இறைவனின் இறுதி வேதம் என்ற வகையில், அந்த வேதத்தின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட முஸ்லிம் சமூகம், வாழ்க்கையின் நித்தியமானவை – மாற்றத்திற்கு உட்பட்டவை எனும் இரண்டிற்குமிடையில் ஒருமைப்பாடு காணுதல் அவசியமாகிறது. ஏனெனில் பிரபஞ்சம் இயக்கமற்றது என்ற பழைய கோட்பாட்டை- நாம் ஏலவே நோக்கியவாறு – இஸ்லாம் நிராகரிக்கின்றது. வளர்ச்சியும், மாற்றமும் மனித…

Read More

முஸ்லிம்- பௌத்தம் உரையாடல் பற்றி ஒரு நோக்கு

இன்று பரவலாக உலகில் அனைத்துப் பகுதிகளிலும்‌ நடைபெற்று வருகின்ற வன்முறை, இன மோதல்கள், மதங்களின் பெயரால் நடைபெறும் இரத்தம் சிந்தல் என்பன சமுதாயங்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அறைகூவலாக அமைந்து சமூகங்களின் உறுதியான கட்டுக்கோப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிலை தோன்றியுள்ளது. ஸாமுவேல் ஹன்டிங்டனின் நாகரிகங்களுக்கு இடையிலான மோதல் பற்றிய எதிர்வுகூறல், உலகில் சமாதானத்தையும், நல்லுறவையும் விரும்பும்…

Read More

மேற்கத்திய உளவியலின் பரிமாணங்களும் முஸ்லிம்களின் பங்களிப்பும்

உளவியல் என்பது மனிதன் தன்னைப் பற்றி விளங்குவதற்கு மேற்கொண்ட ஆர்வம், தேடல் முயற்சியின் விளைவாகத் தோன்றிய ஒரு கலையாகும். அதன் வரலாற்று வளர்ச்சியில் பல படித்தரங்களைக் கடந்து அதன் நவீன அமைப்பைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனின் ‘ஆத்மா’(Soul) பற்றிய விசாரணையோடு உளவியல் தோற்றம் பெற்றது. அதற்குச் சில காலத்தின் பின்னர் உள்ளம்…

Read More

துருக்கிய இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடி பதீஉஸ்ஸமான் ஸஇத் நூர்ஸி

பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி நவீன இஸ்லாமிய மறுமலர்ச்சியின் முக்கிமான முன்னோடிகளில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றார். துருக்கியில் மதச் சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பி, மேற்கத்திய ஆதிக்கத்திற்கும் சிந்தனைக்கும் எதிராகப் போராடி, துருக்கியில் இஸ்லாமிய எழுச்சிக்கு அடித்தளமிட்டவராக அவர் விளங்குகின்றார். ஸஈத் நூர்ஸி துருக்கியில் “நூர்ஸ்” எனும் கிராமத்தில் கி.பி. 1877ம் வருடம் ஒரு பக்தி சிரத்தை…

Read More

அல்குர்ஆனின் அறிவியல் பரிமானம்

மனித சிந்தனையின் படிமுறையான வளர்ச்சியை நாம் நோக்கும்போது ஒவ்வொரு காலப் பிரிவிலும், அதனை நெறிப்படுத்துவதில் அவ்வக் காலப் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய தத்துவங்கள், கருத்துகள், அறிவு மரபுகள் முக்கிய பங்கை வகித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில், எமது சமகாலப் பிரிவில் அறிவியலின் தாக்கம் மனிதனின் சிந்தனையிலும் உளப்பாங்கிலும் கண்ணோட் டத்திலும், சுருங்கக்கூறின், வாழ்வின் எல்லாத்…

Read More

புனர் நிர்மாணம் பற்றிய இக்பாலின் கருத்துக்கள் சில அவதானங்கள்

சமூக மாற்றம் என்பது சமூக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். அது சமூக பரிணாமத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும். இஸ்லாம் மனித சமூகத்தின் நேர்வழிக்கான இறுதி வழிகாட்டுதலைப் பொதிந்த ஒரு மார்க்கம் என்ற வகையில் சமூக வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் அங்கீகரிக்கின்றது. சமூக வளர்ச்சி, மாற்றத்திற்கேற்ப தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சமூக மாற்றத்…

Read More

இமாம் கஸ்ஸாலி (றஹ்) யின் சமூக விமர்சனப் பார்வை

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தி னடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய…

Read More